தனிமை மனிதர்களும் – சமூக வலைதளங்களும்

smediaதற்போதைய இளைய தலைமுறை சமூக வலைதளங்களிலேயே தங்கள் வாழ்க்கையை செலவிட்டுக் கொண்டிருக்கிறது என்று மூத்த தலைமுறை விமர்சனம் செய்கிறது. ஆனால், இதனை இளைய தலைமுறையின் குறைபாடாக மட்டும் சொல்லி கடந்துவிட முடியுமா ? அல்லது சமூக வலைதளங்களின் மீது மொத்த பழியையும் போட்டுவிட்டு நகர்ந்துவிட முடியுமா ?

சமூகத்தின் எந்த ஒரு விளைவும் சமூக காரணிகளிலிருந்தே எழுகிறது. இன்றைய இளம் தலைமுறையின் வாழ்வில் சமூக வலைதளங்கள் கணிசமான பகுதியை ஆக்கிரமித்திருக்கும் விளைவின் சமூக காரணிகளை தேடத்தான் வேண்டும்.

நீ நீயாகவே இரு! (வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்)

aruchunanநண்பரோ பகைவரோ யாரொருவரின் இக்கட்டிற்கு ஆளாவதைவிட அதர்மம் வேறில்லை. எவரிடத்தும் கருணைக் கொள்வதே மானுடநீதி நிலைப்பதற்கு வழிவகுக்கும்.

எதிரியிடம் கருணை காட்டுவதும் மானுட நீதியா? அது தன்னைத்தான் கொல்வதற்கு நிகரில்லையா? என எவரேனும் கேட்கலாம். ஆயின் எதிரியை களத்திற்கு அழைப்பதற்கு முன்பே மன்னிப்பதென்பது வீரத்திலும் உயர்ந்ததாகிறது.

மன்னிக்க மன்னிக்க நாம் மனதால் அதிபலம் கொள்கிறோம், கம்பீரமடைகிறோம். விட்டுக்கொடுக்க கொடுக்கத்தான் ஒவ்வொருவரும் வளர்கிறோமென்பதொரு ஆழ்நிலை சூழ்ச்சுமம் அறிந்தோர் அறியக்கூடியதொரு உண்மையாகும்.

தடைகளைக் தாண்டுவது எப்படி ?

swamiகணவன் மனைவிக்கு இடையே சண்டை வருவதற்கான காரணங்களைப் பட்டியல் போட்டால் அதில் முதலிடத்தில் நிற்பது காசோ, பணமோகூட இல்லை !

வார்த்தைகள். உச்சரிக்கிற அந்தக் கணமே காற்றில் கரைந்து போகிற வார்த்தைகள்தான். கணவன் – மனைவி உறவில் கசப்பு வளர்வதற்கு முதல் காரணம் ! இந்த வெறும் வார்த்தைகள்தான் பல தம்பதிகளை கோர்ட வாசல் வரை கொண்டு போயிருக்கின்றன ! இந்த வெறும் வார்த்தைகள் தான் பல தம்பதிகளை ஒரே வீட்டுக்குள் அந்நியர்கள் போலவும் வாழவைக்கிறது !

படித்தலும் படைத்தலும் எவருக்கும் பொது..

readingபொருளாதாரத்தில் வீழ்ந்தபோது இருந்ததைக் காட்டிலும் அது வளர்ந்தப்பொழுதில் எழுகிற போராட்டங்களே மனிதத்தைக் கொன்று மாடிவீடுகளைக் காப்பற்ற மட்டும் முந்திக்கொண்டு முன்நிற்கிறது. படிப்பு அறிவை வளர்க்க, அறியத்தர என்பதையும்தாண்டி பணத்தைக் குவிக்க பாதையை திசைதிருப்ப என்பதற்கான மூலதனமாகிப்போனது நமது வேகத்தின் விளைவோ என்னவோ, ஆனாலிது வளர்ச்சியின் குறையன்றி வேறில்லை.

மேல்படிப்பு படித்தவன் மேல், கீழ்வகுப்பில் கல்வி கற்றோர் சிறியவர் எனும் மனப்போக்கு எப்படி பணம் கொடுத்துவாங்கியச் சீட்டின் கணத்திலிருந்து வந்து தலையில் அமர்ந்துக்கொண்டதோ? தெரியவில்லை.

மதம் என்ற ஒன்று தேவைதானா ?

மதத்தின் பெயரால் நடக்கும் கலவரங்கள் சண்டைகள், போராட்டங்களை.. எல்லாம்
பார்க்கும்போது ‘மதம் என்ற ஒன்று தேவைதானா ?’ என்ற கேள்வி எழுகிறது.

குற்றம் கண்டுபிடிக்கும் குணம்

எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடிக்கும் குணம் நம்மில் பலருக்கு இருக்கிறது.
அடுத்தவர் செய்யும் குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் அப்படியொரு அலாதியான
சந்தோஷம். இப்படிக் குற்றம் கண்டுபிடிப்பதையே வழக்கமாக வைத்துக்
கொண்டிருந்தால் நாளடைவில் அது போதை வஸ்து மாதிரி ஆகி, நமது அறிவுப்
பார்வையை குறுகலாக்கிவிடும்.

இந்த நாள் இனிய நாள்!

தீபாவளிக்கு இன்னும் எத்தனை நாள் இருக்கிறது என்று நாட்காட்டி யில் கை வைத்து எண்ணி, எண்ணி (தப்புத்தப்பாக) மகிழ்ச்சியடைந்த காலம் ஒன்று உண்டு. அப்பா தரப்போகும் பட்டாசுக்காசு, அம்மா செய்யப் போகும் பலகாரம், அப்பா ஆசியின் (வசவு) பேரில் அம்மா எடுத்துத் தரப்போகும் டிராயர் சட்டை இவையெல்லாம் கலர்க்கலர் கனவுகளாய் தூக்கத்தைக் கெடுக்க, மனசெல்லாம் மத்தாப்பாய் மகிழ்ந்த காலம் ஒன்று உண்டு.

வானமே எல்லை !

இது கதையா, இல்லை உண்மையாவென்று தெரியவில்லை.

கிழக்கு ஆசிய நாடுகளில், ஒருவிதமான பூச்சியை பிடித்து, ஒரு கண்ணாடி
பெட்டியினுள் அடைத்து மூடிவிடுவார்கள். அந்த கண்ணாடியில்
சிறிய துவாரங்கள், சுவாசிப்பதற்காக இருக்கும்.

அன்னை தெரேசாவை தெய்வமாக்கிய ஒரேயொரு வசனம் !

நமக்கு யாருமே துணையில்லை என்று நிறையப்பேர் அவலமாகக் குரல் கொடுப்பதை எங்கும் சர்வசாதாரணமாகக் கேட்க முடியும். நமக்கு வாழ்வில் கஷ்டங்கள் வரும்போது யாராவது எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்ய முன்வருகிறார்களா ?
அப்படி வருவோர் என்றும் மாறாமல் இருப்பார்களா?
அப்படியானவர்களை எங்குமே காணமுடியவில்லை. இந்த வேதனையின் வெளிப்பாடே நமக்காக யாருமே இல்லை என்ற அவலக் குரல்களாகும். நமக்கு யாருமே இல்லை என்ற குரல்கள் எதனால் ஏற்படுகின்றன, காரணங்களைப் பார்ப்போம்.

கீதையில் மனித மனம்

'கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்' நூலிலிருந்து
அர்ஜுனனுக்குப் பரந்தாமன் உபதேசித்தது பகவத் கீதை.

மனிதனின் மனதைப் பற்றி அர்ஜுனனுக்கும் கண்ணனுக்கும் வாக்கு வாதம் நடக்கிறது.

கண்ணன் சொல்கிறான் :

நிம்மதியாய் இருக்க உபாயம்

சலிப்போ- களிப்போ எதுவானாலும் அதற்கு நம் நினைப்புத்தான் காரணமாகும். நம்மைப்பற்றியே நாம் கவலைப்படத் துவங்கினால் உலகத்திலே அதிக துன்பமுள்ள மனிதன் நாம் தான் என்று நமக்குத் தோன்றும். ஆனால் தன்னைப் பற்றியே யோசிக்கிற அந்த மனோபாவம்தான் மகிழ்ச்சியான நேரத்தில் தன்னைப் போல கொடுத்து வைத்தவன் யாருமில்லை என்று நினைக்க வைக்கும். வாழ்க்கையில் மனம் அதிகமாக அலட்டிக் கொள்ளாமலிருக்க எல்லோரைப் பற்றியும் அவ்வப்போது சிந்திக்கிற இயல்பை வளர்க்க வேண்டும்.

நாம் உயர்வு பெற வேண்டுமானால்…

பகவத் கீதையின் ஸாராம்சம்

"கர்மண் ஏவாதிகாரஸ்தே மாபலேஷு கதாசன
மாகர்ம பலஹேதுர்பூ மா தே ஸங்கோஸ்த்வகர்மணி"

நாம் ஒரு செயலைச் செய்யத் துவங்கும்போது, பலன் அமைவது நம் வசத்தில் இல்லை என்பது தெரிந்தாலும், பலனை எதிர்பார்த்துதான் நாம் செயல் புரிகிறோம். இந்த எதிர்பார்ப்பு, நம் விருப்பு, வெறுப்புகளைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையை அடிப்படையாகக் கொண்டது. இந்த எதிர்பார்ப்பு பொதுவாக அனைவருக்குமே உள்ளது என்பதால், இது பிரச்சனை அல்ல. பலன் கிடைக்கும்போது நாம் அதை எதிர்கொள்ளும் விதம்தான் பிரச்சனையை உருவாக்குகிறது.

நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை உன் உயிருள்ளபோதே தேடி வைத்துக்கொள்!

நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை உன் உயிருள்ளபோதே தேடி வைத்துக்கொள்! யாருடைய குறைகளை எண்ணிவிட முடியுமோ அவரே உண்மையில் உயர்ந்த மனிதர்!

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

தீய செயல் குறித்து தெய்வத்தின் முன்னால் வெட்கப்படாதே! மனிதன் முன்பாக வெட்கப்படு! அப்பொழுதே உனக்கு விமோசனம் ஆரம்பம்!

மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட ஒரு கணப்பொழுதாயினும் உதவி செய்வது மேல்!

உலகத்தை முழுக்கப் பார்க்காமலேயே உலக வாழ்க்கை வெறுத்துவிட்டது என்று அலுத்துக்கொள்கிறோம்.

யாருமற்ற தனிமையில் கடற்கரையில் நின்றிருக்கிறீர்களா…மனசு ஏதோ ஒரு பாடல் பாட, உள்ளுக்குள் உற்சாகம் ஊறத் துவங்க, இயற்கையின் மடியில் நாமே ஒரு குழந்தையாகிப் போவோம்!
புதிய புதிய இடங்களுக்குப் பயணப்படும் போதெல்லாம் வழிகளில் தென்படும் நதிகள், வயல்வெளிகள், மலைச்சரிவுகள், பறவைகள், மிருகங்கள், மனிதர்கள் என பார்ப்பதெல்லாமே மனசுக்கு அத்தனை சந்தோஷம் தரும். ஒரு நல்ல பயணம் நம்மைப் புதுப்பித்துத் தரும்.

ஆனால், நம்மில் பெரும்பாலோருக்கு வேலை-வீடு என ஒரு சின்ன வட்டத்துக்குள்ளேயே முடிந்துபோகிறது வாழ்க்கை. சென்னையில் இருந்து கொண்டே கடற்கரை பார்க்காதவர்கள் எத்தனை பேர் உண்டு தெரியுமா! அடுத்த தெருவிலிருக்கிற பூங்காவுக்குள் போய் அரை மணி நேரம் செலவழிக்க முடியாதவர்கள் இங்கேதான் இருக்கிறார்கள்.