நாம் அன்றாடம் காலையும் – மாலையும் பூசை அறையில் தீபம் ஏற்றி ஆண்டவனை வணங்குகிறோம். தினம் தீபம் ஏற்றும் நம்மில் எத்தனை பேருக்குத் தீபம் ஏற்ற வேண்டிய முறைகள் பற்றியும், அவை தரும் பலன்கள் பற்றியும் தெரியும் ?
சைவமும் தமிழும்
இப்பகுதியில் தொகுக்கப்பட்டிருக்கும் கட்டுரைகள் யாவும் திரு.சிங்கை கிருஷ்ணன் அவர்களால் எழுதப்பட்டவை. இவற்றைத் தொகுத்து இங்கு தருவதில் பெருமகிழ்ச்சியடைகின்றது ‘எழில்நிலா’ வலைத்தளம்.
ஓர் வாலைப் பெண்ணின் கதையைச் சொல்கிறேன். இப்பெண்ணைப்
பற்றிப் பாடியவர் சென்ற நூற்றாண்டில் இருந்த முத்துக்குமாரு என்பவர்.
பசித்திரு, தனித்திரு விழித்திரு என்னும் தாரக் மந்திரத்தை வடலூர் வள்ளற்பிரானகிய
இராமலிங்க அடிகள் முதன் முதலில் மக்களுக்கு போதித்தார். அதன் பின்னர்தான்
அருளார்கள் பலரும் இதனை எடுத்தியம்பமுற்பட்டனர்.
“அக்கம் akkam, பெ.(n) வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, குரால் (கபிலம் brown)
என்னும் நிறங்களால் ஐவகைப் பட்டதும், ஒன்று முதல் பதினாறு வரை முள்முனைகள் கொண்டதும், ஒருவகைச் சிறப்பான மருத்துவ ஆற்றல் கொண்டதாகக் கருதப்படுவதும், குமரி நாட்டுக் காலந் தொட்டுச் சிவ நெறித் தமிழரால் “அணியப்பட்டுவருவதும், பனிமலை அடிவார நேபாள நாட்டில் இயற்கையாக விளைவதும், அக்கமணி என்று பெயர் வழங்கியதும், ஆரியர் தென்னாடு வந்தபின் உருத்திராக்கம் (ருத்ரா‡) எனப் பெயர் மாறியதுமான காய்மணி;
உலக மொழிகளுள் காலத்தால் வரையறுக்கப்படாதும், உயர்தனி மொழியாய் விளங்குவதும், இனிய நம் தமிழ்மொழியே ஆகும். தமிழ் மொழியில் தோன்றிய இலக்கிய
நூல்கள் பற்பல. அவற்றில் சமயத் தொடர்பான இலக்கியங்கள், பல்வேறு சமயப் புலவர்களால்
காலந்தோறும் சமைக்கப்பட்டுள்ளன.
சிரியுங்கள், உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்
அழுங்கள், நீங்கள் ஒருவர்தான் தனித்து அழுது கொண்டிருப்பீர்கள்.
தர்மம் , சத்தியம் நமக்கு இருக்குமானால் சமயத்தில், பல சாத்தியங்களை உண்டாக்கலாம் ; உருவாக்கலாம் ; சாதனை புரியலாம்.
ஒரு துறையில் மட்டுமல்ல ; பல துறைகளில் , நாம் நமது ஒன்றுமையைக்
கட்டிக் காக்கலாம். கல்வி , கலாச்சாரம் , பாரம்பரிய சம்பிரதாங்களையும் போற்றிப் பேணலாம். இதனால் எண்ணியவைகளைக் கனவாகாமல் முடிக்கலாம். இதனால் திண்ணியவராகப் பெறலாம்.
முதலில் சித்தர்கள் ‘ காடே திரிந்தென்ன’ ‘கந்தையே உடுத்தென்ன” ஒடே எடுத்தென்ன ‘ என்று ஓரிடத்திலும் தங்காமலும் எதனையும் சொந்தமெனக் கொள்ளாமலும்-நாடோடி வாழ்க்கை வாழ்ந்தாலும் அவர்கள் சமுதாயத்தைப் பற்றிய முழுமையான கண்ணோட்டம் கொண்டவர்களாக இருந்தனர்.
தசம் என்றால் பத்து தசரா என்றால் பத்து நாள்கள் கொண்டாடக்கூடிய விழா. இவ்விழாபுரட்டாசி மாதம் அமாவாசைக்குப் பிறகு கொண்டாடப்படுகிறது. பொதுவாகப் புரட்டாசி மாதம் பெண் தெய்வங்களின் வழிபாட்டுக்குரிய மாதமாகும். ஐப்பசி அஷ்டமி துர்காஷ்டமியாகவும், நவமி ஆயுத பூஜையாகவும், தசமி விஜயதசமியாகவும், ஐப்பசி மாத அமாவாசை தீபாவளிப் பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது.
ஆதி சக்தியான அம்மையின் வடிவம்
முதற்முதற் கடவுளாகிய பரம்பொருளின் அருள் ஆற்றலே சக்தியென வழங்கப்பெறுவது.
அவற்றுள்ளும் அம்மையாகக் கருதி வழிபடுவது முற்பட்டது.
மௌனம் என்பது வாயால் பேசாதிருக்கும் நிலை மட்டுமல்ல. “வாக்” என்று
அழைக்கப்படும் பேச்சு எங்கிருந்து எழுகிறது என்பதை அறிந்து, அந்த
மூலஸ்தானத்திலேயே எழாமல் அடக்குவதுதான் மௌனம் என்று யோக
நூல்கள் கூறுகின்றன.
சிலப்பதிகாரம் வெறும் கற்பனைக் காப்பியமல்ல. அது, தமிழ்சமுதாயத்தின் இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முற்பட்ட கலாச்சார மேம்பாட்டினையும், வாழ்க்கை நெறிமுறைகளையும்
விளக்கும் வரலாற்று நூல்.
உலக அரசியல், சமூகம்,கல்வி, விஞ்ஞானம், வாணிகம், சமயம், முதலிய எல்லாத்
துறைகளிலும் கண்டுபிடிக்கப்படும் புதிய தகவல், நிகழும் புதிய நிகழ்ச்சிகள் அனைத்தும்
செய்திகளே ஆகும். இச்செய்திகளை தாங்கி வரும் செய்தி இதழ்களே பத்திரிக்கை ஆகும்.
துருப்பிடித்த பாத்திரத்தில் நல்ல பாலை ஊற்றலாமா?
‘இஸ்லாம்’ என்ற அரபுச் சொல்லுக்கு, ‘முழுமையான சாந்தி (அமைதி) நிலை’ என்பது கருப்பொருள்.
அனைத்து உயிர்களும்–அனைத்து ஆன்மாக்களும் ஆதிப்பரம்பொருளான இறைவனிடம் இருந்து வந்தவைதாம்.
இந்த ஆன்மாக்கள் தனித்து நிற்கும் காலமெல்லாம், இது சா¢யில்லாத குறைநிலை.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இராமேஸ்வரம் சென்று இருந்தேன், குடும்பத்துடன்.
அது மார்கழி மாதம். நான் தங்கியிருந்த விடுதியிலிருந்து இரண்டு வீதி கடந்துதான் கோவில் செல்லவேண்டும்.
அந்த அதிகாலை வேளையில் சுப்ரபாத இசையுடன் பெண்கள் குளித்துவிட்டு கோலமிடுவது


