திரு. ஜெயதீபன் (சூரியன்.காம்) அவர்களின் கருத்து

எம் முன்னால் உள்ள தரக் குறியீடுகளில் நியமமாக ஏற்றுக் கொள்ளக் கூடிய பண்புகளை கூடியளவில் கொண்டது யுனிகோடே . இதை நியமமாக்குவதும் நியமமாக்காதுவிடுவதும் பயனாளர்களின் கைகளில் உள்ளது.
கூடியளவான பயனாளர்கள் இன்று இயங்கு தள ரீதியாக இயலுமைப்படுத்தப்பட்ட தமிழை – தமிழ் யுனிகோட்டை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
இது ஓர் நல்ல அறிகுறி.
தக்கன பிழைத்தலும் தகாதன அழிதலும் வழுவன கால மரபினானே என்பதற்கமைய யுனிகோடே நியம தமிழ் குறியீடாக விளங்கும் என்பது எனது பணிவான தனிப்பட்ட கருத்து.

இப்பதிவு பற்றிய உங்கள் அபிப்பிராயங்களை “உங்கள் கருத்துக்கள்” பகுதியில் பதிவு செய்யுங்கள்!