இறைவன் மீது காதல் கொள்வோர் பலர். சிலர் கசிந்து உருகுவார். அச்சிலருள் கசிதலோடு
கண்ணீரும் மல்குவோர் மிகச் சிலர். அப்படி உவப்பன கூறி ஓதுவோர் சிலரே.
அவ்வாறு தம் உள்ளத்தை திறந்து தாம் அறிந்தும், அறியாமலும் செய்த பிழைகளை இறைவன்
முன் கூறி பிழைகளை பொறுத்து அருளுமாறு வேண்டுவோர் வெகுச் சிலரே.
சைவமும் தமிழும்
இப்பகுதியில் தொகுக்கப்பட்டிருக்கும் கட்டுரைகள் யாவும் திரு.சிங்கை கிருஷ்ணன் அவர்களால் எழுதப்பட்டவை. இவற்றைத் தொகுத்து இங்கு தருவதில் பெருமகிழ்ச்சியடைகின்றது ‘எழில்நிலா’ வலைத்தளம்.
வீடுபேறு பேறுவதற்கு முதற்படியாக விளங்குவது பற்றினை அறுத்து யான் எனது என்ற
இருவகை உலகைப்பற்றை, விளக்கி அதனின்று வெளிவருவது. சொல், உணர்ச்சி, கருத்துக்
கோவை எல்லாம் சத்தியத்தை மூடி மறைக்கும் போர்வையாகும். மனித மனத்தை அருள்வழிப்
படுத்தி அவற்றிற்கு உரிய பக்குவமடையும் நெறிகளுக்கு அழைத்துச் செல்லும் ஆன்மீக
காவியங்கள் நிறைய உண்டு.
எந்த மொழியிலும் எழுத்துகள் பிறப்பதற்கு மூல காரணமாக இருப்பது ஒலியே. அந்த
ஒலியே பிரவணம் எனப்படும். வாயைத் திறந்து உள்ளிருக்கும் மூச்சுக் காற்றை வெளியிடும்போது
‘ஓ’ என்ற உருவமற்ற ஒலி பிறக்கின்றது. அவ்வொலியின் கடைசியில் வாயை மூடும்போது
‘ம்’ என்ற ஒலி தோன்றுகிறது.
இன்றுள்ள நமது சமுதாயம் இரண்டு வர்க்கங்களைக் கொண்டது. அவை, பொருளும் வசதியும் படைத்தவர்கள் சமுதாயம். அடுத்தவர்கள் பொருளும் வசதியுமற்ற சமுதாயம். இந்த சமுதாயப்பிரிவு நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது.
நரைக்குக் காரணம் மரபு கூறுதான். சிலருக்கு மிக இள வயதிலேயே வந்து விடுகிறது.
ஆனால் மிகுந்த கவலை கொண்டால் முடி நரைத்து விடும் என்ற நம்பிக்கை பலருக்கு
உண்டு. கவலை என்பதும் (STRESS) தானே. இந்த மன உளைச்சல்
Stress உடலில் பல மாறுதல்களை ஏற்படுத்தகூடியதான்.
உலகில் மிகத் தொன்மையான இந்து மதம்; காலாதி காலமாக நமது முன்னேர்கள், ஆன்றோர்கள், சமயக் குறவர்கள் கட்டிக்காத்து வந்த இந்து மதம்; இன்று மனிதனின் விஞ்ஞானத்தின் ஆரம்பத்திற்கு, அன்றே அடித்தளம் வகுத்த இந்து மதம்; எம்மதமும் சம்மதம் என்ற உயரிய கோட்பாடுடன் கடவுள் ஒருவனே என்று உலகுக்கு இடித்துரைத்த இந்து மதம்; மனிதனை மனிதப் பண்புடன் வாழ வழிகாட்டிய இந்து மதம்; இன்று எங்கே போய்க் கொண்டிருக்கிறது?..
“மாதத்தில் நான் மார்கழி ” என்றான் கிருஷ்ணன்.
மார்கழி மாதம் பீடை மாதம் என்று சிலரும் திறக்காத கோயில்களும் திறக்கும் சிறந்த
மாதம் என்றும் ஆண்டு முழுவதும் தேவைப்படும் நெல்லையும் உளுந்தையும் சேமிக்கும்
மாதம் என்றும் சிலரும் , தை மாதத்தில் கொண்டாடும் அறுவடை விழாவைச் சிறப்பாக
கொண்டாட
தலைச்சங்கம் இடைச் சங்க காலத்தில், பாண்டி நாட்டின் தென் பகுதியில் இருந்த
சில நிலப்பகுதிகள் பெரிய கடற்கோள்களினால் மறைந்து விட்டன. அப்போது அப்பகுதியில்
இருந்த ஏட்டுச் சுவடிகளும் மறைந்து போயின.
சில மலர்களின் மருத்துவ குணங்கள் பற்றி அறிந்த நமக்கு, தற்செயலாக ஒரு மருத்துவ
இதழ் மூலம் நிறைய மலர்களின் மகத்துவம் தொ¢ய வந்தது.
எழுத்திலக்கியத்தில் , சமூகவியல் கண்ணேட்டத்தில் தமிழ்ப் பெண்கள் இன்று மேலான பார்வையில் தான் உள்ளார்கள். தமிழ்ப் பெண்கள் காலந்தோறும் வாழ்ந்து வந்த நிலையினைக் கணிக்கும் போது இன்றைய நிலையில் மேலோட்டத்தில் உள்ளது. ஆயினும், தமிழ்ப் பெண்களின் மறுமலர்ச்சி என்னும் போது , ஏற்கனவே ஒரு மலர்ச்சி காலமிருந்தது. அக்காலம் சங்க காலம்.
‘கொல்லாமை ‘ என்பதை தலையாய அறமாக அனைத்து சமய தமிழ் இலக்கியங்களும்
எடுத்து இயம்புகிறது. தத்துவரீதியாகப் பார்க்கும்போது பெளத்தவர்கள் கொல்லாமையை
வலிறுத்தினாலும், புலால் உண்ணாமையை வலியுறுத்தவில்லை. ‘கல்பய மாமிசம்’, அகழுதூபூ
மாமிசம் என்று புலாலை ஏற்றுக்கொள்ளகூடிய , ‘ஏற்றுக்கொள்ளாத இயலாத’
என இருவகைப்படுத்தினர்.
வேதங்களின் உதாணரமான உபநிடதம், பகவத் கீதை, மகாபாரதம், இராமயாணம்,
முக்கியமாகக் கருதப்படுகிறது. இவற்றுள் பகவத்கீதை என்ற புகழ் வாய்ந்த பகுதி மகாபாரத்தில் உள்ளது. குருசேத்திரப் போர்க்களத்தில் பாண்டவர்-கெளரவ அணிகளுக்கிடையில் போர் மூளவிருந்த சூழலில் பாண்டவ வீரனான அர்ச்சுனன் உறவு சார்ந்த உணர்வுகளால் பாதிக்கப்பட்டு மனம் சோர்ந்து உள்ளான். இந்நிலையில்,
பண்டைச் சமயத் தோற்றத்திற்க்கு மானுடவியல் அறிஞர் பல்வேறு காரணங்களைக் காட்டுக்கின்றன.
அவற்றுள் உலக் கோட்பாடு, இயற்கைக் கோட்பாடு, முன்னோர் வழிபாட்டுக் கோட்பாடு
என்பன சிறப்பாக்க சுட்டத்தக்கவை. தமிழர் தம் பண்டைச் சமயக்கூறுகளுள், வழிபாட்டு
கூறும், இயற்கை வழிபாட்டுக் கூறும், முன்னோர் வழிப்பாடுக் கூறும் கலந்து இயைந்தே உள்ளன.
பெருங்கதை – உஞ்சைக் காண்டம்
கொங்கு நாட்டின் பேரிலக்கியம் பெருங்கதை; கொங்குவேளிர் யாத்தது.
உதயணன் அக் காப்பியத் தலைவன்; யானையை அடக்கும் திறம் தெரிந்தவன்.
எனது “திருக்கயிலாய யாத்திரை”
காலம் கடந்தாலும் நினைவு மட்டும் பசுமையாக நேற்று நடந்தது போல்
உள்ளது அந்த நினையலைவுகளை உங்களுடன் இனிமையாக, பசுமையாக பகிர்ந்து
கொள்வதில் இன்பம் காணுகிறேன்.
[உங்களுக்கு போரடிக்காத வகையில்!?]


