வெள்ளைக்காரன்

சிண்டரெல்லா கதையில் யார் கதாநாயகன் அல்லது நாயகி என்று கேட்டேன். நான் கேட்டது ஓர் ஆறு வயது பெண் குழந்தையிடம். அந்தக் குழந்தை பதில் சொல்ல ஒரு விநாடிகூட எடுக்கவில்லை. ’மணிக்கூடு’ என்றது. நான் திடுக்கிட்டுவிட்டேன். சிண்டரெல்லாவைச் சொல்லலாம், அல்லது ராசகுமாரனை சொல்லலாம். அல்லது தேவதையை சொல்லலாம். ஏன் சிண்டரெல்லாவின் இரண்டு சகோதரிகளைக் கூடச் சொல்லியிருக்கலாம். இது புதுவிதமாக இருந்தது. யோசித்துப் பார்த்தேன். அந்தக் குழந்தை சொன்னது சரிதான். மணிக்கூடு இல்லாவிட்டால் கதையே இல்லையே. அதுதானே முடிச்சு. 12 மணி அடிக்கமுன்னர் சிண்டரெல்லா வீடு திரும்பவேண்டும். இதுதான் தேவதையின் கட்டளை. ஆகவே கதையில் முக்கியமானது மணிக்கூடுதான்.

கோசலை

cycle

"குலம்!….மாடுகளுக்குக் கொஞ்சம் வைக்கல் இழுத்துப்போடு மேனே" குலம் மல்லாந்து படுத்துக் கிடந்தான். ஓலைப்பாயில் தலையணைகூட இன்றித்தான் இவன் படுப்பான். முதுகு வலிக்குமா, இல்லையா? இவன் ஏன் ஒரு காட்டுப் பிறவி மாதிரி இருக்கிறான்!

அம்மா திண்ணைக் குந்தில் கால் நீட்டி உட்கார்ந்தவாறே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தாள். "கொஞ்சம் வைக்கல் இழுத்துப் போடன் அப்பன்….மாடுகள் கத்துதெல்லவே!……" குலம் நெற்றியில் முழங்கைகளை அழுந்தப் போட்டவாறு, கால்களை ஆட்டியவாறு படுத்துக் கிடந்தான்.

உங்களுக்குப் புரியுதா?

questionஎன் பெயர் விக்னேஷ். எனக்கு ஒரு பிரச்சினை.  இல்லை, இல்லை, எல்லாமே பிரச்சினைதான்.

நான் பேசுறத யாருமே புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க. சுத்தி நின்னு வேடிக்கை பார்க்கிறாங்க. சிரிக்கிறாங்க. அப்புறம் அவங்கவங்க வேலையை பார்க்க போயிடறாங்க. நான் தனியாவே படுத்து கிடக்கணும்.

இந்தப் பழங்கள் புளிக்கும்

girlவங்கியில்  இருந்து வந்த கடிதத்தை மகன் ஜீவனிடம் கொடுத்து விட்டு மகனின் அறைக்கதவோடு சாய்ந்துகொண்டு நின்றான் சண்முகம். அப்படி நிற்பது கூட அவனுக்கு விருப்பமாகவும் பெருமையாகவும் இருந்தது.

மறுஜென்மம்

girlஅம்மாவின் காலடியில் படுத்திருந்தாள் கயல். பொழுது விடிந்ததும், நித்திரையால் எழுந்த தாய் கயலைப் பார்த்து சிரித்தபடி மெதுவாகத் தட்டியெழுப்பி,
“என்ன கயல், இண்டைக்குமா?, நித்திரையில நடக்கிற உன்ர வியாதி எப்பதான் உன்ன விட்டுப் போகப் போதோ தெரியல. சரி எழும்பு, ஸ்கூலுக்கு ரைம் ஆச்சு, போய் குளிச்சிட்டு வா”
கண்ணைக் கசக்கியவாறு எழுந்த கயல், சுற்றிப் பார்த்து விட்டு,“எப்பிடிமா நான் இங்க வந்தன்?”ஒன்றுமே தெரியாதது போல தாயிடம் கேட்டாள்,

ஆங்கில அம்மணி

அன்றொருநாள் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்படும் பேரூந்தொன்றின் ஓா் ஆசனத்தில் நான். யன்னல் வழியாக நடப்பவற்றை இரசித்துக்கொண்டிருந்தேன். அனேகமாக பேரூந்தின் அனைத்து இருக்கைகளுமே நிரப்பப்பட்டிருந்தன. எதற்காக இந்த தாமதம் என்ற கேள்வி என் மனதில். சற்று நேரத்தில் ஓர் அம்மணி தனது seat number ஐ தேடியவாறு வந்துகொண்டிருந்தார். எனக்குப்பின்னே அவரின் இருப்பிடம். பேரூந்து புறப்பட தாமதித்தமைக்கான காரணத்தை அறிந்து கொண்டேன்.

மயக்கம்

ஓா் அழகிய காலைப்பொழுது எங்கு பார்த்தாலும் குதுாகலம் கும்மாளம். மங்கலகரமான வாத்திய இசை முழங்க அந்த திருமண நிகழ்வு களைகட்டியிருந்தது. அனைவரும் மாப்பிள்ளையின் வரவிற்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தனா். தொலைவில் ஒரு பெரியவரின் குரல் ' மாப்பிள்ளை வந்திட்டார்'. மாப்பிள்ளையை வரவேற்க ஆரத்தியுடன் தயாராகினா் பெண்வீட்டார். திருமண நிகழ்வின் மொத்தக் கட்டுப்பாடும் வீடியோ எடுப்பவா்களின் கையில்.

திசை மாறும் பறவைகள்

காற்றின் தழுவலுக்கு இடம் கொடுக்க விரும்பாத கைவிளக்கு அடிக்கடி தற்கொலை செய்து கொள்கிறது. இருளில் குறிப்பாகத் தீப்பெட்டியைத் தொட்ட நந்தாவின் விரல்கள் அதை எடுத்து திரும்பவும் விளக்கேற்ற விரும்பாமல் தள்ளி வைத்துவிட்டுத் திரும்புகின்றன.

இன்னும் அதில் ஒன்பது குச்சிகள் தான் இருக்கின்றன. அதுவும் முடிந்தால் சந்தியில் காவலுக்கு வாற ஆமி ரணசிங்காவிடம் தான் அம்மாவை விட்டுக் கேட்க வேணும். ஒரு பப்பாப்பழம் கொடுத்தால் ஒரு தீப்பெட்டி தருவான். நேற்றுவரை அது குற்றமாகத் தெரியவில்லை நந்தாவுக்கு.

படைவலிமை (குறள் தரும் விளக்கம்)

கூற்று உடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்றல் அதுவே படை

கந்தப் புராணத்திலே முருகப் பெருமானுக்கும் சூரனுக்கும் நடந்த யுத்தம் பதினெட்டு யுகங்களில் முடிந்தது. கம்பராமாயணத்தில் இராமனுக்கும் இராவணனுக்கும் நடந்த யுத்தம் பதினெட்டு மாதங்களிலே முடிந்தது. மகாபாரத யுத்தமும் பதினெட்டு நாட்கள் தான் நடந்தது. அது போல ஈழ யுத்தமும் மே பதினெட்டாம் திகதிதான் முடிந்து போனது! பதினெட்டுக்கு அப்படியொரு பெருமை போலும்!

தலைமை அழிந்தது! தளபதிகள் அழிந்தார்கள்! படைகள் அழிந்தன! மக்கள் அழிந்தார்கள்! சிலர் மண்டியிட்டார்கள்! இன்னும் சிலர் காட்டிக் கொடுத்தார்கள்! பலர் கைதானார்கள்! உண்மைதான்!

குறை சொல்ல முடியாத குற்றங்கள்!

இயக்க ஆட்கள் காசுக்கு வந்திருக்கினம் போல கிடக்குது. நீங்கள் கீழே வராதையுங்கோ நான் ஏதாவது சொல்லி அனுப்புறேன்.

அன்று ஞாயிற்றுக்கிழமை, வீட்டு அழைப்பு மணி ஒலித்தவுடன் பக்கத்தில் படுத்திருந்த கோமதி சாத்திரம் பார்த்தது போல சரியாகச் சொல்லிவிட்டு கீழே இறங்கிப் போனாள்.

இங்கே வாருமப்பா! அவர்களை நிக்கச் சொல்லும், உடுப்பு மாத்திக் கொண்டு வாறன்.

நோக்கப்படாத கோணங்கள்

இன்றைக்கு எங்களுடைய கல்யாண நாள் மாமா, நான் ஒருக்கா கோவிலுக்குப் போட்டு வாறன், பிள்ளை படுத்திருக்கிறாள், எழும்பினால் இந்தப் பாலைக் குடுங்கோ என்ன? ஓடியாறன்.

ஞாயிற்றுக்கிழமை பொழுது விடிந்ததும் விடியாததுமாக குளியல் அறையில் கேட்ட தண்ணீர் சத்தத்துக்கும் சமையல் அறையில் இருந்து வந்த தாளித்த மணத்துக்கும் விடை தெரியாமல் படுக்கையில் கிடந்து தவித்த ஓவிசியர் தணிகாசலம் மருமகள் சியானியை நிமிர்ந்து பார்த்தார். தினமும் இறுக்கமான ஜீன்சும் ரீசேட்டும் என்று பரபரப்பாக இருப்பவள் இன்று பட்டுப் புடவையில் மட்டுமல்ல ஒருவித வெட்கமும் கலந்த தொனியில் சொல்லிவிட்டுத் திரும்பினாள்.

களவு போன கனவு

காலைச் சூரியன் முகம் மலர, எங்கும் படர்ந்திருந்த மார்கழிப் பனி விலக, கதிரவன் தன் இளங்கதிர்களால் ரமேஷின் தலையை செல்லமாக வருடி வாழ்த்தியது. சூரியனின் ஒளி பட்டு கண்கள் கூச, அதற்கு மேலும் தூங்கிக்கொண்டிருக்கமுடியாமல், படுக்கையைவிட்டு எழுந்தான் ரமேஷ்.

நிம்மதியைத்தேடி

காலை மணி 5:40 . ட்ரெயினிலிருந்து வரும் சத்தத்தில் தாம்பரம் இரயில்வே ஸ்டேஷனே அலறியது . வழக்கமாக ஒரு மணி நேரமோ , ஒன்றரை மணி நேரமோ தாமதமாக வரும் ‘ தஞ்சாவூர் பாசஞ்சர் ‘ , இன்று வழக்கத்திற்கு மாறாக வெறும் பத்து நிமிடம் மட்டுமே தாமதமாக வந்தது.

நினைவலைகள்

சுற்றிலும் பச்சைப்பசுமையான வயல்களைக் கொண்ட அந்தப் புளியாநல்லூர் கிராமத்தின் நடுவே வந்து நின்ற பேருந்தில் இருந்நு இறங்கிய சுமதிக்கு தனக்காக அங்கு காத்துக்கொண்டிருந்த தன் அண்ணன் பாலாவை கண்டவுடன் கண் கலங்கியது.

மனதைத்தொட்டவள்!

ராகவன் அந்த பூங்காவில் அமர்ந்து கொண்டிருந்தான். எதிரே விசாலமான கடற்கரை. எங்கும் நீல வன்ணம் தாங்கி ஆர்பரித்துக் கொண்டிருந்தது. அருகே ஒட்டினார்ப்போல வானம் இருண்டிருந்தது. இரண்டிற்க்கும் துளி கூட சம்பந்தமில்லை. ஆனால் இயற்கை அவற்றை இணைத்துப் பார்த்து மகிழ்கிறது.

கபரக்கொய்யா

[மோகவாசல் ரஞ்சகுமாரின் பல சிறு கதைகளைப் படித்திருக்கின்றேன். ஏனோ தெரியவில்லை இக்கதை ஏதோ ஒரு தாக்கத்தை எனது மனதில் ஏற்படுத்திவிட்டது. என்னவாக இருக்கலாம்? நீங்களும் படித்துப்பாருங்கள். இக்கதை இலங்கையின் மலை நாட்டு வாழ்க்கை முறை அறிந்தவர்களுக்கு நிச்சயம் புரியக்கூடும்.]

நந்திதா என்றொரு சடலம்…

கதைக்குள் நுழையும் முன்..

வணக்கம். இக்கதை எனக்குள் நிகழ்ந்துபோன ஓர் வேதனை நிகழ்வு. நமது இந்திய பாரம்பரியத்தில் கற்புக்கு என ஓர் மிகப்பெரிய இடம் இருக்கிறது. அதன் முக்கியத்துவத்தை இந்திய பாரம்பரியத்தின் ஒவ்வொரு வித்தும் தான் இம்மண்ணில் முளைவிடும் முன்னே தெரிந்துகொள்கிறது.