தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு

 

என்.எச்.எம் எழுதி  (NHM Writer)
ஒருங்குறித்தமிழை உள்ளீடு செய்ய இன்னுமொரு சிறிய செயலி. மேலும் விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள்.

என்.எச்.எம் எழுத்துருமாற்றி (NHM Online Converter)
Unicode, Diacritic, TSCII, TAB, TAM, Bamini, Softview  போன்ற எழுத்து குறியீட்டு முறைகளில் ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கு எழுத்துக்களை மாற்றும் வசதியைக்கொண்டிருக்கின்றது.

எழில்நிலா வலைத்தள யுனிகோட் தமிழ் தட்டெழுதி.
வலைத்தளத்திலிருந்தவாறே ஒருங்குறியில் (யுனிகோட்) தமிழ் தட்டெழுதுவதற்கான ஒரு செயலி.

'அழகி' தமிழ் மென்பொருள்
தனித்துவம் வாய்ந்த ஒரு பன்முகப் பயன்பாட்டு மென்பொருள். விண்டோஸின் அனைத்து செயலிகளிலும் நேரடியாகவே தட்டச்சு செய்ய வல்லது – யூனிகோட், திஸ்கி இரண்டிலும் – ஒலியியல், தமிழ்நெட் 99,  தமிழ்' தட்டச்சு என்ற மூன்று விசைப்பலகை முறைகளிலும். உலகின் முதலாம் 'இரு திரை' ஒலிபெயர்ப்பு கருவி கொண்டது.

திஸ்கியிலிருந்து யூனிகோடிற்கு மாற்ற bulk Unicode converter (ஒரே நேரத்தில் பல நூறு திஸ்கி கோப்புகளை மாற்றும்) வசதி கொண்டது. திஸ்கி to தாப் உரை எழுத்துரு மாற்றமும் கொண்டது. திஸ்கி / யூனிகோட் இவை இரண்டிலுமே வலைப்பக்கங்கள் அமைக்க டைனமிக் ஃபான்ட் கொண்டது. விரிவான யூனிகோட் உதவிக் கோப்புகளை உள்ளடக்கியது.

கூகிள் தமிழ் யுனிகோட் எழுதி
தமிழ் மட்டுமன்றி இன்னும் பல இண்டிக் மொழிகளில் தட்டெழுதக்கூடிய ஒரு தளம்.