விண்டோஸ் 98 பாவிப்பவர்களுக்கு ஏற்படும் சில குழம்பிய எழுத்துருக்களை எப்படி நிவர்த்தி செய்யலாம்?
நீங்கள் விண்டோஸ் 98, NT போன்ற இயங்கு தளங்களில் எக்ஸ்புளோரர் 5.0 ஐப் பயன்படுத்துபவராக இருந்தால், தமிழ் எழுத்துக்கள் கீழே உள்ள உதாரணப்படத்தில் உள்ளவாறு புரியாத சில குழம்பிய வடிவத்தில் காணப்படலாம்.
அவ்வாறாயின், நீங்கள் கணினியில் கோப்புக்களைக் கையாள்வதில் அனுபவப்பட்டவராக இருப்பின் உங்கள் கணினியில் C:\\windows\system\ ல் இருக்கும் usp10.dll (hidden file) கோப்பை பெயர் மற்றிவிட்டு (rename) பின்னர் அதனுடைய பிந்திய பதிப்பை அங்கு இட்டுக்கொள்வதன் மூலம் இதனை நிவர்த்தி செய்துகொள்ள முடியும்.


