பிரபஞ்சம் பற்றிய நீண்டகாலக் கற்பனைகள் பல, இப்போது உண்மைகளென நிரூபணமாகி வருகின்றன. சூரியத் தொகுதியில் மனித சஞ்சார முயற்சிகள் இப்போதெல்லாம் சர்வ சாதாரண செய்திகளாகிவிட்டன. மனிதனது மூளைக்குள் ஒருகால் அகப்பட மறுத்த பூமிப்பந்து இன்று அவனது உள்ளங்கையில் உட்கார்ந்திருக்கின்றது.
கணினிக்கட்டுரைகள்
கணினி பற்றிய பல தகவற்கட்டுரைகளை இங்கு தொகுத்து வழங்கியுள்ளேன். இக்கட்டுரைகளை வழங்கிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.
இக்கட்டுரைகள் உங்களுக்கு நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும் என நம்புகின்றேன்.
Credit Card பாவிக்கும் ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்துவைத்திருக்க வேண்டிய ஒரு அடிப்படை விடயம்
இலத்திரனியல் உலகில், இமாலயப் பிரச்சனையாக எழுந்துள்ள இந்த கடன் அட்டை குறித்த தரவுகளைத் திருடும் மாபாதகத் திருட்டு, தற்போது சர்வதேச குற்றப்புலனாய்வு துறையினருக்கே சவாலாக விளங்கும் ஒரு கிரிமினல் செயற்பாடாக உருவெடுத்திருக்கிறது.
(கம்ப்யூட்டர் பற்றி ஒரு கட்டுரை வேண்டும் என்று காலச்சுவடு கேட்டதும் நான் உடனே சம்மதித்தேன். காரணம் கம்ப்யூட்டர் பற்றிய என்னுடைய அறிவு ஒரு ஆமையினுடையதற்குச் சமம்; அல்லது அதற்கும் கொஞ்சம் கீழே. இதனிலும் பார்க்கச் சிறந்த தகுதி வேறென்ன வேண்டும். கணினி நிபுணர்களையும் ஆர்வலர்களையும் கேட்டால் அவர்கள் சொல்லித்தருவார்கள். அப்படி நினைத்தேன். உண்மையில் அது அவ்வளவு சுலபமானதாக இல்லை. ஒரு கணினிப் பயனாளர் என்ற முறையில் நான் படும் இன்னல்களையும் கணித்தமிழ் படும் இன்னல்களையும் கணினி ஆர்வலர்கள் படும் இன்னல்களையும் தொகுத்தாலே போதும் என்று பட்டது.
புதிய கணினிப் பாவனையாளர்கள் என்றதும், அது எனக்குப் பொருந்தாது என்று கருதுபவர்கள் பலர் இருக்கிறார்கள். இருந்தாலும், என்னதான் பல வருடங்கள் கணினியைப் பாவித்து வந்தாலும், கணினியின் தொழில்நுட்ப அறிவுடன் தொடர்புடைய ஒரு தொழிலில் ஒருவர் ஈடுபட்டால் ஒழிய, ஏனையவர்கள் கணினியின் நாளாந்தச் சிக்கல்களை எப்படி விரைவாகவும் எளிதாகவும் தீர்ப்பது என்று அறிந்திருக்க நியாயமில்லை.
இன்றும் திஸ்கி, குழுமங்களில் மட்டுமே கூடுகட்டிக்கொண்டு குஞ்சு பொறிக்க
முடியாத முட்டைகளை இட்டுக்கொண்டிருக்கிறது. வலைப்பூ, வலைத் தளங்களெல்லாம் யுனிகோடு சிறகுகளை தனிவானில் உயர்த்தி வெற்றிச் சிறகுகளுடன் பறக்கின்றன.
சில காலமாக இந்த RSS ஓடை அல்லது RSS ஊட்டு என்பதை இணைய தளங்களில் பார்த்திருப்பீர்கள்.
குறிப்பாக இணைய தளங்களில் செய்தி வாசிப்போர் இதை அறிய வந்திருக்கக்கூடும். ஒரு செஞ்சதுரத்தில் XML என்றோ அல்லது RSS என்றோ குறிக்கப்பட்டிருக்கும்.
எதற்கு முன்னாலும் ஈ என்ற எழுத்தைச் சேர்த்து விட்டால், அது புதிய நூற்றாண்டின் இறுதிப் பகுதிக்கான நவீன வார்த்தை என்ற பொருள் இயற்கையாகவே அமைந்து விடுகின்ற ஈ-ஞ்ஞான உலகில் வாழ்கிறோம் நாம். இது ஒரு வகையில் மகிழ்ச்சிதான். இணைய உலகம் உண்மையில் விந்தையானது.
பலநெடுங்கால பண்டைத் தமிழியலில் இடம்பெறுகின்ற இயல்-இசை-நாடகம் எனும் முத்தமிழின் நான்காம் பரிமாணமாக கணினித்தமிழ் கருதப்படுகிறது. கணினித்தமிழ் எனும் மின்செயலித் தமிழ், முத்தமிழின் புது இணைப்பாகி, நாற்றமிழ் என்று இனி அழைக்கப்பட வேண்டிய தேவையை அறிவுசார் தமிழுலகம் தற்போது ஆராய்ந்து முடிவுகாண் நிலையில் உள்ளது.
தமிழுக்கே நம்மூரில் நிலைமை சரியில்லாதபோது, கணித்தமிழ் பற்றிப் பேசிப் பயன் என்ன என்கிற எதிர்மறையான அணுகுமுறையுடன் இந்தக் கட்டுரையைத் தொடங்குவது தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது. ஆனாலும் சில நல்ல விஷயங்கள் நடந்துதான் இருக்கின்றன.
இல்லவே இல்லை என்கிறது கலிஃபோர்னியா பல்கலைக்கழக ஆய்வு
எதிர்பாராமல் பிறந்த இணையம் என்கிற மகத்தான தகவல் புரட்சியின் விளைவுகள் கூட யாரும் எதிர்பாராததாகவே இருக்கிறது.
(தமிழ் இணையம் 1997, 1999, 2000 மற்றும் 2001 ஆகிய நான்கு மாநாடுகளிலும் கலந்து கொண்டிருக்கும் இந்த கட்டுரையாளர் தற்போது மொழி தீர்வுகள் அளிக்கும் குளோபலிங்கோ நிறுவனத்தின் சி.இ.ஒ.-ஆக இருக்கிறார். சென்னையைச் சேர்ந்த இவரை senthil@globalingo.com முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.)
புதிதாக மின்னஞ்சல் உலகில் சஞ்சாரம் செய்ய ஆசைப்படுகின்ற, ஆனால் தொழில்நுட்ப அச்சங்கள் காரணமாகப் பின்னடிக்கின்ற சிலருக்கான அடிப்படைத் தகவல்களையும், தமிழில் மின்னஞ்சல் அனுப்ப முயற்சித்து பல்வேறு சிரமங்களையும் அனுபவிக்கின்ற புதிய பாவனையாளர்களுக்கான அவசியத் தகவல்களையும் தாங்கி வருகிறது இந்தக் கட்டுரை.
பயர்பாக்ஸ் ரசிகர்களின் பலவகையான வேண்டுகோள்களையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் வகையில் பயர்பாக்ஸ் 3.5 முழுமையான பதிப்பு வெளியாகியுள்ளது. சபாரி பிரவுசரின் பதிப்பு 4 வெளியாகியுள்ள நிலையில் இந்த தொகுப்பு வந்துள்ளது பிரவுசர் தயாரிக்கும் நிறுவனங்களிடையே நிலவும் கடுமையான போட்டியைக் காட்டுகிறது.
வணக்கம் நண்பர்களே,
நான் ஒரு சாதாரண கணனி பாவனையாளர் மட்டுமே. கடந்த 1995 லிருந்து
கணனியில் தமிழைப் பாவித்து வரும் ஒரு சாதாரண தமிழன்.
ஆரம்பத்தில் கடிதங்கள் எழுத (அச்சிட) மட்டும் தமிழை கணனியில் பாவித்தேன்.


