காலைச் சூரியன் முகம் மலர, எங்கும் படர்ந்திருந்த மார்கழிப் பனி விலக, கதிரவன் தன் இளங்கதிர்களால் ரமேஷின் தலையை செல்லமாக வருடி வாழ்த்தியது. சூரியனின் ஒளி பட்டு கண்கள் கூச, அதற்கு மேலும் தூங்கிக்கொண்டிருக்கமுடியாமல், படுக்கையைவிட்டு எழுந்தான் ரமேஷ்.
சிறுகதைகள்
சிறுகதைத்தொகுப்பு
காலை மணி 5:40 . ட்ரெயினிலிருந்து வரும் சத்தத்தில் தாம்பரம் இரயில்வே ஸ்டேஷனே அலறியது . வழக்கமாக ஒரு மணி நேரமோ , ஒன்றரை மணி நேரமோ தாமதமாக வரும் ‘ தஞ்சாவூர் பாசஞ்சர் ‘ , இன்று வழக்கத்திற்கு மாறாக வெறும் பத்து நிமிடம் மட்டுமே தாமதமாக வந்தது.
முதல் பக்கத்தொடர்ச்சி..
அம்மா வாசலில் நின்று தனியே தொழுதாள். தனது அருமையான புதல்வனின் நலத்துக்காக அம்மா தினமும் தனியே நின்று உருகினாள்.
சுற்றிலும் பச்சைப்பசுமையான வயல்களைக் கொண்ட அந்தப் புளியாநல்லூர் கிராமத்தின் நடுவே வந்து நின்ற பேருந்தில் இருந்நு இறங்கிய சுமதிக்கு தனக்காக அங்கு காத்துக்கொண்டிருந்த தன் அண்ணன் பாலாவை கண்டவுடன் கண் கலங்கியது.
“குலம்!….மாடுகளுக்குக் கொஞ்சம் வைக்கல் இழுத்துப்போடு மேனே”
குலம் மல்லாந்து படுத்துக் கிடந்தான். ஓலைப்பாயில் தலையணைகூட இன்றித்தான் இவன் படுப்பான். முதுகு வலிக்குமா, இல்லையா? இவன் ஏன் ஒரு காட்டுப் பிறவி மாதிரி இருக்கிறான்!
ராகவன் அந்த பூங்காவில் அமர்ந்து கொண்டிருந்தான். எதிரே விசாலமான கடற்கரை. எங்கும் நீல வன்ணம் தாங்கி ஆர்பரித்துக் கொண்டிருந்தது. அருகே ஒட்டினார்ப்போல வானம் இருண்டிருந்தது. இரண்டிற்க்கும் துளி கூட சம்பந்தமில்லை. ஆனால் இயற்கை அவற்றை இணைத்துப் பார்த்து மகிழ்கிறது.
[மோகவாசல் ரஞ்சகுமாரின் பல சிறு கதைகளைப் படித்திருக்கின்றேன். ஏனோ தெரியவில்லை இக்கதை ஏதோ ஒரு தாக்கத்தை எனது மனதில் ஏற்படுத்திவிட்டது. என்னவாக இருக்கலாம்? நீங்களும் படித்துப்பாருங்கள். இக்கதை இலங்கையின் மலை நாட்டு வாழ்க்கை முறை அறிந்தவர்களுக்கு நிச்சயம் புரியக்கூடும்.]
சாய்மனைக் கதிரையில் சாய்ந்திருந்த சண்முகத்தார் சுருட்டொன்றை எடுத்து
வாயில் வைத்து ஊதியபடியே வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். சுருட்டின்
புகை சுருள் சுருளாகப் போய்க்கொண்டிருந்தது. சிறிது தூரம் போனபின் அவை
அகன்று பரந்து அப்படியே மறைந்துகொண்டிருந்தது.
வீடு ஒரே கும்மிருட்டாக இருந்தது. உள்ளே போவதற்காக எட்டிப் பார்த்தவளின் மனதிலே அதை எப்படி எடுப்பது என்ற எண்ணமே தோன்றியது. அவளுக்கு உதவுவது போல் அந்தக் கூரையில் இருந்த ஓட்டைகள் மூலம் வந்த நிலவின் ஒளி, வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்தது.
பாடசாலை விடுமுறை எனவே நிசா நீண்ட நேரம் படுத்திருந்தாள். ”இப்ப டீவீயில நல்ல புரோகிராமுகள் போகும். ஆனா இன்னும் அம்மாவும் அப்பாவும் எழும்பேல்ல. இப்ப நான் டீவியப் போட சத்தங் கேட்டு அம்மா எழும்பினான்டா என்ற கதி அதோ கதிதான். நான் மற்ற நாளையில டேக்கெயருக்கெண்டு போறதால எனக்கு உந்தப் புரொகிராம் எல்லாம் பார்க்கக் கிடைக்கிறேல்லத்தானே.
பத்திரிகையின் பக்கங்களைப் புரட்டியபடியே சோபாவிலே சாய்ந்திருந்த ரம்யாவின் கண்களிலே அந்த மரண அறிவித்தல் பட்டது. அதிலே அவள் கண்கள் அப்படியே நிலை குத்தி நின்றன. இது நிச்சயமாக அவள்தான். கடவுளே.. .. அப்படி இருக்கக்கூடாது கண்களை அகலத் திறந்தபடி பெயர் ஊரைக் கவனமாக உற்று நிதானமாக வாசித்தாள். ஆமாம் அவள் என் மாணவி தான். அமைதி, அடக்கம், பொறுமையின் சிகரமான அவளுக்கா இக்கதி? நெஞ்சிற்குள் ஏதோ செய்வது போலிருந்தது. இவளால் எப்படி போராட்டத்தில் இணைய முடிந்தது? எப்படி
எல்லோரும் இரவோடிரவாக நடந்தார்கள்.
தங்களால் கைகளில் எடுத்துக்கொள்ளக் கூடிய பொருட்களை எடுத்துக் கொண்டு நடந்தார்கள்.
அவர்களில் ஒருத்தியாக ரம்யாவும் நடந்துகொண்டிருந்தாள். அவள் கைகளிலும் சிறிது பொருட்கள் இருந்தன. அவள் எங்கே போகின்றாள்? யாரிடம் போகின்றாள்? அது அவளிற்கு மட்டுமல்ல அதில் போகின்றவர்களிற்கே தெரியாத ஒன்று.
அவர்கள் எல்லோருக்கும் ஒரே பெயர். அது தான் அகதி.
ஓ இன்று கோகிலாவைப் பெண் பார்க்க வருகிறார்கள். அதுதான் கோகிலாவின் அண்ணி சுதா அவளை அலங்காரம் செய்துகொண்டிருந்தாள்.
கோகிலா அண்மையில்தான் கனடா வந்திருந்தாள். அவள் அண்ணன் ராகவனோ தன் தங்கை மீது உயிரையே வைத்திருந்தான். தன் தங்கைக்காக எதையுமே செய்யத் தயாராக இருந்தான்.
அந்த மரண வீட்டிலே பெரும் பாலானோர் அப்பிணம் வைத்திருக்கும் இடத்தருகே போய் சிறிது நேரம் நின்று அப்பிணத்தை ஒரு முறை உற்றுப் பார்த்து விட்டு வந்து இருக்கைகளில் அமர்ந்தனர். அவ்வாறு வருபவர்களை அழைத்து வருபவர்கள் அக்குடும்பத்தில் அப்பிணத்திற்குச் சொந்தக் காரர் என்று சொல்லவும் வேண்டுமா?
பிள்ளைகளை நித்திரையாக்கிவிட்டு தன் கணவனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவள் பல்கணியில் போயிருந்தாள். காலநிலை மிகவும் இதமாக இருந்தது. காற்று மெல்லியதாக இதமாக உடலை வருடிக்கொடுத்தது.வசந்த காலம் என்பதால் பல வண்ணங்களிலே பலவிதமான பூக்கள் பூத்துசொரிந்து கொண்டிருந்தன. பட்டமரங்கள் தளிர்விட்டு தாம் இன்னும் உயிருடன் இருப்பதை நினைவு படுத்தின. அவையும் எதிர்பார்ப்புகளுடன் தானே காத்திருந்திருக்கும்…


