முற்றிலும் மாறுபட்ட இயக்கத்துடன் வந்திருக்கும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம், பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்படுத்துவோரிடையே கொஞ்சம் கொஞ்சமாக இடம் பெற்று வருகிறது. விண்டோஸ் 7 சிஸ்டமே போதும் என ஒதுங்கியவர்களும், இதன் பயன்பாடுகளில் பலவற்றை விரும்பி, முழுமையாக இதற்கு மாறி வருகின்றனர். பலர், விண்டோஸ் 8 சிஸ்டம் குறித்து முழுமையாக அறிந்த பின்னரே, அதற்கு மாறுவது குறித்துச் சிந்திக்க வேண்டும் என எண்ணி செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கான சில தகவல் துளிகள் இங்கு தரப்படுகின்றன.
கணினிக்கட்டுரைகள்
கணினி பற்றிய பல தகவற்கட்டுரைகளை இங்கு தொகுத்து வழங்கியுள்ளேன். இக்கட்டுரைகளை வழங்கிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.
இக்கட்டுரைகள் உங்களுக்கு நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும் என நம்புகின்றேன்.
மின்னஞ்சல் பயன்பாட்டில் ஜிமெயில் அக்கவுண்ட் முதல் இடத்தில் உள்ளது. மின் அஞ்சல் வசதியை அடிக்கடி பயன் படுத்தாதவர்களும், எதற்கும் இருக் கட்டுமே என்று ஒரு ஜிமெயில் அக்கவுண்ட்டை வைத்திருப்பார் கள்.
ஜிமெயில் தளத்தில் இப்போது புதியதொரு வசதி கிடைக்கிறது. இது ‘Last account activity’ என அழைக்கப் படுகிறது. இந்த வசதியை இயக்கிவிட்டால், உங்கள் ஜிமெயில் தளத்தை கடைசியாக யாரெல்லாம் அணுகிப் பார்த்தார்கள் என்ற பட்டியல் காட்டப்படுகிறது. கம்ப்யூட்டரில் பிரவுசர் வழியாகவோ, பி.ஓ.பி. மெயில் கிளையண்ட் வழியாகவோ அல்லது மொபைல் போன் மூலமோ, எந்த வகையில் உங்கள் ஜிமெயில் பார்க்கப் பட்டிருந்தாலும், அதனை இந்த வசதி பட்டியலிடுகிறது. எந்த ஐ.பி. முகவரியிலிருந்து இது பார்க்கப்பட்டது என்று காட்டுகிறது.
21ஆம் நூற்றாண்டின் இரண்டாவது தசாப்தம் ஆரம்பித்துள்ள நிலையில் இணையக் கலைக்களஞ்சியமாக விளங்கும் விக்கிப்பீடியாக உலகளாவிய ரீதியில் 278 மொழிகளில் சுமார் 1 கோடி 76 இலட்சம் தகவல்களை தன்னகத்தே கொண்டு இணைய வசதியுள்ளவர்களால் நினைத்த நேரத்தில் தேவைப்படும் விடயங்களை இலகுவாகவும், இலவசமாகவும் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பினை வழங்கி வருகின்றது.
கம்ப்யூட்டர் பயன்பாட்டில் முற்றிலும் புதிய ஒரு திருப்பத்தை ஏற்படுத்தக் கூடிய திறன் கொண்ட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கூகுள் “குரோம் “ என்ற பெயரில் சென்ற நவம்பர் 19ல் வெளியிட்டது. இதன் சோர்ஸ் கோட் எனப்படும் கட்டமைப்பு வரிகளை தன்னுடைய இணைய தளத்தில் கூகுள் வெளியிட்டுள்ளது. பொது மக்கள் பயன்பாட்டிற்கு இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் கிடைக்க இன்னும் ஓர் ஆண்டு ஆகலாம்.
மிகப் பெரிய அளவிலான தொழில் நுட்ப மாற்றங்களுடன் சென்ற அக்டோபர் 22 அன்று, மைக்ரோசாப்ட் உலக நாடுகள் அனைத்திலும் தன் புதிய விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. புதிய வசதிகள், தொழில் நுட்ப மாற்றங்கள் ஆகியவற்றினால், இதன் வெளியீடு ஏறத்தாழ 18 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்டது. டில்லியில் இதனைத் தன் சிஸ்டம் கூட்டாளிகளான எச்.சி.எல்., எச்.பி. மற்றும் ஏசர் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து இந்த பதிப்பை மைக்ரோசாப்ட் வெளியிட்டது. புதிய வசதிகளாக வேடிக்கை அம்சங்கள், எளிமையான இயக்கம் மற்றும் இதுவரை இல்லாத வகையில் கூடுதல் பாதுகாப்பு எனப் பல முனைகளில் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் அமைக்கப் பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் இந்தியா பிரிவின் தலைவர் அறிவித்துள்ளார்.
இண்டெர்நெட்டை பொருத்தவரை மூன்றுவிதமான தலைமுறை இருகின்றன தெரியுமா?
முதல் தலைமுறை இண்டெர்நெட்டோடு பிறந்து இணைய சூழலில் வளரும் டிஜிட்டல் தலைமுறை. இரண்டாவது தலைமுறை இண்டெர்நெட்டின் வளர்ச்சியை பார்த்து அதனோடு பரிட்சயம் செய்து கொண்ட தலைமுறை. 30 வயதுக்கு மேற்பட்டவர்களை இந்த தலைமுறையில் தான் சேர்க்க வேண்டும்.
இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள், குறிப்பாக பிளாக்குகள் அமைப்பவர்களிடையே, பயர்பாக்ஸ் பிரவுசர் தொகுப்பு மிக வேகமாக பிரபலமாகி வருகிறது. நம் விருப்பங்களுக்கு ஏற்றபடி அமைத்துக் கொள்ளக் கூடிய வசதி, பயன்படுத்த எளிமையான இன்டர்பேஸ், நம்பிக்கை தரும் இயக்க தன்மை ஆகிய இதன் சிறப்புகளே, பலரை இன்டர்நெட் எக்ஸ்புளோரரை விட்டு இதனைப் பயன்படுத்தத் தூண்டுகின்றன. அனைத்து இன்டர்நெட் பிரவுசர்களும் கட்டாயம் பாதுகாக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் உள்ளன.
உலக அளவில் இணைக்கப்பட்ட பல கம்ப்யூட்டர்களை நாம் இன்டர்நெட் என அழைக்கிறோம். ஆனால் இமைப்பொழுதில் எப்படி எங்கோ ஒரு மூலையில் உள்ள கம்ப்யூட்டர் சர்வரில் உள்ள தகவல்கள் நம் கம்ப்யூட்டரை வந்தடைகின்றன? இன்டர்நெட்டை முதலில் பயன்படுத்தும் அனைவரின் மனதிலும் இந்த சந்தேகம், வியப்பு எழுவது இயற்கையே. ஒரு சிலர் மேலும் துருவி ஆய்வு செய்து, நூல்களைப் படித்துத் தெரிந்து கொள்கின்றனர். சிலரோ அதுதான் இன்டர்நெட் என்று கிடைக்கும் தகவல்களைப் பற்றிய சுவராஸ்யத்தில் ஆழ்ந்து விடுகின்றனர்.
இன்றைய மனித இனத்தின் சிந்தனைப் போக்கை மாற்றியதில் இன்டர்நெட்டுக்கு முக்கிய பங்கு உண்டு என்றால் அது மிகையாகாது. தகவல் பரிமாற்றம், உருவாக்கி சேமித்தல் என்ற இரு பரிமாணங்களில் தினந்தோறும் புதிய மாற்றங்களைத் தந்து வரும் இந்த இன்றியமையாத சாதனம் உலகிற்கு வந்து 40 ஆண்டுகள் ஆகின்றன. இது உருவாகிக் கடந்து வந்த பாதையில் முக்கிய மாற்றங்கள் தந்த சில திருப்பங்களை இங்கு காணலாம்.
இமெயில்கள் வழியாகப் பணம் பறிக்க மொத்தமாக அனுப்பப்படும் மெயில்கள் குறித்துப் பல முறை தகவல்களைத் தந்துள்ளோம். சென்ற வாரம் தகவல் தொடர்பு குற்றங்களைக் கண்காணிக்கும் சென்னை சைபர் கிரைம் செல் அலுவலகத்திலிருந்து வந்த ஒரு கடிதம், இன்னும் இது போல பலர் ஏமாற்றமடைவதை உறுதிப் படுத்தியுள்ளது. ஏமாறும் பலரில், விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரே காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர். தாங்கள் ஏமாந்தது தெரிந்தால் தங்களுக்கு அவமானம் என்று கருதி பலர் வெளியே சொல்லாமலே இருந்துவிடுகின்றனர்.
விண்டோஸ் எக்ஸ்பியின் தீவிர ரசிகர்களை இணைத்தால் ஒரு நாடே உருவாக்கலாம். அந்த அளவிற்கு எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றே போதும் என இருப்பவர்கள் கோடிக்கணக்கானோர். அதனாலேயே விண்டோஸ் விஸ்டா, எக்ஸ்பி பிரபலமான அளவிற்கு உயரவில்லை.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த பெரிய சாதனையாக மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 வர இருக்கிறது. கம்ப்யூட்டர் உலகில் தன் தொடுவான எல்லைகளை விரித்து பல புதிய அம்சங்களுடன் இந்த தொகுப்பு வர இருக்கிறது. வழக்கமான பெர்சனல் கம்ப்யூட்டருக்கான ஆபீஸ் தொகுப்புடன் முதல் முறையாக இன்டர்நெட்டில் வைத்துப் பயன்படுத்தும் ஆபீஸ் தொகுப்பாகவும் இது வெளிவர இருக்கிறது.
நாம் கணினியில் பயன்படுத்தும் RAM – Random Access Memory என்பதின் பயன் என்ன என்று உங்களுக்கு தெரியுமா?
கணினியின் முக்கிய பயன்பாடுகளில் ஒன்று பெருமளவிலான தகவல்களை சேமித்து வைத்துக்கொள்ளும் வசதி. இவ்வாறாக சேமிக்கப்படும் தகவல் கிடங்கில் இருந்து எந்த ஒரு குறிப்பிட்ட தகவலையும் நொடிப்பொழுதில் எடுத்துவிட கணினி உதவுகிறது.இவ்வாறாக தகவலை சேமித்துவைப்பதற்காக, கணினிகளில் இரண்டுவகையான நினைவகங்கள் உள்ளன. அவை
“ஐபி முகவரிகள் என்பது இணையத்தில் இணைக்கப்பட்டிருக்கும் கணினிகளை
அடையாளம் கண்டு தொடர்புகொள்ள ஒவ்வொரு கணினிக்கும் தரப்படும்
எண்களாலான முகவரி” எடு. “195.194.234.345″


