'நியூ இயர்'னு சொன்னா நமக்கு முதல்ல ஞாபகம் வர்றது கமல்ஹாசன் கலர் சொக்கா போட்டுகிட்டு சோக்கா பாட்டு பாடிட்டு வரும் 'ஹாப்பி நியூ இயர்…' பாட்டும், 'நமக்கு நாமே' திட்டமும் தாங்க. நமக்கு நாமேனு சொன்னதும் வேறெதையோ நினைச்சுக்காதீங்க. இதுக்கு அர்த்தம்,  இந்த வருஷமாவது உருப்படியா? ஏதாவது செய்யணும் மனசுக்குள்ள பிளான் பண்ணும் புது வருட தீர்மானம் (நியூ இயர் ரெசல்யூஷன்).

நம்மிடம் இருக்கும் சின்ன தவறுகளையும், சறுக்கல்களையும் தூசி தட்டி சரி செய்யவே ரெசல்யூஷன் எடுக்கிறோம். நீங்கள் முதலில் எந்தெந்த இடங்களில் என்னென்ன தவறு செய்யறீங்க என்பதை நீங்களே உணர்ந்து, உங்களை செக் செய்யவே இந்த செக் லிஸ்ட்.

ஒவ்வொரு கேள்விக்கும் ஆம், இல்லை என  நீங்கள் அளிக்கும் பதில்களை வைத்து உங்களைச் சரிசெய்துக்கொள்ள, பாராட்டிக்கொள்ள, சின்னத் தூண்டு சக்தியாக இது இருக்கலாம். நியூ இயர் ரெசல்யூஷன் எடுங்க…. கிறிஸ்துமஸையும், நியூ இயரையும் கொண்டாடுங்க. 

உங்களை பற்றி : 

 • உங்களை நீங்களே மிகவும் நேசிப்பவரா? 
 • அதிகாலையில் எழுபவரா? 
 • தினமும் உடற்பயிற்சி செய்கிறீர்களா?
 • அதிகமாக கோபம் படுவீர்களா?
 • பிறரிடம் உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளத் தயங்குபவரா?
 • தினமும் குறிப்பிட்ட நேரத்தில், தேவையான அளவு தூங்குவீர்களா?
 • தினமும் மூன்று வேளையும் நேரம் தவறாமல் உணவு உண்பவரா?
 • உங்களிடம் வங்கிக்கணக்கில் அல்லது பர்ஸில் எவ்வளவு பணம் உள்ளது என்பதைச் சொல்ல முடியுமா?
 • புகையிலை, மது போன்ற கெட்ட பழக்கங்கள் உடையவரா?
 • நீங்கள் தினமும் என்ன செலவு செய்கிறீங்கள் என்பதை குறித்து வைக்கும் பழக்கம் உடையவரா?
 • வாசிப்பு பழக்கம் உடையவரா? 
 • எதிர்கால இலக்குவைத்து உழைப்பவரா? 
 • அணியும் உடையின் மீது கவனம் செலுத்துபவரா?
 • துவைக்காமல் ஒரே உடையை மாற்றி மாற்றி அணிபவரா?
 • எதையும் முன்னரே திட்டமிட்டு செயல்படுத்துபவரா? 
 • பிறருக்கு கஷ்டம் என்றால் உடனே உதவுவீர்களா?
 • ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் போன்ற சமூக வளைதலங்களில் அதிக நேரம் செலவிடுபவரா?
 • மற்றவர்கள் உங்களிடம் சொல்லும் கருத்தை கேட்பவரா?
 • நண்பர்களை சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவரா?
 • பெரியவர்களாக இருந்தாலும் சிறியவர்களாக இருந்தாலும் அவர்கள் உங்களிடம் சொல்லும் கருத்தை கேட்பவரா? 

 

வேலை சார்ந்த கேள்விகள் : 

 • நீங்கள் செய்யும் வேலை உங்களுக்கு பிடித்துள்ளதா?
 • உங்களது வேலை சார்ந்த திறமைகளை வளர்த்துக்கொள்ள முயற்சி எடுக்கிறீர்களா?
 • சரியான நேரத்தில் அலுவலகம் செல்பவரா?
 • அலுவலகத்தில் சொன்ன வேலையைச் செய்ய முடியாவிட்டால் என்ன காரணம் சொல்லலாம் என யோசிப்பவரா?
 • நீங்கள் உங்களுக்காக வேலைசெய்யாமல் மேலதிகாரியின் கவனம் ஈர்ப்பதற்காக வேலை செய்பவரா?
 • உங்கள் வேலையை அலுவலக நேரத்துக்குள் முடிப்பீர்களா?
 • கொடுத்த வேலைகளை பலமுறை நினைவூட்டினால்தான் முடிப்பீர்களா?
 • அலுவலகத்தில் உங்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கிறதா?
 • நீங்கள் அலுவலக வேலை நேரத்தையும் தாண்டி அலுவலகத்தில் இருப்பவரா? 
 • அலுவலக நேரத்தில் ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைதளங்களில் இயங்குபவரா?

 

குடும்பம்:

 • உங்கள் குடும்பத்துக்கு அன்றாட நேரம் ஒதுக்குகிறீர்களா?
 • உங்கள் குடும்ப வரலாறு தெரியுமா… தாத்தா, பாட்டி வாழ்க்கையைப் பற்றி அறிந்துவைத்துள்ளீர்களா?
 • உங்கள் வீடு சுத்தமாக இருக்குமா?
 • குடும்பத்துடன் வருடம் ஒருமுறையாவது சுற்றுலா செல்கிறீர்களா?
 • குடும்ப வரவு/செலவு கணக்கை, பிற குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து பேசுவீர்களா? 
 • வீட்டில் உள்ள பெரியவர்கள் ஆலோசனை சொன்னால் கேட்பீர்களா?
 • வீட்டுக்கு எப்போது வருவீர்கள், எங்கே செல்கிறீர்கள் போன்ற தகவல்களை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்வீர்களா?
 • கல்யாணம் ஆனவர் எனில் மகன்/மகள் முன் சண்டை போடுவீர்களா? 
 • உங்கள் பிள்ளைகள்/பெற்றோர்கள் எதிர்காலத்துக்கு என தனியாகச் சேமித்து வருகிறீர்களா?
 • உங்களைக் கண்டால் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் பயப்படுகிறார்களா? 
   

நியூ இயர் ரெசல்யூஷன் எடுங்க… 2017-ல் பட்டைய கிளப்புங்க…..

– கார்க்கி பவா, நா.சிபிச்சக்கரவர்த்தி

நன்றி: விகடன்