கணினிக்கட்டுரைகள்

கணினி பற்றிய பல தகவற்கட்டுரைகளை இங்கு தொகுத்து வழங்கியுள்ளேன். இக்கட்டுரைகளை வழங்கிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.
இக்கட்டுரைகள் உங்களுக்கு நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும் என நம்புகின்றேன்.

கம்ப்யூட்டர் என்றாலே ஆங்கிலத்திலேயே இயங்கக்கூடியது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணங்கள்- கணித்திரையகத்தில் ஆங்கிலத்திற்கான முக்கியத்துவம், கணிப்பொறியின் ஆங்கில அச்சு முறைகள் மற்றும் கணிப்பொறியைப் பற்றி வெளிநாட்டுப் புது செய்திகளும், அறிவிப்புகளுமே இப்படி ஒரு மாயையை மக்கள் மனதில் பதித்துள்ளன. ஆனால் இவையனைத்தும் ஒரு தவறான கருத்தாகும்.

chrome-logoசென்ற ஜூலை 7ல் தன் வலைமனையில் பெர்சனல் கம்ப்யூட்டருக்கான குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைத் தர இருப்பதாக கூகுள் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. கூகுள் பிரவுசர் போல இது வேகமாகவும் எளிமையாகவும் இயங்கும் என்றும்,இந்த ஓ.எஸ். பைல் அளவில் சிறியதாக இருக்கும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

உத்தமம் நிறுவனத்தின் தலைவர் திரு .முத்து நெடுமாறனுடனான நேர்காணல்.

” … இலங்கைத் தமிழர்களே தமிழ் தகவற் தொழிநுட்பத்தினை ஆரம்பகாலத்திலேயே உள்வாங்கிகொண்டவர்கள். “பாமினி” எழுத்துரு, இலங்கையைச்சேர்ந்த முன்னோடிகளிடமிருந்து வெளிவந்ததுதான்…”

தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு

நாம் அலுவலகங்களில் உபயோகம் செய்யும் கணினி வலைஅமைப்பிற்கும் (Network), இணையத்திற்கும் (Internet) உள்ள வேறுபாடு என்ன என்று உங்களுக்கு தெரியுமா?

இணையத்தை உருவாக்கியவர்கள் யார்? எந்த நோக்கில் உருவாக்கப்பட்டது?
இப்பொழுது இது யாருக்குச் சொந்தம்? போன்றவை உங்களுக்குத் தெரியுமா?

Computer Virus என்பது பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம், இதனை நாம் தமிழில் கிருமி நிரல்கள் என்று கூறுகிறோம். இத்தகைய கிருமிநிரல்களும் நாம் கணினியில் பயன்படுத்தும் மற்ற நிரல்கள் (Programs) போன்றவையே. அப்படி இருக்க இதனை ஏன் நாம் கிருமி நிரல்கள் என்று சொல்லவேண்டும்?..

குறிப்பு 1
இந்த ஆக்கம் முழுக்க முழுக்க வெகு சாதாரண உபயோகிப்பாளர்களை மனதில் வைத்து எழுதப் பட்டது. தொழில் ரீதியாக உள்ளவர்களுக்காக அல்ல. தொழில் ரீதியில் பயிற்றுவிக்கும் முறையும் பயிலும் முறையும் வேறானவை. சாதாரண உபயோகிப்பாளருக்கு ஓர் ஆர்வத்தைக் கொடுப்பதே என் எண்ணம்.

இதுவரை கண்ட பட்டிகள் அனைத்தையும் கையாண்டு ஒரு முழுமையான படிவத்தைக் காணும் முன் மேலும் ஒரு உபயோகமான பட்டியைப் பார்ப்போம்.

இந்த மூன்றாவது பகுதியில் நாம் காணப் போவது, ஒரு வலைப் பக்கத்திற்கென
நீங்கள் படிவம் எழுதப் போவதாக இருந்தால் குறைந்த அளவு அறிந்திருக்க
வேண்டிய விடயங்களைப் பற்றிது.

இனி ஒரு மிகத் தேவையான ஒரு பட்டியைப் பார்ப்போம். பெரும்பாலும் அட்டவணை (Table) இல்லாத இணையப் பக்கங்களே இல்லை எனலாம். தெரியும்படியோ அல்லது மறைமுகமாகவோ அது இருக்கலாம். எப்படி என்பதை இதன் இறுதியில் தெரிந்து கொள்வீர்கள்.

நாம் இதுவரை கற்றுக் கொண்டது ஒரு அடிப்படையான இணையப்பக்கம் எழுதும்
அளவுக்கு போதுமானது என்றாலும் இத்துறையின் ஒரு விளிம்பைத்தான்
தொட்டிருக்கிறோம். இந்த மீயுரைகுறிமொழியின் வளர்ச்சி மேலொங்கிப்
போய் பல கிளைகளாக வளர்ந்திருக்கிறது.

தேர்வு செய்ய வேண்டியவற்றில் ஒன்றை மட்டும் தேர்வு செய்ய ரேடியோ
பொத்தான் உதவினாலும் பட்டியல் நீளமாக இருந்தால் அது பயன் தராது. எனவே
“drop down” எனப்படும் ‘தொங்கு பட்டியலை’ பயன்படுத்த நேரிடும்.

STYLE (பாணி?) ஐ மூன்று விதமாக கையாளலாம் என்று பார்த்தோம். இதில்
மூன்றாவது, style sheet ஐ தனி கோப்பில் எழுதி, மீயுரை படிவத்தில்
அதைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு செய்வதாகும்.

கணித்தமிழின் வரலாறு மிக நீண்டது, மிகப் பரந்தது, மிக ஆழமானது. எத்தனையோ ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பயனாளர்களின் பங்களிப்பில் எழுதப்பட்ட கணித்தமிழ் வரலாற்றின் முக்கியக் காலகட்டங்களைச் சுருக்கமாக இங்கு நோக்குவோம்.

<< முன்னைய பதிவுகள் << >> பின்னைய பதிவுகள் >>