சிறுகதைகள்

சிறுகதைத்தொகுப்பு

இன்று மாலதிக்கு விடுமுறை. இன்றாவது சிறிது நேரம் படுத்திருக்கலாம் என்று எண்ணிக்கொண்டுதான் இரவு படுத்தவள். ஆனால் அதிகாலை மூன்று மணிக்கே டெலிபோன் வந்து அவளை எழுப்பிவிட்டிருந்தது. அதன்பின் அவளால் தூங்கவே முடியவில்லை. மனம் இருப்புக்கொள்ளவில்லை. பலமான காற்று வீசும்போது எல்லாமே பறப்பதுபோல நில்லாமல் நீந்திவரும் நினைவலைகளென பலவகையான எண்ணங்கள் அவள் மனத்திரையிலே வந்து வந்து அலைமோதிக்கொண்டிருந்தன. படுக்கையிலே புரண்டு புரண்டு படுத்தாள்.

திண்ணையிலே குந்தியிருந்துகொண்டு முழங்கால்கள் இரண்டையும் தன்னிரு கரங்களினாலும் இறுகக் கட்டிப் பிடித்தபடி முகத்தை அக்கரங்களுக்குள் புதைத்தவளாக சிந்தனைச் சிறகுகளை அகல விரித்துப் பறந்துகொண்டிருந்தாள் மீனா.
மழை விடாமல் பொழிந்து கொண்டிருந்தது. பளிச்சிடும் மின்னல்கள் காது செவிடுபடும் இடிமுழக்கம் முறிந்துவிழுகின்ற மரக்கிளைகள் இவை எதுவுமேஅவளை அசைத்துவிடுவதாக இல்லை. ஆனால்…

யமுனாவிற்குத் திருமணமாகி மூன்றே மாதங்கள் தானிருக்கும். வசந்த காலத்தில் பூத்துப் புது மணம் பரப்பும் பூவென மலர்ந்திருந்தாள். ஆமாம் அவளது வாழ்க்கையிலும் புது வசந்தம் வீசிக் கொண்டிருந்தது. தன் எண்ணப்படியே தான் விரும்பிய முரளியையே திருமணமும் செய்து கொண்டாள் யமுனா.

கதைக்குள் நுழையும் முன்..

வணக்கம். இக்கதை எனக்குள் நிகழ்ந்துபோன ஓர் வேதனை நிகழ்வு. நமது இந்திய பாரம்பரியத்தில் கற்புக்கு என ஓர் மிகப்பெரிய இடம் இருக்கிறது. அதன் முக்கியத்துவத்தை இந்திய பாரம்பரியத்தின் ஒவ்வொரு வித்தும் தான் இம்மண்ணில் முளைவிடும் முன்னே தெரிந்துகொள்கிறது.

தொலைபேசி மணி ஒலித்தது. திடுக்கிட்டு விழித்த பூரணம் அம்மா தன்னை ஒருவாறு சுதாகாரித்தபடி ரிசீவரை எடுத்தார். மறுமுனையில் அவர் கனடா வந்தபின் அவருடன் சினேகிதியாக மாறிய விஜயலட்சுமி எனப்படும் விஜயா தான் எடுத்தாள்.

>> பின்னைய பதிவுகள் >>