இடைவெளி

சாய்மனைக் கதிரையில் சாய்ந்திருந்த சண்முகத்தார் சுருட்டொன்றை எடுத்து
வாயில் வைத்து ஊதியபடியே வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். சுருட்டின்
புகை சுருள் சுருளாகப் போய்க்கொண்டிருந்தது. சிறிது தூரம் போனபின் அவை
அகன்று பரந்து அப்படியே மறைந்துகொண்டிருந்தது.

மௌனத்தின் எல்லையிலே

வீடு ஒரே கும்மிருட்டாக இருந்தது. உள்ளே போவதற்காக எட்டிப் பார்த்தவளின் மனதிலே அதை எப்படி எடுப்பது என்ற எண்ணமே தோன்றியது. அவளுக்கு உதவுவது போல் அந்தக் கூரையில் இருந்த ஓட்டைகள் மூலம் வந்த நிலவின் ஒளி, வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்தது.

பிஞ்சு மனம்

பாடசாலை விடுமுறை எனவே நிசா நீண்ட நேரம் படுத்திருந்தாள். ”இப்ப டீவீயில நல்ல புரோகிராமுகள் போகும். ஆனா இன்னும் அம்மாவும் அப்பாவும் எழும்பேல்ல. இப்ப நான் டீவியப் போட சத்தங் கேட்டு அம்மா எழும்பினான்டா என்ற கதி அதோ கதிதான். நான் மற்ற நாளையில டேக்கெயருக்கெண்டு போறதால எனக்கு உந்தப் புரொகிராம் எல்லாம் பார்க்கக் கிடைக்கிறேல்லத்தானே.

புத்துணர்ச்சி

பத்திரிகையின் பக்கங்களைப் புரட்டியபடியே சோபாவிலே சாய்ந்திருந்த ரம்யாவின் கண்களிலே அந்த மரண அறிவித்தல் பட்டது. அதிலே அவள் கண்கள் அப்படியே நிலை குத்தி நின்றன. இது நிச்சயமாக அவள்தான். கடவுளே.. .. அப்படி இருக்கக்கூடாது கண்களை அகலத் திறந்தபடி பெயர் ஊரைக் கவனமாக உற்று நிதானமாக வாசித்தாள். ஆமாம் அவள் என் மாணவி தான். அமைதி, அடக்கம், பொறுமையின் சிகரமான அவளுக்கா இக்கதி? நெஞ்சிற்குள் ஏதோ செய்வது போலிருந்தது. இவளால் எப்படி போராட்டத்தில் இணைய முடிந்தது? எப்படி

வெண்புறா

எல்லோரும் இரவோடிரவாக நடந்தார்கள்.
தங்களால் கைகளில் எடுத்துக்கொள்ளக் கூடிய பொருட்களை எடுத்துக் கொண்டு நடந்தார்கள்.
அவர்களில் ஒருத்தியாக ரம்யாவும் நடந்துகொண்டிருந்தாள். அவள் கைகளிலும் சிறிது பொருட்கள் இருந்தன. அவள் எங்கே போகின்றாள்? யாரிடம் போகின்றாள்? அது அவளிற்கு மட்டுமல்ல அதில் போகின்றவர்களிற்கே தெரியாத ஒன்று.
அவர்கள் எல்லோருக்கும் ஒரே பெயர். அது தான் அகதி.

எரிமலை

ஓ இன்று கோகிலாவைப் பெண் பார்க்க வருகிறார்கள். அதுதான் கோகிலாவின் அண்ணி சுதா அவளை அலங்காரம் செய்துகொண்டிருந்தாள்.

கோகிலா அண்மையில்தான் கனடா வந்திருந்தாள். அவள் அண்ணன் ராகவனோ தன் தங்கை மீது உயிரையே வைத்திருந்தான். தன் தங்கைக்காக எதையுமே செய்யத் தயாராக இருந்தான்.

அந்த அழுகையின் அர்த்தம் என்ன?

அந்த மரண வீட்டிலே பெரும் பாலானோர் அப்பிணம் வைத்திருக்கும் இடத்தருகே போய் சிறிது நேரம் நின்று அப்பிணத்தை ஒரு முறை உற்றுப் பார்த்து விட்டு வந்து இருக்கைகளில் அமர்ந்தனர். அவ்வாறு வருபவர்களை அழைத்து வருபவர்கள் அக்குடும்பத்தில் அப்பிணத்திற்குச் சொந்தக் காரர் என்று சொல்லவும் வேண்டுமா?

தவிப்புக்கள்

பிள்ளைகளை நித்திரையாக்கிவிட்டு தன் கணவனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவள் பல்கணியில் போயிருந்தாள். காலநிலை மிகவும் இதமாக இருந்தது. காற்று மெல்லியதாக இதமாக உடலை வருடிக்கொடுத்தது.வசந்த காலம் என்பதால் பல வண்ணங்களிலே பலவிதமான பூக்கள் பூத்துசொரிந்து கொண்டிருந்தன. பட்டமரங்கள் தளிர்விட்டு தாம் இன்னும் உயிருடன் இருப்பதை நினைவு படுத்தின. அவையும் எதிர்பார்ப்புகளுடன் தானே காத்திருந்திருக்கும்…

சுயரூபம்

இன்று மாலதிக்கு விடுமுறை. இன்றாவது சிறிது நேரம் படுத்திருக்கலாம் என்று எண்ணிக்கொண்டுதான் இரவு படுத்தவள். ஆனால் அதிகாலை மூன்று மணிக்கே டெலிபோன் வந்து அவளை எழுப்பிவிட்டிருந்தது. அதன்பின் அவளால் தூங்கவே முடியவில்லை. மனம் இருப்புக்கொள்ளவில்லை. பலமான காற்று வீசும்போது எல்லாமே பறப்பதுபோல நில்லாமல் நீந்திவரும் நினைவலைகளென பலவகையான எண்ணங்கள் அவள் மனத்திரையிலே வந்து வந்து அலைமோதிக்கொண்டிருந்தன. படுக்கையிலே புரண்டு புரண்டு படுத்தாள்.

நீர்க்குமிழி

திண்ணையிலே குந்தியிருந்துகொண்டு முழங்கால்கள் இரண்டையும் தன்னிரு கரங்களினாலும் இறுகக் கட்டிப் பிடித்தபடி முகத்தை அக்கரங்களுக்குள் புதைத்தவளாக சிந்தனைச் சிறகுகளை அகல விரித்துப் பறந்துகொண்டிருந்தாள் மீனா.
மழை விடாமல் பொழிந்து கொண்டிருந்தது. பளிச்சிடும் மின்னல்கள் காது செவிடுபடும் இடிமுழக்கம் முறிந்துவிழுகின்ற மரக்கிளைகள் இவை எதுவுமேஅவளை அசைத்துவிடுவதாக இல்லை. ஆனால்…

காற்றிலாடும் ஜோதி

யமுனாவிற்குத் திருமணமாகி மூன்றே மாதங்கள் தானிருக்கும். வசந்த காலத்தில் பூத்துப் புது மணம் பரப்பும் பூவென மலர்ந்திருந்தாள். ஆமாம் அவளது வாழ்க்கையிலும் புது வசந்தம் வீசிக் கொண்டிருந்தது. தன் எண்ணப்படியே தான் விரும்பிய முரளியையே திருமணமும் செய்து கொண்டாள் யமுனா.

என்னால் முடியும்

தொலைபேசி மணி ஒலித்தது. திடுக்கிட்டு விழித்த பூரணம் அம்மா தன்னை ஒருவாறு சுதாகாரித்தபடி ரிசீவரை எடுத்தார். மறுமுனையில் அவர் கனடா வந்தபின் அவருடன் சினேகிதியாக மாறிய விஜயலட்சுமி எனப்படும் விஜயா தான் எடுத்தாள்.