செய்திச்சிதறல்கள்

செய்தித்தளங்களிலிருந்து சில செய்திச்சிதறல்கள்..

மொஸில்லா நிறுவனம் தன் பயர்பாக்ஸ் தொகுப்பின் புதிய பதிப்பினை (பதிப்பு 4.0.) பல மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளது. இனி வரும் பயர்பாக்ஸ் பிரவுசர் பதிப்புகள், இந்த புதிய கட்டமைப்பில் தான் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு சோதனை பதிப்புதான். யார் வேண்டுமானாலும் இதனை டவுண்லோட் செய்து பயன்படுத்தி, இதன் நிறை மற்றும் குறைகள் குறித்து மொஸில்லாவிற்குத் தெரிவிக்கலாம். முழுமையான பதிப்பு இந்த ஆண்டின் இறுதியில் வெளியிடப்படலாம். இதன் புதிய சிறப்பம்சங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

சோசியல் நெட்வொர்க் இணையதளங்களில், ஆரம்பித்த சில நாட்களிலேயே அசுர வளர்ச்சி பெற்றுள்ள பேஸ்புக்கிற்கு போட்டியாக, கூகுள் நிறுவனம் ‘கூகுள் மீ’ என்ற பெயரில் புதி‌ய இணையதளத்தை துவக்க உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

உலக இணையத்தள வரலாற்றில் முதன் முறையாக இணையத்தள முகவரிகளை தாய்மொழியில் பயன்படுத்தும் சந்தர்ப்பம் இலங்கைக்கு கிட்டியுள்ளது. இந்த வாய்ப்பினைப் பெறுவதற்கு ‘அய்கன்” (ICANN) நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது .

இன்றைய சுற்றுப் புறச் சூழல் ஆய்வாளர்கள் அனைவரும் உலக வெப்பமயமாவதைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். இதில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களும் ஆற்ற வேண்டிய கடமை உள்ளது. இது குறித்து ஆய்வு செய்த டப்ட்ஸ் (Tufts) பல்கலைக் கழகம், சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. இவற்றைப் பின்பற்றுவதால், ஏற்கனவே நாம் புவி வெப்பமயமாதலில் ஏற்படுத்திய அழிவைச் சரி செய்ய முடியாது என்றாலும், சீதோஷ்ண நிலை மாறிவருவதனை ஓரளவிற்குத் தடுக்கலாம்.