எழில்நிலா வலைத்தளம் பற்றி ஆனந்தவிகடன் தனது ஜனவரி 23, 2008 இதழில் இப்படி எழுதியிருக்கின்றது.
நினைவில் நிற்பவை
நினைவில் நிற்கும் சில பழைய பதிப்புக்கள்!
1997 ஜூலை யிலிருந்து 2003 மே மாதம் வரை ’எழில்நிலா’ வலைத்தளம் பற்றித் தங்கள் கருத்துக்களைத்தெரிவித்த வாசகர்களும் அவர்களின் கருத்துக்களும் கீழேயிருக்கும் இணைப்பில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இவர்களின் கருத்துக்களை மீண்டும் படித்துப்பார்க்கும்போது ஒரு விதமான மகிழ்ச்சி மனதில் ஏற்படத்தான் செய்கின்றது.
தமிழ் கணினித்துறையில் தொண்டாற்றிவந்த கணிஞர் உமர்தம்பி அவர்கள் 2006 ஜூலை 13ல் இயற்கை எய்தினார்.
தமிழ்கணினிக்கு இவர் ஆற்றிய சேவை மிகவும் பெரியது. தமிழ் யுனிகோடை இணையத்தில் பலரும் பயன்படுத்த பல செயலிகளையும் எழுத்துருக்களையும் உருவாக்கியதுடன் உதவிக்கட்டுரைகளையும் எழுதி பெரிதும் உதவி புரிந்தவர்.
அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.


