சைவமும் தமிழும்

இப்பகுதியில் தொகுக்கப்பட்டிருக்கும் கட்டுரைகள் யாவும் திரு.சிங்கை கிருஷ்ணன் அவர்களால் எழுதப்பட்டவை. இவற்றைத் தொகுத்து இங்கு தருவதில் பெருமகிழ்ச்சியடைகின்றது ‘எழில்நிலா’ வலைத்தளம்.

நகை மோகம் நங்கையரை மட்டுமின்றி இன்று ஆடவரையும் ஆட்டிப்படைகிறது.

பொட்டுத் தங்கம் கூட போடாத நிலையில் பூவையரின் அங்கங்கள் மூலியாக அழுது வடிவது போல் தருவது என்னமோ உண்மைதான். ஆனால் உரிய அணிகலன்கள் ஏறியதும் அந்த அவயவங்கள் புதுப்பொலிவில் ‘நகை’ப்பது போலத் தோன்றுவதாலோ என்னவோ, நம் ஆன்றோர்கள் அந்த அணிகளுக்கு ‘ நகை ‘ என்னும் பொருத்தமான பெயரை சூட்டியுள்ளார்கள்.

தம்ம பதம் என்பது என்ன?

புத்தர் பிரான் அருளிய அறிவுரைகளும், சங்க விதிகளும், அவரைப்பற்றிய
விவரங்களும், வரலாறும் பெளத்த மதத் திருமுறைகளாக மூன்று பிரிவுகளாக அல்லது
தொகுதிகளாக உள்ளன. அவற்றைத் திரிபிடகங்கள் என்று அழைக்கிறார்கள்.
மூன்று கூடை அல்லது பெட்டி, பொக்கிஷங்கள் எனவும் கூறுகின்றனர். ஏனெனில் பிடகம்
என்றால் பெட்டி அல்லது கூடை, திரி என்பது மூன்று என்பதுதான்
உங்களுக்குத் தெரியுமே. (திரிபுர சுந்தரி).

இறையுணர்வு என்பதே அன்புவுணர்வுதான். அன்பு சுரக்கும் இடத்தில்தான் அருள் சுரக்கும்.
அன்பு என்பது கடவுளிடம் மட்டும் அன்றி கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்கும் அன்பு செய்ய வேண்டும். அருள் நெறி என்பது அன்பு நெறியின் நீடிய தோன்றமாகும்.

கூந்தல், மகளிரின் மங்கலப் பொருள்களான தாலி, வளையல், மஞ்சள், குங்குமம்,
பூ, தாலி சிலம்பு, மெட்டி முதலியவற்றைப் போன்று புனிதமானது.
பெண்கள் அணியும் புறப்பொருள்கள்.
கற்புடைய பெண்கள் வற்றை அணிவதால் சிறப்பு உண்டாகிறது.

“கருத்தின் உறைவிடமாகவும், அழகின் இருப்பிடமாகவும் அமைந்து, உள்ளத்தை உள்ளம் உணர்ந்தவாறு வெளிப்படுத்தி உள்ளத்திற்கு உவகையூட்டுவதால் இசை தன்னலம்
பழிபாவங்களும் நிறைந்த இந்த உலகைவிட்டு அழைத்துச்செல்கிறது”
- என்கிறார் கவிஞர் தாகூர்

வளைய வேண்டுமென்பதற்காக
நெருப்பில் வாட்டினும்
பொறுத்து – வளைகிற மூங்கில்
வேந்தன் அமரும் பல்லக்கில்
அவனது முடிக்குமேலே நின்று
பெருமை கொள்ளும் !

திருவண்ணாமலையே மகேசனாக் கோயில் கொண்டுள்ளது.
பஞ்ச பூத்தலங்களும் அக்னித்தலமாகப் போற்றப்படுகிறது.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை, ஜோதிப்பிழம்பாய் நின்ற இடமே இன்று
கார்த்திகைத் திருநாளில் தீபம் ஏற்றப்பட்டு அனைவராலும் வழிபடப்படுகிறது.

‘குத்து விளக்கு’ தெய்வீகமானது. தெய்வ அம்சம் பொருந்தியது என்பர்.
இதன் அடிப்பாகம் பிரம்ம அம்சம் என்றும், நீண்ட நடுப்பகுதி மகாவிஷ்ணு அம்சம்,
மேற்பகுதி சிவ அம்சம் எனவும் கூறப்படுகிறது. விளக்கில் ஊற்றும்
நெய் – நாதம், திரி – பிந்து, சுடர் – அலை மகள், சுடர் – கலை மகள், தீ -
மலை மகள் இப்படி அனைத்தும் சேர்ந்ததே குத்து விளக்கு என்பர்.

அழகிய ஓர் இளம் பெண் , இளைஞன் ஒருவனைக் காதலித்தாள்.
அவனும் அவளைக் காதலித்தான்.
ஆனால், அவர்கள் காதலை அப்பெண்ணின் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

தமிழ் மொழிக்குப் புத்துணர்வு தந்து, பாமரமக்களும் புரிந்துகொள்ளும் வகையில் இனிய
கவிதைகளை எழுதியவர் மகாகவி பாரதியார். பழைய தமிழை புதிய வடிவில் வடித்து தந்தவர்.
அவர் மனதின் இயல்புகளை மிக அழகாக, எளிய முறையில் வருணித்து இருக்கிறார்.

உலகின் வட முனையில் இருப்பவர்கள் நம்மைப் போல பகலெல்லாம் வெயிலிலும் , இரவெல்லாம் இருட்டிலும் வாழ்வதில்லை. அவர்களுக்குப் பகலென்பது ஆறு மாதமாகவும், இரவென்பது ஆறு மாதமாகவும் நீண்டுடிருக்கும்.

தமிழ் இலக்கியத்தில் தனிப்பாடல்களுக்குத் தனி இடம் உண்டு. அவை வேறுபட்ட காலங்களில் பல்வேறு புலவர்களால் பாடப்பெற்றவை. இப்பாடல்கள் சொல் நயமும் சுவை நலமும் தோன்ற எளிமையக எழுதப்பட்டவை. இவற்றை எழுதிய புலவர்களில் காளமேகம், கம்பர், கடிகைமுத்துப் புலவர், ஒளவையார், ஒட்டக்கூத்தர், பலபட்டை சொக்க நாதப்புலவர், ஆண்டாள் கவிராயர் போன்றோர் புகழ் பெற்றவர்கள்.

மதங்கள், காலம், காலமாகத் தோற்றும் காவியங்கள்.

இறைவனைப் பற்றி மதங்கள் கூறுவது என்ன?
எங்கு இருப்பவன் இறைவன். நீக்கமற நிறைந்திருப்பவன்.
எல்லாவிடங்களிலும் வியாபித்து இருப்பவன்.
இது மதங்கள் மூலம் நமக்கு தரும் செய்தி.

“புகழ் பெற்ற நந்தன் பாடல்.”

நந்தனோ நாளை என்றான்;
நாமோ இன்றே அவசியம் சென்று பார்க்க வேண்டிய திருத்தலம் தில்லை.
ஆடலரசன் நடராஜன் கனகசபையினில் அம்மை சிவகாமியுடன்
ஆனந்த நடம் புரிந்த ஆலயம்.

அம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தாளும்,
அவற்றுள் முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும்
மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாதான்.

<< முன்னைய பதிவுகள் <<