திரு. முத்து நெடுமாறன் அவர்களின் கருத்து

குறியீடு மாற்றம் என்பது, உடனுக்குடன் நடக்கும் ஒன்றல்ல. இது தமிழுக்கு மட்டும் அல்ல எல்லா மொழிகளுக்கும் பொருந்தும்.

பல தரப்பட்ட குறியீட்டு முறைகளைப் பயன்படுத்திய காலத்தில், தகுதரம் (TSCII) அறிமுகப் படுத்தப்பட்ட போது, அனைவரும் உடனடியாக மாறவில்லை. அந்தக் குறியீடு ஒரு நிலைப்பாட்டிற்கு வந்த பிறகே பலரும், அதிலும் புதியவர்கள் பெரும்பாலோரும், தகுதரத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

திரு. இண்டி ராம் அவர்களின் கருத்து

யூனிகோட் குறியீட்டு தமிழ் (ஒருங்குறித் தமிழ்) நமக்களிக்கப்பட்ட ஒரு வரப்பிரசாதம்.

யூனிகோட் குறியீட்டு வெளிவந்தது தமிழர்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு நல்ல செய்திதான். இதன் மூலம் தற்சமயம் தமிழ் எழுத்துக்கள் ஒரு மாதிரியாகத் தரப்படுத்தப்படுகிறது.

திரு. ஜெயதீபன் (சூரியன்.காம்) அவர்களின் கருத்து

எம் முன்னால் உள்ள தரக் குறியீடுகளில் நியமமாக ஏற்றுக் கொள்ளக் கூடிய பண்புகளை கூடியளவில் கொண்டது யுனிகோடே . இதை நியமமாக்குவதும் நியமமாக்காதுவிடுவதும் பயனாளர்களின் கைகளில் உள்ளது.

திரு. உமர் அவர்களின் கருத்து

யுனிகோடு – என் பார்வையில்
யுனிகோடு பற்றி பேசுபவர்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம்.

1. யுனிகோடு வேண்டும்
2. யுனிகோடு வேண்டாம்
3. யுனிகோடு கடினமானது

திரு. புகாரி அவர்களின் கருத்து

அன்றுதொட்டு இன்றுவரை மாற்றங்களையே நாம் வாழ்வாய்ப் பெற்றிருக்கிறோம்.
இன்று நம் முன் ஓர் இனிப்பான மாற்றம் நம்மை மாறச்சொல்லி அன்புடன்
அழைக்கிறது.

திரு. இராமசாமி அவர்களின் கருத்து

யுனிகோடில் சில கூடுதல் வசதிகள் தேவை!!

அன்பர்களே,

தற்போதுள்ள 16துகள்(bits) யுனிகோடில் ஒரு சில கூடுதல் வசதிகள் செய்தால், பிற்கால நலன் பாதுகாக்கப்படும்.

திரு.அல்பர்ட் அவர்களின் கருத்து

யூனிகோடு – இது ஒரு கோடா? கேடா? ஒரு உரையாடல்”

தணிகாசலம் :
வாங்க…வாங்க…சோணா… எங்க பாக்க முடியறது இல்ல? மடலாடற்குழுக்கள்ல கூட ஒங்களப் பாக்க முடியறதுல்ல?!