எழில்நிலா.காம்

நோக்கப்படாத கோணங்கள்
இன்றைக்கு எங்களுடைய கல்யாண நாள் மாமா, நான் ஒருக்கா கோவிலுக்குப் போட்டு வாறன், பிள்ளை படுத்திருக்கிறாள், எழும்பினால் இந்தப் பாலைக் குடுங்கோ என்ன? ஓடியாறன்.

ஞாயிற்றுக்கிழமை பொழுது விடிந்ததும் விடியாததுமாக குளியல் அறையில் கேட்ட தண்ணீர் சத்தத்துக்கும் சமையல் அறையில் இருந்து வந்த தாளித்த மணத்துக்கும் விடை தெரியாமல் படுக்கையில் கிடந்து தவித்த ஓவிசியர் தணிகாசலம் மருமகள் சியானியை நிமிர்ந்து பார்த்தார். தினமும் இறுக்கமான ஜீன்சும் ரீசேட்டும் என்று பரபரப்பாக இருப்பவள் இன்று பட்டுப் புடவையில் மட்டுமல்ல ஒருவித வெட்கமும் கலந்த தொனியில் சொல்லிவிட்டுத் திரும்பினாள்.இந்தா பிள்ளை கொஞ்சம் நில்லு! என்ற ஓவிசியர் சட்டைப் பையிலிருந்து நூறு டொலர் காசை எடுத்து நீட்டினார்.

வேண்டாம்! இது என்னத்துக்கு மாமா!

இல்லைப் பிள்ளை நல்ல நாள் அதுவுமாய் வேண்டாம் என்று சொல்லாதே பிடி. கவனமாக போட்டு வா! எல்லா இடமும் வழுக்குது.

இவர் போன் பண்ணினால் கோவிலுக்கு போட்டேன் என்று சொல்லுங்கோ மாமா.

ஓவிசியர் சியானி போவதையே பார்த்துக் கொண்டு நின்றார்.

மூன்று வயதில்  குழந்தை இருந்தாலும் அவள் இன்றும் அழகாய்த்தான் இருந்தாள். விரித்துவிட்ட தலையிலிருந்து மழை பெய்து முடிந்ததும் தாழ்வாரத்துக் கிடுகிலிருந்து சொட்டு விழுவது போல முத்துக்கட்டி உருளும் தண்ணீர் அவளின் பின்புறத்து சேலையை இடுப்புவரை நனைத்திருந்தது.

ஓவிசியர் நேற்று உம்முடைய மருமகளைப் பார்த்தேன். சும்மா சொல்லக் கூடாது கடவுள் யாருக்கோ சவால் விட்டுப் படிச்சது போல என்ன வடிவாகப் படைச்சிருக்கிறார்.

மாலை வேளையில் மோலில் கூடும் வயோதிப நண்பர்கள் புகழ்ந்து சொல்லும் போது ஏற்படும் மகிழ்ச்சியை மிசிசாகாவில் இருந்து அவரின் மனைவி பாக்கியம் எடுக்கும் போன் கோல் தவிடுபொடியாக்கி விடும்.

பாக்கியத்துக்கு சியானியைப் பிடிக்காது. கனடாவுக்கு வந்த புதிதில் அவருக்கும்தான் அவளைப் பிடிக்காமல் இருந்தது. ஆனால் என்றைக்கு அவள் யாருக்கும் பயப்படாமல் அந்தக் கருத்தைச் சொன்னாளோ அன்றிலிருந்து அவர் மனதில் அவள் இடம் பிடித்து விட்டாள். ஒரு தரும நியாயம் உணர்ந்த பிள்ளை அவள் என்ற எண்ணமே அவர் மனதெங்கும் வியாபித்து இருந்தது.

இங்கே பாருங்கோ எனக்கு குழந்தையை பார்க்க உதவி இல்லாவிட்டாலும் பரவாயில்லை. மாமி மகளோடை மிசிசாகாவிலும், மாமா மகனோடை ஸ்காபரோவில் என்னுடைய வீட்டிலும் இருக்க ஒருக்காலும் நான் சம்மதிக்க மாட்டன். அது பெரிய பாவம். வயது போன நேரத்திலே அவையை இப்படிப் பிரிச்சு வைக்கிறது அதுகளின்ரை மனதை எவ்வளவு தூரம் பாதிக்கும் என்று அண்ணனும், தங்கச்சியும் யோசிச்சுப் பார்த்தியளோ?

ஏதோ சொத்துப் பிரிக்கிறது போல கதைக்கிறியள்.

மருமகளின் கோபத்தை அன்றுதான் பார்த்தார் ஓவிசியர். பெற்ற பிள்ளைகள் சுயநலத்துக்காக இரக்கம் இல்லாமல் செய்ய நினைக்கும் ஒரு கொடுமைக்கு எதிராக எங்கிருந்தோ வந்த ஒருத்தி குரல் கொடுக்கிறாளே என்று அவர் மனதார சந்தோசப்பட்ட போதுதான் மருமகள் பரிதாபமாகத் தோற்றுப் போனாள். சியானி தோற்றுத்தான் போனாள். அவள் வென்றிருப்பாள் என்று ஓவிசிரியருக்குத் தெரியும். ஆனால் அணுகுண்டு விழுந்த பின்பு உலக யுத்தமும் தான் முடிஞ்சு போச்சே. ஏன் வீரம் குறைந்து போகாவிட்டாலும் விவேகம் குறைந்தவர்களோடு போராடி என்ன பயன்? என்ற நினைப்பில் தானே அது முடிந்து போயிற்று.

என்ன நீர் அப்பாவைக் கலைச்சு விட்டால் விரும்பின ஆட்களைக் கொண்டு வந்து வைத்துக் கூத்தடிக்கலாம் என்று நினைக்கிறீரா? அப்பா இங்கேதான் இருப்பார். சரியோ

தன்னுடைய மகன் யாரை மனதில் வைத்துக் கொண்டு அப்படிச் சொன்னான் என்று அவருக்குத் தெரியும். மனைவி பாக்கியம் மகனும் மருமகளும் வேலைக்குப் போன பின்பு போன் எடுத்து காதிலே பட்டை தீட்டித் தரும் விசயந்தான் அது.

தம்பியைக் கண்டால் முகம் உம்மென்று இருக்கும். அவன் நேத்தன் வர வேணும் அவவின்ரை சிரிப்பென்ன, நெளிப்பென்ன எங்கை தேடிப்பிடிச்சியளோ தெரியாது இப்படியொரு தேவடியாளை. செடியில் பிறந்து கொடியில் விழுந்த கதை மாதிரிப் போட்டுது என்னுடைய பிள்ளையின்ரை வாழ்க்கை. என்ன செய்வம். என்னப்பா ஏதாவது சமைச்சுப் போடுறாளோ இல்லாட்டில் என்ரை பிள்ளையைப் பட்டினி போடுறாளோ? பெடியன் நல்லாக மெலிஞ்சு கொண்டு போகுது.

இல்லையப்பா இவன் தம்பியும் நேத்தன்ரை சிநேகிதத்தை வேலை செய்யுற இடத்தோடை வைச்சிருக்க வேணும்.

ஓவிசியர் பலதடவை பாக்கியத்துக்குச் சொல்ல நினைத்துப் போட்டும் சொல்வதில்லை. பாக்கியம் அப்படியில்லை. எப்ப போன் எடுத்தாலும் இதே பல்லவிதான் பாடும். ஆனால் இன்றைக்கும் கோவிலுக்கு போக முன்பு சியானி சமைத்து வைத்துவிட்டுத்தான் போயிருக்கிறாள்.

இத்தனைக்கும் அவள் வருமான வரித் துறையில் பெரிய வேலையில் இருக்கிறாள். நினைத்தால் பவிசு காட்ட அவளுக்கும் பல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. ஆனால் அப்படி எந்தப் பந்தாவும் இல்லாமல் வேலையால் வந்தவுடனே என்ன மாமா சாப்பிட்டியள்? இவர் போன் அடிச்சவரோ என்றுதான் முதலில் கேட்பாள்.

அப்படிக் கேட்காமல் போனால் கூட யாரும் ஒன்றும் சொல்ல முடியாது. ஆனாலும் அவள் கேட்பாள். விழுந்தடித்துச் சமைப்பாள். தான் சாப்பிடும் போது சாப்பிட அழைப்பாள். எங்கு போவதானாலும் ஒரு வார்த்தை சொல்லிவிட்டுத்தான் போவாள்.

இந்த உண்மையெல்லாம் பாக்கியத்திடம் எடுபடாது. உதெல்லாம் அவளின்ரை நடிப்பு என்று ஒரு வரியில் பாக்கியம் தீர்ப்புச் சொல்லிவிடும்.

ஓவிசியர் திரும்பவும் கட்டிலில் சாய்ந்தார். அவர் மனைவியோடும் எதிர்த்து வாதிடுவதில்லை. ஒருவேளை பாக்கியம் சொல்வதுதான் உண்மை என்ற நிலை வந்தால் என்ன செய்வது என்ற பயம் அவருக்குத் தலை தூக்கும் விதத்திலும் சியானியின் நடத்தைகள் சில சமயங்களில் அமைந்து விடுவதுண்டு.

அன்றும் அப்படித்தான் நடந்து விட்டது. உறவினர்கள் வீட்டுப் பிறந்த நாள். மகன் குடும்பத்தோடு அவரும் மகளோடு பாக்கியமும் என்று கன்னை பிரிந்து வந்து கூடிக்கொண்ட இடம். நேத்தனையும் அங்கு கண்டவுடன் ஓவிசியர் கலங்கித்தான் போனார்.

எப்பவும் அவன் இருக்கும் இடம் சித்திரை மாதத்துப் பனங்கூடல் மாதிரி சலசலப்பாகத்தான் இருக்கும். ஏதாவது ஒரு விசயத்தைப் பற்றி விவாதித்து எப்போதும் கத்திக் கதைப்பது அவனது பழக்கம். அவனோடு சியானியும் சேர்ந்து விட்டால் சனங்களுக்கு சிரிச்சு வயித்து நோ வந்துவிடும்.

ஐயோ இந்தப் பெடியும் வந்திருக்கே. இவள் பிள்ளை சியானி கணவன், மாமன், மாமி என்று எல்லோரும் இருக்கிற இடத்திலே கவனமாக இருந்துவிட வேணும் மனம் பதைத்தது. ஆனால் எல்லாமே அவர் விருப்பத்துக்கு மாறாகத்தான் நடந்தது.

சியானியைக் கண்டவுடன் எல்லாரும் பொறுங்கோ. இங்கே சியானி வந்திட்டுது. சியானியைக் கேட்டுப் பார்ப்போம். சியானி எங்கே நீர் சொல்லும் உலகத்திலே ஆண்களா, பெண்களா தைரியசாலிகள்? நேத்தன் கேட்டான். ஓவிசியர் தலை குனிந்து இருந்தார்.

உலகத்திலே யாரென்று எனக்குத் தெரியாது. ஆனால் உம்மைவிட நான் மனதாலும் பலசாலிதான். உடலாலும் பலசாலிதான்.

அப்படிச் சொல்லும் சியானி என்று ஒரு கூட்டம் சத்தம் போட நேத்தனும் விடவில்லை. சிம்ரன் மாதிரி இருந்து கொண்டு எப்படி நீர் சொல்லுவீர் என்னை விட நீர் பலசாலி என்று சியானி? கேட்டுக் கொண்டே கிட்ட வந்தான்.

அவன் வந்ததும் ஓவிசியர் கனவிலும் நினைக்காத ஒன்றைச் சொன்னாள் சியானி. நேத்தன் உம்மைவிட நான் பலசாலி என்று வாயாலே சொல்லி உமக்கு விளங்கப்படுத்த ஏலாது. இந்த மேசைக்கு கையைக் கொண்டு வாரும். காட்டுறன்.

ஒரு பொம்பிளை இப்படிச் சொன்ன பிறகு இருந்து என்னத்துக்கு அதையும் ஒருக்கால் பார்ப்போமே. வாரும் நேத்தன் வந்து விட்டான்.

சுற்றி நின்று எல்லோரும்  வேடிக்கை பார்க்க குனிந்து மேசையில் முழங்கையை ஊன்றி இருவரும் பலம் பார்த்தார்கள். ஒரு கட்டத்தில் பஞ்சாபி உடையின் மேல் போர்வை விழுந்ததைக் கூட பொருட்படுத்தாமல் நேத்தனுடன் போராடி சியானி வென்றுவிட்டாள்.

எல்லாரும் கைதட்டி ஆரவாரம் செய்ய ஓவிசியர் மனம் மட்டும் நாய்ப் பிறவி என்றது. ஆனால் சியானியோ மௌனமாக சிரித்துவிட்டுப் போய் கணவனின் அருகே அமர்ந்து விட்டாள்.

ஓவிசியர் பாக்கியத்தை பார்த்தார். அவள் கோவத்தில் சிவந்து போயிருந்தாள்.

பத்துப் பேருக்கு முன்னாலே ஒரு இளந்தாரிப் பொடியன்ரை கையைப் பிடித்து வளைக்கிறாள். நெஞ்சுச் சட்டைக்குள்ளாலே எல்லாம் தெரியுது. ஒரு வெட்கம் வேண்டாம். என்னுடைய பிள்ளையாய் இருக்க வேணும் கொள்ளிக் கட்டை எடுத்துச் சூடு போட்டிருப்பன். களிசறைப் பழக்க்கம். அப்பாவும் மகனும் பார்த்துச் சிரிச்சுப் போட்டு வாறியள் என்ன?

சரி சரி பத்துப் பேருக்கு முன்னாலே தானே அப்படிச் செய்தாள். தனியச் செய்யல்லே தானே. இவன் தம்பி இருந்தவன் அவன் பெரிசு படுத்தல்லே. நீ ஏன் துள்ளி விழுகிறாய்? விடு

அரைமனதுடன் பாக்கியத்தை போனில் சமாதானம் செய்த ஓவிசியர் இது கொஞ்சம் அதிகம் என்றுதான் நினைத்தார். அதற்குப் பின்பும் சில நிகழ்வுகள் அவருக்குப் பிடிக்காமல் தான் இருந்தன. மாலை வேளைகளில் நேத்தன் வீட்டுக்கு அடிக்கடி வாறதும், மணிக்கணக்காக சியானி சிரித்துச் சிரித்து பேசுவதும் கூட அவருக்கு உடன்பாடற்ற விடயங்கள் தான்.

அதனால் மாலை வேளைகளில் தான் வெளியே போவதைக் கூட அவர் குறைத்துக் கொண்டு விட்டார். அது பற்றி சியானியோடு பல முறை கதைக்க நினைத்த போதும் சியானி மகளில்லை. மருமகள் கவனமாகப் பேச வேண்டும். கன குடும்பங்களிலே இந்த வித்தியாசம் விளங்கிக் கொள்ளப் படாத படியால் தான் நிறையப் பிரச்சனை என்ற எண்ணம் ஏற்பட்டு அவருக்கு தடை போட்டு விடும்.

போன் மணி ஒலித்தது. பாக்கியம் தான். சொல்லு என்றார். இல்லே தம்பிக்கு இன்றைக்கு கல்யாண நாள். அதுதான் ஒருக்கால் கதைப்பம் என்று எடுத்தனான். நிக்குதே.

அவன் விடிய வேலைக்குப் போட்டான். சியானியும் கோவிலுக்குப் போட்டுது. கொஞ்சம் செல்ல எடு.

ஏனாம் கோவிலுக்கு? நேத்தன் சட்டை இல்லாமல் பஜனை பாடுறதை இரசிக்க போறாவாமோ??

உன்னோடை கதைக்கேலாதப்பா போனை வை.

போனை வைத்துவிட்டுத் திரும்பிய ஓவிசியர் குழந்தையை வலுக்கட்டாயமாக எழுப்பிப் பால் கொடுத்தார். உறக்கம் குழம்பியதாலோ என்னவோ அது தொடர்ந்து அழுதது. தூக்கி விளையாட்டுக் காட்டினார். அதற்குள் சியானியும் வந்துவிட்டாள்.

அவள் முகம் வியர்த்திருந்தது. குழந்தையை வாங்கிக் கொண்டு மேலே போனாள். போகும் போது மாமா கோயில்லே இருந்து பிரசாதம் கொண்டு வந்தனான். மேசையிலே இருக்கு எடுங்கோ என்றாள்.

போன் திரும்பவும் ஒலித்தது.

மாமா நான் எடுக்கிறேன் என்றாள் சியானி. அது நேத்தனின் நம்பர்தான்.

ஓவிசியருக்கு மனம் இருப்புக் கொள்ளவில்லை. கீழே அவரும் எடுத்து விட்டார்.

சியானி நான் கேட்டது கோவமா?

இல்லே.

அப்ப ஏன் ஒன்றும் சொல்லாமல் போட்டீர்?

அது கோவில். பதில் சொல்கிற  இடம் இல்லை.

அப்பெடியென்றால் சியானி இப்ப சொல்லும்.

நான் என்னுடைய கணவருக்கு நல்லதொரு மனைவியாகவும் என் குழந்தைக்கு ந்ல்ல அம்மாவாகவும் தான் இருக்க ஆசைப்படுகிறன். யாருக்கும் வைப்பாட்டியாக இருக்க நினைக்கல்லே. அது எனக்கு விருப்பமும் இல்லை. அவ்வளவுதான்.

சியானி நீர் என்னோட கதைச்ச கதைகள் பழகிய விதம் எல்லாம் என்னுடைய மனதில் அப்படி ஒரு எண்ணத்தை  ஏற்படுத்திப் போட்டுது. அது தப்பு என்று இப்ப நினைக்கிறேன்.

நேத்தன் ஊரிலே பார்த்திருப்பீர். ரையில் தண்டவாளத்திலே ஓடுது. பக்கத்திலே கைகாட்டி மரம் நிக்குது. கைகாட்டி கை காட்டுறதோட நிக்க வேணும். ரையிலே பயணம் செய்ய ஆசைப்படக் கூடாது. ஆசைப்பட்டால் இரண்டுக்கும் நல்லதில்லை. அந்தப் பிரண்ஷிப்புக்கும் அர்த்தம் இல்லை. நான் சொல்லுறது உமக்கு விளங்கும் என்று நினைக்கிறேன்.

என்னை மன்னித்துக்கொள்ளும் சியானி.

ஏய்! நேத்தன் என்ன படங்களிலே வாற மாதிரிக் கதைக்கிறீர்? நான் மனதிலே ஒன்றும்  நினைக்கல்லே. இங்கே பாரும். இன்றைக்கு என்னுடைய கல்யாண் நாள். நல்ல மரக்கறி எல்லாம் சமைச்சு வைச்சிருக்கிறேன். மனதிலே இருந்து இந்தக் குப்பைகளை எல்லாம் கூட்டி ஒதுக்கிப் போட்டுச் சாப்பிட வாரும் என்ன?

போனை வைத்து விட்டாள் சியானி.

ஓவிசியர் மனதில் ஆயிரம் சிந்தனைகள். எங்கள் கலாச்சாரத்திலே எத்தனை அடிதடிகளுக்கும் கொலைகளுக்கும் குடும்பப் பிரிவுகளுக்கும் காரணமான அதே பிரச்சினை ஒன்றை எவ்வளவு இலகுவாக இங்கே ஒரு சிறு பெண்ணால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு விடுகின்றது. இந்தத் தீர்வுக்கு திருக்குறள் காரணமா? இல்லைத் திருவாசகம் காரணமா? எதுவும் இல்லையே.

புகுந்த நாட்டிலே கைப்பற்றிக் கொண்ட கலாச்சாரத்தின் விளப்பத்தினால் தானே வாழ்க்கையிலே இப்படியான பிரச்சினைகளை சந்திக்க  வேண்டியும் இருக்கும் இது சகஜம் என்று நினைத்துக் கண்ணைக் கசக்காமல் கணவனிடம் சொல்லாமல் சியானி தானே பிரச்சினையைத் தீர்த்துக் கொண்டாள். அப்படி இல்லாமல் அவள் கண்ணகி வேடம் போட்டு நீதி கேட்டிருந்தால் தொடர் பகைதானே மிஞ்சியிருக்கும்.

உடையிலும், உருவத்திலும் மாற்றம் ஏற்படும் போது கலாச்சாரம் அழிகிறது என்று முதலைக் கண்ணீர் வடிக்கும் எம்மவர்கள் உள்ளத்தில் ஏற்படுகின்ற இந்த வலுவான அக மாற்றங்களைக் கண்டும் ஏன் மௌனமாக இருந்து விடுகிறார்கள். ஏன் இந்தக் கோணத்தில் பார்க்க மறுக்கிறார்கள்?

மாமா பிரசாதம் எடுத்தியளோ என்றாள் சியானி.

மகளே நீதான் எனக்கு இறைவன் தந்த மிகப் பெரிய பிரசாதம் என்றார் ஓவிசியர்.

- இரா சம்பந்தன்

புதிய மாற்றங்களுடன் பயர்பாக்ஸ் பதிப்பு 4
மொஸில்லா நிறுவனம் தன் பயர்பாக்ஸ் தொகுப்பின் புதிய பதிப்பினை (பதிப்பு 4.0.) பல மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளது. இனி வரும் பயர்பாக்ஸ் பிரவுசர் பதிப்புகள், இந்த புதிய கட்டமைப்பில் தான் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு சோதனை பதிப்புதான். யார் வேண்டுமானாலும் இதனை டவுண்லோட் செய்து பயன்படுத்தி, இதன் நிறை மற்றும் குறைகள் குறித்து மொஸில்லாவிற்குத் தெரிவிக்கலாம். முழுமையான பதிப்பு இந்த ஆண்டின் இறுதியில் வெளியிடப்படலாம். இதன் புதிய சிறப்பம்சங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.1.புதிய ஆட் ஆன் மேனேஜர்: கூடுதல் வசதிகள் தரும் ஆட் ஆன் தொகுப்புகளுக்குப் பயர்பாக்ஸ் பிரவுசர் புகழ்பெற்றது. இவற்றைத் தனியே வைத்து நிர்வகிக்க புதிய வசதி தரப்பட்டுள்ளது. புதிய ஆட் ஆன் தொகுப்புகளை, நமக்கேற்ற வகையில் பிரவுசருடன் இணைக்கவும், தேவைப்படாத போது நீக்கவும் வழி தரப்பட்டுள்ளது. இருப்பினும் இது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இறுதி வெளியீட்டின்போது இதன் முழுமையான பயன்பாட்டு வடிவம் கிடைக்கும்.

2. வெப்–எம் பார்மட்: ஹை டெபனிஷன் வீடியோ எனப்படும் உயர் வகை வீடியோ காட்சிகளை பிரவுசரில் யு–ட்யூப் வழியாகக் காண, எச்.டி. தன்மையுடன் கூடிய எச்.டி.எம்.எல். 5 வீடியோ தரப்பட்டுள்ளது.

3. தனிநபர் தகவல்கள் பாதுகாப்பு: மொஸில்லா எப்போதும் தன் வாடிக்கையாளர்களின் தனி நபர் தகவல்களைக் காப்பதில் முன்னுரிமை தரும். ஏற்கனவே உள்ள பிரவுசர் ஹிஸ்டரியில் பயன் படுத்தப்பட்ட வெப் வரையறைகள், பெர்சனல் தகவல்களைக் காப்பதில் சில குறைகளைக் கொண்டிருந்தது. அது முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. 4.முடங்கிப் போகாது: பிரவுசரின் ப்ளக் இன் புரோகிராம் ஏதேனும் கிராஷ் ஆனால், பிரவுசரின் இயக்கம் முழுமையாக நின்று போய், மீண்டும் இயக்க வேண்டிய நிலையில் பிரவுசர் முடங்கிப் போகும். தற்போது இது களையப்பட்டுள்ளது. தொடர்ந்து தடையின்றி இன்டர்நெட் தேடலை மேற்கொள்ளலாம். அந்த பக்கத்தை மட்டும் மீண்டும் திறந்தால் போதும்.

5. இயங்கு திறன்: பயர்பாக்ஸ் பிரவுசர் முதலில் தொடங்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது என்பது பலரின் குற்றச்சாட்டாக இருந்து வந்தது. இதனையும், இணையப் பக்கங்கள் இறக்கிக் காட்டப்படும் நேரத்தினையும் மொஸில்லா கணிசமாகக் குறைத்துள்ளது.

6.தோற்றம்: பிரவுசரைத் திறந்தவுடனேயே நம் கண்ணில் படுவது அதன் புதிய தோற்றமே. இணையத் தளங்களில் உள்ள தகவல்களுக்கு அதிக இடம் தரும் வகையில் டேப்கள் மேலே கொண்டு செல்லப்பட்டுள்ளன.

பயன்படுத்துபவரை வழி நடத்தும் இன்டர்பேஸ் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது. இந்த வகையில் ஆப்பரா மற்றும் கூகுள் குரோம் பிரவுசர்களில் காணப்படும் சில அம்சங்களை, மொஸில்லா புதிய பதிப்பில் கொண்டு வந்துள்ளது எனக் கூறலாம். பல புதிய பட்டன்களும், ஒருங்கிணைந்த மெனுவும் தரப்பட்டுள்ளது. மெனுக்கள் அனைத்தும் பயர்பாக்ஸ் என்ற இடது ஓரம் உள்ள பட்டனுக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. கூகுள் குரோம் பிரவுசரில் இருப்பதைப் போல, டேப்கள் அனைத்தும் மேலாக நிறுத்தப் பட்டுள்ளன. கூகுளின் பிரவுசரில் இவை வட்டமாக இருக்கின்றன. இங்கே சரியான சதுரமாக உள்ளன. இருப்பினும் மெனுபார் தொடக்கத்தில் மறைத்துவைக்கப்படுகிறது. பயன்படுத்துபவர் விரும்பினால், அதனை பழைய பதிப்புகளில் இருந்தாற்போல வைத்துப் பயன்படுத்தலாம்.

7.புக்மார்க் பட்டன்: சர்ச் பாக்ஸுக்கு அடுத்தபடியாக, புக்மார்க் பட்டன் தரப்பட்டுள்ளது. இதில் கிளிக் செய்வதன் மூலம், அனைத்து புக்மார்க்குகளும் போல்டர்களும் நமக்குத் தேடிப் பார்க்க கிடைக்கின்றன. 8. தேவையான டேப் கிடைக்க: பல டேப்களைத் திறந்து வைத்து, பிரவுசரை இயக்குகையில், நாம் செல்ல விரும்பும் தளம் எந்த டேப்பில் உள்ளது என்பதைக் காண நமக்குச் சிறிது நேரம் எடுத்துக் கொள்ளும். இதற்கான ஒரு தீர்வை இந்த பதிப்பு கொண்டுள்ளது. ஸ்மார்ட் லொகேஷன் பாரில், விரும்பும் தள முகவரி அல்லது அதன் தலைப்பு பெயரினை டைப் செய்து நேரடியாகவும், விரைவாகவும் அந்த தளத்திற்குச் செல்லலாம்.

9.விண்டோஸ் 7 ஒருங்கிணப்பு: இந்த புதிய பதிப்பு விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் முழுமையான முறையில் இயங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. டேப்களின் பிரிவியூ மற்றும் ஜம்ப் லிஸ்ட் இதிலும் தரப்பட்டுள்ளது. டேப் பிரிவியூவில் திறக்கப்பட்டுள்ள அனைத்து தளங்கள் குறித்த தகவல்களைப் பார்வையிடலாம். ஜம்ப்லிஸ்ட் மூலம் அடிக்கடி திறந்து காணும் தளங்களுக்கு எளிதாகச் செல்லலாம்.

10. வேகம்: குரோம் மற்றும் ஆப்பராவுடன் ஒப்பிடுகையில், இந்த பதிப்பின் வேகம் குறைவாகவே உள்ளது. ஆனால் முந்தைய 3.6 பதிப்பினைக் காட்டிலும் வேகம் கூடுதலாக உள்ளது.

இந்த பதிப்பு குறித்த வீடியோ காட்சி ஒன்றினை http://videoscdn.mozilla.net/firefox4beta/ Firefox_4_beta. webm  என்ற முகவரியில் மொஸில்லா வெளியிட்டு ள்ளது. புதிய சோதனைப் பதிப்பினை  http://www.mozilla.com/enUS/firefox/beta/ என்ற முகவரி யில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த சோதனைப் பதிப்பில் இருக்கும் அனைத்தும், இறுதியாக வெளியிடப்படும் தொகுப்பில் கிடைக்கும் என்று உறுதி கூற முடியாது. இதனைப் பயன்படுத்து பவர்களின் கருத்துக்களின் அடிப்படை யிலேயே இறுதி வடிவம் முழுமையாக்கப்படும் என மொஸில்லா அறிவித்துள்ளது.

நன்றி: தினலர் கம்யூட்டர்மலர்

குறை சொல்ல முடியாத குற்றங்கள்!
இயக்க ஆட்கள் காசுக்கு வந்திருக்கினம் போல கிடக்குது. நீங்கள் கீழே வராதையுங்கோ நான் ஏதாவது சொல்லி அனுப்புறேன்.

அன்று ஞாயிற்றுக்கிழமை, வீட்டு அழைப்பு மணி ஒலித்தவுடன் பக்கத்தில் படுத்திருந்த கோமதி சாத்திரம் பார்த்தது போல சரியாகச் சொல்லிவிட்டு கீழே இறங்கிப் போனாள்.

இங்கே வாருமப்பா! அவர்களை நிக்கச் சொல்லும், உடுப்பு மாத்திக் கொண்டு வாறன்.

அவங்கள் மனுசிமாரையும் வேலைக்கு விடாமல் ஐந்தாறு அறைகளிலே வீடும் வாங்கிக் கொண்டு புதுப் புதுக் கார்களிலே திரியட்டும். நீங்கள் வீட்டிலே நிற்க நேரமில்லாமல் ஒன்றுக்கு மூன்று வேலை செய்து அவையளுக்கு அறுத்துக் கொண்டு இருங்கோ. போங்கோ என்னவாச்சும் செய்யுங்கோ.

கோமதி திரும்பி வந்து முகத்தை மூடிக்கொண்டு படுக்கையில் விழுந்தாள். தில்லைநாதன் பெருமூச்சு விட்டார். எந்த வீட்டிலும் இயக்கத்துக்குக் கொடுக்கக் கூடாது என்று யாரும் சொன்னது கிடையாது. ஆனால் இவர்களுக்கு கொடுக்கப் படாது. இதுதான் பிரச்சினை ஏன்?

தில்லையார் கீழே வந்து கதவைத் திறந்தார். மூன்று பேர் குளிரில் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் கையில் இயக்கம் தொடர்பான ஆவணங்கள் நிறைய இருந்தன. தெருவோரத்தில் அவர்கள் வந்த வீ. எம். டபுள்யூ வாகனம் தில்லையாரின் காரிலிருந்து இரவு முழுவதும் ஒழுகி ஓடிய கறுத்த எஞ்சின் ஒயிலின் மேல் ஏறி நின்றது.

உள்ளே வாங்கோ தம்பி என்றார் அவர். உள்ளே வந்தவர்கள் இருக்கத் தயங்கினார்கள். நின்று கொண்டே பேசினார்கள். நாட்டு நிலைமைகள் தெரியும்தானே. இறுதிப் போருக்கு வெளிநாட்டிலே இருப்பவர்கள் பெரிய அளவில் உதவி செய்ய வேண்டும் என்று ஊரிலே எதிர்பார்க்கினம். அதுதான் நாங்கள் எல்லாத் தமிழ்க் குடும்பங்களையும் சந்திச்சுக் கொண்டு வாறம் என்றார் ஒருவர்.

இது இறுதி யுத்தம் என்றபடியால் நூறு, இருநூறு குடுத்துப் பிரயோசனம் இல்லை. பெரிசாக நீங்கள் ஏதாவது செய்தால் தான் நல்லது என்றபடியே பத்திரிகையும் சில துண்டுப் பிரசுரங்களும் என்று நீட்டினார் இன்னொருவர். தில்லையார் பேசாமல் வாங்கிக் கொண்டு அவர்களைப் பார்த்தார்.

அவர்களின் கைகளில் பல மோதிரங்கள் தெரிந்தன. புத்தம் புதுச் சட்டைக்குள் இருந்து கையில் விலை உயர்ந்த மணிக்கூடு அடிக்கடி வெளியே தெரிந்தது. தலையைத் திருப்பும் போது கழுத்திலே தாலிக்கொடி போன்ற தங்கச் சங்கிலியும் கண்டார் தில்லைநாதன்.

அவருக்குத் தன் மகள் பெரிய பிள்ளை ஆன போது ஒரு சங்கிலி போடுவதற்குப் பட்ட துன்பம் ஞாபகத்துக்கு வந்தது. பழைய எழுத்து மோதிரம், உடைந்த தோடு என்று பொறுக்கி எடுத்து செய்து பெரிதாகப் போட்ட சங்கிலி இப்போது பிள்ளை வளர்ந்து விட்டதால் அட்டியல் போல சிறுத்து விட்டது. பிள்ளை ஞாபகம் வரும்போது கேட்கும். பொறம்மா, அப்ப்பாவுக்கு வருமான வரிக்காசு வரட்டுக்கும் வாங்கித்தாறன் என்று மூன்று வருடங்களாக அவர் சொல்லிக் கொண்டு வருகிறார்.

என்ன யோசிக்கிறியள் என்றார் வந்தவர்களில் ஒருவர்.

ஒன்றுமில்லைத் தம்பி, நீங்கள் தேசியக் குற்றம் ஒன்று செய்யுறியள். இயக்க எதிர்ப்பாளர்களுக்கு அது பிடிக்கும். நீங்கள் அப்படித்தான் நடப்பது நல்லது என்று அவர்கள் நினைப்பார்கள். ஆனால் நாட்டையும் விடுதலை இயக்கத்தையும் நேசிக்கிற என் போன்றவர்களுக்கு அது சங்கடமாக இருக்கிறது. உங்களுக்கு ஒரு கதை சொல்லுறன்.

தியாகராசா சாமியார் என்று எங்கள் ஊர் பெரியவர் ஒருவர் ஊரிலே இருக்கிற கோயில் ஒன்றுக்கு திருப்பணி செய்ய இங்கே என்னிடம் காசுக்கு வருவார். ஆளைப் பார்த்தால் சைவப் பழமாக இருப்பார். தேவார திருவாசகம் பற்றித்தான் வந்தால் கதைப்பார். திருநீறு தருவார். சிறு சிறு சமயப் புத்தகங்கள் தருவார். என்னுடைய மனைவி கோயில் காரியம் என்று நிறையப் பணம் கொடுத்தா. போன வருடம் எனது தகப்பனார் இறந்த போது நான் ஊருக்குப் போன சமயம் தான் கோவில் திருப்பணிக்கும் சாமியாருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று தெரிந்தது.

அதே நேரத்தில் உங்களுக்கு நான் தந்த பணம் இரண்டாயிரம் மட்டிலே அங்கே கிடைத்ததாக சொன்னார்கள். ஒரு சதமும் பிழைக்கவில்லை. அப்படி இருந்தும் உங்களுக்கு நான் பணம் தருவதில் என் மனைவிக்கு உடன்பாடில்லை என்ன காரணம்? தயவு செய்து அதுக்கு அரசியல் அறிவு இல்லை என்று மட்டும் சொல்லிப் போடாதையுங்கோ.

ஒரு கேள்வியோடு அவர்களைப் பார்த்தார் தில்லையார். அவர்கள் சிரித்தார்கள்.

காசு ஊரிலே கிடைச்சிட்டுது என்றும் சொல்லுறியள். தரமாட்டோம் என்ற மாதிரியும் கதைக்கிறியள். எங்களுக்கு ஒன்றுமாய் விளங்கேல்லை என்றார்கள்.

தம்பிமார்! இந்த நாட்டிலே பெரிய ஆட்கள் எல்லாரும் தமிழன் என்ற சுவடு தெரியாமல் இருக்கிறார்கள். நடுத்தர வர்க்கமும், கீழ்மட்டத்தில் உள்ளவர்களும் தான் குருவி தானியம் சேர்ப்பது போல தேடிய காசிலே உங்களுக்குத் தந்து கொண்டு இருக்கிறம். இதிலே பெரும்பாலானவர்கள் சராசரி இதயமுள்ளவர்கள். அவர்களுக்கு முன்னாலே இப்படியான வாகனங்களிலே நீங்கள் வரலாமா? அப்படி வந்தால் சந்தேகம் வராதா?

ஐயா! ஐயா! பொறுங்கோ என்று இடைமறித்தார் ஒருவர். எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை ஆராயாதையுங்கோ. நாங்கள் என்ன தொழில் செய்யுறோம். வருமானம் என்ன? எவ்வளவு காசுக்கு வாகனம் வைத்திருக்கிறோம் அதெல்லாம் உங்களுக்குத் தேவையில்லாத விசயம். நீங்கள் தருகிற பணம் ஊருக்குப் போய்ச் சேர்ந்ததா இல்லையா? என்று மட்டும் பாருங்கோ என்றார் அவசரமாக.

இப்போது காசு சேர்ப்பதிலே உள்ள சட்டரீதியான ஆபத்துக்கள் எல்லாம் உங்களுக்குத் தெரியும். வாழ்க்கையைப் பணயம் வைத்து இயங்குகிற எங்களை இப்படிக் கொச்சைப் படுத்திக் கதைக்காதையுங்கோ. ஒன்றுமே செய்யாமல் இருக்கிறவர்களை விட நாங்கள் நாட்டுக்காக ஏதோ செய்யுறோம் என்றார் இன்னுமொருவர்.

இல்லைத் தம்பி நீங்கள் செய்யுறது பிழை. குறை சொல்ல முடியாத குற்றம். பனைக்குக் கீழே இருந்து பாலைக் குடித்தாலும் அது கள்ளு  என்றுதான் ஆட்கள் நினைப்பினம். இந்த வாகனத்திலே நீங்கள் கல்யாண வீட்டுக்கு போங்கோ, கோவிலுக்குப் போங்கோ, படத்துக்குப் போங்கோ. அது உங்களுடைய தனிப்பட்ட விசயம். ஆனால் காசு கேட்டு வராதையுங்கோ. காசு கேட்டு வாறதுக்கு ஒரு முறை இருக்கு.

தம்பி! ஐந்து டொலருக்கு வாங்கிய மீனையே நல்லதோ என்று பத்துத்தரம் காதுப் பூவை திறந்து பார்க்கிற எங்கள் சனங்கள் ஐந்நூறு டொலரைத் தந்துவிட்டு உங்களை எப்படியெல்லாம் கவனிப்பார்கள் என்று நினைத்துப் பாருங்கோ.

அதனாலேதான் சொல்லுறன் கவனமாக நடவுங்கோ. இன விடுதலைக்குப் பாடுபடுகிறது என்பது ஒரு தெய்வீகத் தொண்டு மக்காள். இன விடுதலைக்குப் பாடுபடுகிறோம் என்று சொல்லிக் கொண்டு இங்குள்ள மக்களுக்கு முன்னால் பவிசு காட்டி மக்களையும் விடுதலையையும் அந்நியப்படுத்தி விடாதையுங்கோ தம்பி!

உங்களுக்கு நான் தந்த காசை விட தியாகராசா சாமியாருக்கு என் மனைவி கொடுத்த பணம் அதிகம். அது ஊர் போய்ச் சேரவில்லை என்பது வேறு விடயம். ஆனால் கேட்டால் மறுக்காமல் கொடுக்கக் கூடிய எண்ணத்தை ஏற்படுத்தும் தோற்றத்தில் அவர் இருந்தார்.

அதுக்காக கையில் நீங்கள் ஆயுதம் வைத்திருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. ஊரிலே அல்லல் படும் எங்கள் உறவுகளின் அவலத்தை எடுத்துக் காட்டுவதாக உங்கள் தோற்றங்கள் அமையட்டும். உங்கள் கண்களிலே ஈழத்தின் ஏக்கம் தெரியட்டும்! உங்கள் வாழ்க்கை முறையிலே ஒரு எளிமை தெரியட்டும். கையிலே உள்ள பத்திரிகைகள் மட்டும் உங்களை இயக்க வாதிகள் என்று காட்டிக் கொண்டால் போதாது.

பணம் கேட்டு நீங்கள் செல்லுகின்ற வீடுகளில் ஐயோ! ஊருக்கு அனுப்புவது இருக்கட்டும் முதலில் நீங்கள் இந்த உடுப்பை மாற்றுங்கோ, சாப்பிடுங்கோ என்று உங்களைக் கண்டு வேதனையில் நெஞ்சு பதறுகின்ற இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கோ தம்பி. உங்களைக் கண்டு ஒளிக்கிற நிலையை இனிமேல் வைக்காதையுங்கோ.

ஐயா! இப்ப ஊர் இருக்கிற நிலையிலே உண்மையான இன உணர்வு உள்ளவன் உங்களைப் போல இவ்வளவு நேரம் கதைச்சுக் கொண்டு இருக்க மாட்டான். ஏதாவது உதவி செய்யத்தான் பார்ப்பான் என்றார் இதுவரை கதைக்காத மூன்றாவது மனிதர். அவரின் பேச்சுத் தொனியிலே நீ யார் எங்களுக்கு உபதேசம் பண்ண? என்ற கேள்வியும் கலந்து கிடந்ததை தில்லையார் உணராமல் இல்லை.

தில்லையார் சிரித்தார். அம்மா, அப்பா, படிப்பு, காதல் கல்யாணம் என்று எல்லாத்தையும் துறந்து அந்தப் பிள்ளைகள் களத்திலே நின்று போராடுதுகள். கேவலம் நீங்கள் சொகுசு வாழ்க்கையைத் துறக்க முடியாமல் கஸ்டப்படுகிறியள் இல்லே. இப்படித்தான் வருவோம். நீங்கள் மறு பேச்சு  பேசாமல் காசு தர வேணும் என்று நினைக்கிறதும் கூட தமிழ்த் தேசியத்துக்கு நல்லதில்லே.

இந்தாங்கோ தம்பி இதிலே இருநூறு டொலர் இருக்கு. ஆயிரம்  டொலர் தருகிற பத்து வீட்டுக்குப் போக ஆசைப்படாதையுங்கோ. பத்து டொலர் தாற ஆயிரம் வீட்டுக்கு போங்கோ. அதுதான் தமிழ்த் தேசியத்துக்கு நல்லது. இன்னும் இரண்டொரு மாதத்திலே வாங்கோ. கனக்க இல்லை இருநூறு தான் தருவேன். இந்தக் காசு எவ்வளவோ சிரமத்துக்கு மத்தியிலே தான் தாறன். உங்களைக் கன நேரம் மினக்கெடுத்திப் போட்டேன். ஏதோ சொல்ல வேண்டும் போல இருந்தது. உங்களுக்குச் சொல்லாமல் நாலு நாலு பேராய்க் கூடி எங்களுக்குள்ளே கதைக்கிறதிலே ஆகப்போறது ஒன்றுமில்லை. சரி தம்பியவை போட்டு வாங்கோ.

தில்லையார் வாசல் கதவைத் திறந்து அவர்களை வழியனுப்பி விட்டு அவர்களின் வாகனம் செல்வதையே பார்த்துக் கொண்டு நின்றார். அதன் சக்கரங்களில் ஒன்று ஒழுகிய ஒயிலைத் தொட்டு வீதியில் சிறிது தூரத்துக்குத் தடவிக் கொண்டு சென்றது.

ஐயா! உங்களுடைய காரா ஒயில் ஒழுகுது? எங்களுடைய கராச்சுக்கு கொண்டு வாங்கோ. கூலிக்காசு இல்லாமல் செய்து தாறம். இப்படி அவர்கள் சொல்லிவிட்டுப் போயிருந்தால்!

அவர்கள் சொல்லவே இல்லை. அதற்கான வசதிகளும் அவர்களிடம் இல்லை. சொல்லப் போனால் இப்படியான சின்னச் சின்ன அணுகு முறைகளினால் தமிழ் மக்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற சிந்தனை கூட அவர்களிடம் இல்லை.

ஈழ விடுதலை இலட்சியத்தை அடைய போடப்பட்ட  நெடுஞ்சாலைக்கு கூட நாம் இன்னும் செல்லவில்லை. நெடுஞ்சாலையை அடையும் குறுக்கு றோட்டில் நின்று கொண்டுதான் கும்மாளம் அடிக்கிறோம். நெடுஞ்சாலையை அடைவது எப்போது? இலட்சியத்தை அடைவது எப்போது?

தில்லையார் கண்கள் பனிக்க படியில் ஏறி மாடிக்குச் சென்றார். பெரிய வள்ளல் காசு கொடுத்து வழி அனுப்பிப் போட்டு வாறார். வாற கிழமை வீட்டுக் காசு திரும்பட்டும் பிறகு கதைக்கிறன் என்றாள் கோமதி.

இரா சம்பந்தன்

பேஸ்புக்கிற்கு போட்டியாக வருகிறது ‘கூகுள் மீ’
சோசியல் நெட்வொர்க் இணையதளங்களில், ஆரம்பித்த சில நாட்களிலேயே அசுர வளர்ச்சி பெற்றுள்ள பேஸ்புக்கிற்கு போட்டியாக, கூகுள் நிறுவனம் ‘கூகுள் மீ’ என்ற பெயரில் புதி‌ய இணையதளத்தை துவக்க உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தி்த்த டிக் நிறுவனர் கெவின் ரோஸ், இந்த செய்தியை நம்ப முடியவில்லை எனினும், நம்பத்தகுந்த இடத்திலிருந்து இந்த தகவல் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தொழில்நுட்ப இணையதளங்களான மாஷபிள் மற்றும் டெக்கிரஞ்ச் உள்ளிட்ட தளங்களும் இந்த தகவலை உறுதி செய்துள்ளன.

கூகுள் நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாகவே, விரைவில் ‘கூகுள் மீ’ இணையதளத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதுகுறித்த ஆய்வுகள், தென் ஆப்ரிக்காவின் டப்ளின் நகரில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்று வருவதாக டெக்கிரஞ்ச் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழில் இணையத்தள முகவரி : முதல் தடவையாக இலங்கை சாதனை!
உலக இணையத்தள வரலாற்றில் முதன் முறையாக இணையத்தள முகவரிகளை தாய்மொழியில் பயன்படுத்தும் சந்தர்ப்பம் இலங்கைக்கு கிட்டியுள்ளது. இந்த வாய்ப்பினைப் பெறுவதற்கு ‘அய்கன்” (ICANN) நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது .இணையத்தள முகவரியை சிங்களத்தில் ‘லங்கா’ என்றும் தமிழில் ‘இலங்கை’ என்றும் நாம் பதிந்து கொள்ள இதன் மூலம் எமக்கு வாய்ப்பேற்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி இதற்கான அனுமதியை ‘அய்கன்” (ICANN) வழங்கியதை அடுத்து இத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வைபவம் நேற்று 28 ஆம் திகதி கல்கிசை ஹோட்டலில் இடம்பெற்றது.

‘அய்கன்’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் Internet Corporation for Assigned Names and Numbers நிறுவனம் இணையத்தள முகவரிகளைப் பதிவுசெய்து பாதுகாக்கும் இலாபகரமற்ற அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மரினா டெல் ரே (Marina Del Rey) நகரத்தை தலைமைப் பீடமாக கொண்ட நிறுவனமாகும்.

‘இலங்கை” மற்றும் ‘லங்கா” முதலான இணையத்தள முகவரியை பெற்றுக் கொள்வதாயின் www.nic.lk என்ற இணையத்தள முகவரி மூலம் பெற்று கொள்ளலாம்.

இந் நடைமுறையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. எனினும் இந் நடைமுறையை தற்போது தேசியளவிலேயே பாவிக்க முடியும் எனவும், இன்னும் சில காலத்திற்கு பிறகு சர்வதேச ரீதியில் பாவிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் ஏற்கனவே இணையத்தள முகவரியைப் பதிந்து கொண்டவர்கள் புதிய முறையினை இலவசமாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட புதிய நடைமுறையால் தமது சொந்த மொழியில் இலகுவாக இணையத்தளத்தை எவரும் பயன்படுத்த முடியும்.

உதாரணமாக வீரகேசரி இணையத்தளத்தை பார்வையிடுவதாயின் http://தளம்.வீரகேசரி.இலங்கை என்று தட்டச்சு செய்யலாம்.

இதன் ஆரம்ப வைபவத்தில் கலந்து கொண்ட தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திஸ்ஸ விதாரண எமது வீரகேசரி இணையத்தளத்துக்குக் கருத்து தெரிவிக்கையில்,

“எமது சொந்த மொழியில் இணையத்தள முகவரியை முதன் முதலாக ஆசியாவில் மட்டுமல்ல, முழு உலகிலும் அறிமுகப்படுத்திய பெருமை எமக்கு உண்டு. தாய்மொழியில் இணையத்தள முகவரியை ‘இலங்கை’ என்று தமிழிலும், ‘லங்கா’ என்று சிங்களத்திலும், நாம் அறிமுகபப்டுத்தியுள்ளோம்.

அதுவும் முதன் முறையாக தமிழில் இணையத்தள முகவரி உருவாகியுள்ளது இலங்கையில் தான் என்பதும் பெருமைக்குரியதே. இதனூடாக தமிழ் – சிங்கள் மக்களிடையே சமத்துவ நிலைமை உருவாக்கம் பெற்றுள்ளது” என்றார்.

அய்கன் (ICANN) பணிப்பாளர் சபை உறுப்பினர்களில் ஒருவரான ராம் மோகன் கருத்து தெரிவிக்கும் போது,

“ஆசியாவில் தமிழில் தனது நாட்டின் பெயருடன், உலக இணையத்தள முகவரியை முதன் முதலாக அறிமுகப்படுத்திய ஒரே நாடு இலங்கை தான். இது ஒரு மாபெரும் சாதனை. இதனையிட்டு நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

முதன் முறையாக தாய்மொழியில் இணையத்தளத்தினூடாக, மின்னஞ்சலில் பயணிக்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. இணையத்தள முகவரியை சிங்களத்தில் ‘லங்கா’ என்றும் தமிழில் ‘இலங்கை’ என்றும் நாம் அடைந்து கொள்ள இது நமக்கு வாய்ப்பளிக்கின்றது.

இன்று மடி கணினி (லெப்டொப்) யைவிடவும் கையடக்கத் தொலைபேசி மூலமான இணையத்தள பாவனையாளர்கள் அநேகர் உள்ளனர். எனவே எதிர்காலத்தில் ‘லங்கா’ மற்றும் ‘இலங்கை’ ஆகிய இணைய முகவரிகள் பிரபல்யம் அடையும் என்பதில் ஐயம் இல்லை” என்றார்

கம்ப்யூட்டரை முறையாக இயக்கி உலக வெப்பமயம் ஆவதைத் தடுப்போம்
இன்றைய சுற்றுப் புறச் சூழல் ஆய்வாளர்கள் அனைவரும் உலக வெப்பமயமாவதைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். இதில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களும் ஆற்ற வேண்டிய கடமை உள்ளது. இது குறித்து ஆய்வு செய்த டப்ட்ஸ் (Tufts) பல்கலைக் கழகம், சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. இவற்றைப் பின்பற்றுவதால், ஏற்கனவே நாம் புவி வெப்பமயமாதலில் ஏற்படுத்திய அழிவைச் சரி செய்ய முடியாது என்றாலும், சீதோஷ்ண நிலை மாறிவருவதனை ஓரளவிற்குத் தடுக்கலாம்.

15 நிமிடங்கள் அல்லது அதற்கும் மேலாக (உணவு சாப்பிடுதல், வெகுநேரம் தொலைபேசியில் பேசுதல், மேலதிகாரி அறைக்கு வேலை நிமித்தம் செல்லுதல் போன்றவைகளுக்காக) கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் போவதில்லை என்றால், மானிட்டரை ஆப் செய்துவிடுங்கள்.

ஒரு மணி நேரத்திற்கு மேல் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் போவதில்லை என்றால், கம்ப்யூட்டரை நிறுத்திவிடுங்கள். இது காப்பி எடுக்கும் சாதனம், பிரிண்டர், ஸ்கேனர் மற்றும் பேக்ஸ் சாதனங்களுக்கும் பொருந்தும். கம்ப்யூட்டர் ஒன்றை 24 மணி நேரம் தொடர்ந்து இயக்குவதால், ஓராண்டில் அது 1,500 பவுண்ட் கார்பன் டை ஆக்ஸைடை வெளியே அனுப்புகிறது. மரம் ஒன்று ஒவ்வொரு ஆண்டும் 3 முதல் 15 பவுண்ட் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சுகிறது. அப்படியானால், ஒரு கம்ப்யூட்டர் விடும் கெட்ட காற்றை நீக்கிச் சுத்தப்படுத்த 100 முதல் 500 மரங்கள் வரை தேவையாயிருக்கும்.

நீங்கள் புது கம்ப்யூட்டர் வாங்குவதாக இருந்தால், லேப்டாப் கம்ப்யூட்டரை வாங்குங்கள். லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரைக் காட்டிலும் கால் பங்கு மின்சக்தியே பயன்படுத்துகிறது. மானிட்டர் வாங்குவதாக இருந்தால், எல்.சி.டி. மானிட்டர்களையே வாங்கவும். அவை சி.ஆர்.டி. மானிட்டரைக் காட்டிலும் மூன்றில் ஒரு பங்கு சக்தியையே பயன்படுத்துகின்றன.

உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பவர் மேனேஜ்மெண்ட் வசதியை அவசியம் பயன்படுத்தவும். கம்ப்யூட்டரை ஸ்டேன்ட் பை மோடில் வைத்திட வேண்டாம்.ஏனென்றால் அந்நிலையிலும், மின்சக்தியை கம்ப்யூட்டர் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கும். ஸ்விட்ச் ஆப் செய்தால் தான் இது முற்றிலும் நிறுத்தப்படும்.

மானிட்டரை ஆப் செய்து, பின் மீண்டும் அதனை இயக்குவது சிலருக்கு வரக்கூடிய பழக்கமாக இருக்காது. இவர்களுக்கு உதவிட ஒரு சிறிய அப்ளிகேஷன் புரோகிராம் உள்ளது. இதனை இன்ஸ்டால் செய்து, செட் செய்திட வேண்டிய தில்லை. ஜஸ்ட், டவுண்லோட் செய்து இயக்கினால் போதும். இந்த புரோகிராமின் பெயர் MonitorES (Monitor Energy Saver). இதனை http://monitores.googlecode.com/files/ MonitorES_05.exe  என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாகப் பெறலாம்.

இது தானாக மானிட்ட ரை ஆப் செய்கிறது; மீடியா புரோகிராம்கள் பயன்படுத்தவில்லை என்றால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது. இன்ஸ்டண்ட் மெசஞ்சரையும் பயன் படுத்தாவிட்டால், தற்காலிக செய்தி அனுப்பி நிறுத்தி வைக்கிறது; பெரிய அளவில் ஏற்படும் ஒலியை நிறுத்துகிறது. நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து எழுந்து நகர்ந்து, ஆனால் கம்ப்யூட்டர் அருகிலேயே இருந்தால், மானிட்டரை கண்ட்ரோல் + எப்2 அழுத்தி ஆப் செய்துவிடலாம். பின் மீண்டும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்க்கத் தொடங்குகையில், ஏதாவது ஒரு கீயை அழுத்தினால் போதும்.

இதே போல Green Monitor என்றும் ஒரு அப்ளிகேஷன் http://greenutils.com/ Site/GreenUtils.html  என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து கிடைக்கிறது. இதனையும் டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.

நாம் இந்த கம்ப்யூட்டர் மானிட்டரை நிறுத்தியா, உலகம் வெப்பமயமாவது தடைபடப் போகிறது என்று எண்ண வேண்டாம். சிறுதுளி பெருவெள்ளம். எனவே உங்கள் பங்கையும் அளியுங்கள். மற்றவர்களையும் இந்த வழியைப் பின்பற்றுமாறு தூண்டுங்கள்.

நன்றி: கம்ப்யூட்டர்மலர்

குரோம் ஓ.எஸ். என் வழி தனி வழி
கம்ப்யூட்டர் பயன்பாட்டில் முற்றிலும் புதிய ஒரு திருப்பத்தை ஏற்படுத்தக் கூடிய திறன் கொண்ட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கூகுள் “குரோம் “ என்ற பெயரில் சென்ற நவம்பர் 19ல் வெளியிட்டது. இதன் சோர்ஸ் கோட் எனப்படும் கட்டமைப்பு வரிகளை தன்னுடைய இணைய தளத்தில் கூகுள் வெளியிட்டுள்ளது. பொது மக்கள் பயன்பாட்டிற்கு இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் கிடைக்க இன்னும் ஓர் ஆண்டு ஆகலாம்.ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்றவுடன் அது ஒரு டிவிடியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்த்த அனைவருக்கும், இதன் கட்டமைப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தனியாகக் கிடைக்காது. கம்ப்யூட்டர்களில், குறிப்பாக நெட்புக் கம்ப்யூட்டர்களில் பதிந்து கிடைக்கும். எப்படி மொபைல் போனில் நாம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிக்காமல், அதில் பதிந்து வருவதனைப் பயன்படுத்துகிறோமோ, அதே போல குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிந்து வரும் கம்ப்யூட்டர்கள் விற்பனைக்கு வரும்.

இன்றைய கம்ப்யூட்டர் பயன்பாடு பெரும்பாலும் இன்டர்நெட்டைச் சார்ந்து இருப்பதனை உணர்ந்த கூகுள், வாடிக்கையாளர்களுக்கு அதன் வழியிலேயே முழு கம்ப்யூட்டர் பயன்பாட்டினையும் தரும் வகையில், குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை உருவாக்கியுள்ளது. இந்த சிஸ்டத்தை இயக்கியவுடன் இன்டர்நெட்டில் இணைந்து, உங்களுக்கு என்ன பயன்பாடு வேண்டும் என்கிற ஆப்ஷன் கேட்கப்படும். டாகுமெண்ட், ஸ்ப்ரெட்ஷீட், அனிமேஷன், இணைய தளம், ஆடியோ வீடியோ எடிட்டிங் இன்னும் பல செயல்பாடுகள் பட்டியலிடப்பட்டு நீங்கள் எது வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கலாம். அதற்கான அப்ளிகேஷன் சாப்ட்வேர் உங்களுக்குத் தரப்படும். நீங்கள் தேவையான பைல்களை உருவாக்கலாம். ஏற்கனவே உருவாக்கி இருப்பதனை எடிட் செய்திடலாம். பின் இவற்றை நீங்கள் விரும்பினால், கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க், சிடி அல்லது பென் டிரைவில் பதிந்து சேவ் செய்து வைக்கலாம். இல்லை என்றால் குரோம் சிஸ்டம் மூலம் பெறும் ஆன்லைன் ஸ்டோரேஜ் வசதியைப் பயன்படுத்தி சேவ் செய்திடலாம். இதனால் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், குரோம் ஓ.எஸ். உள்ள ஒரு கம்ப்யூட்டர் மூலம் உங்கள் பைல்களை நீங்கள் எடிட் செய்திடலாம். உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து பைல்களைத் தயார் செய்தது போல அவற்றை உருவாக்கலாம்.

இதனால் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளை நீங்கள் விலை கொடுத்து வாங்கி உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து வைக்கத் தேவையில்லை. எங்கே அவை கரப்ட் ஆகி, தக்க தருணத்தில் காலை வாரிவிடும் வகையில் கிராஷ் ஆகிவிடுமோ என்ற கவலை இல்லை. சேவ் செய்து வைக்க அதிகக் கொள்ளளவில் ஹார்ட் டிஸ்க் வாங்கிப் பொருத்த வேண்டியதில்லை. இவற்றை எல்லாம் குரோம் ஓ.எஸ். மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

இதனால் எப்போதாவது ஒரு முறை பயன்படுத்தக் கூடிய அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளை, உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து வைக்க வேண்டியதில்லை.

ஆன்லைனில் அனைத்தும் இயங்குவதால் வேகம், எளிமை, பாதுகாப்பு ஆகியன அடங்கியதாக நம் கம்ப்யூட்டர் அனுபவம் இருக்கும். குரோம் ஓ.எஸ். இயங்க 7 விநாடிகள் போதும். எதிர்காலத்தில் இந்த கால அவகாசம் இன்னும் குறையும்.

குரோம் ஓ.எஸ். முகப்பு தோற்றத்தில் குரோம் பிரவுசரைப் போலவே தோற்றமளிக்கும். கூகுள் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் (டாகுமெண்ட்ஸ், ஸ்ப்ரெட்ஷிட், கிராபிக்ஸ் போன்றவை) அனைத்தும் தனித்தனி டேப்களில் தரப்பட்டிருக்கும். எது வேண்டுமோ அதற்கான டேப்பினைக் கிளிக் செய்து பயன்படுத்தலாம்.

நம்மிடம் உள்ள மெமரி கார்டு, மொபைல் போன், கேமரா ஆகியவற்றை கம்ப்யூட்டரில் இணைத்து அவற்றில் உள்ள படங்கள், ஆடியோ வீடியோ பைல்களைக் கம்ப்யூட்டர் பைல்களாக இயக்கலாம்.

இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை எப்படி வாங்கி இணைப்பது? தேவையே இல்லை. “குரோம் சிஸ்டம் பதிந்த கம்ப்யூட்டர்’ என்று மட்டுமே கேட்டு வாங்க முடியும். ஆப்பரேட்டிங் சிஸ்டம் தனியே கிடைக்காது. இதற்காகக் கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்களிடம் கூகுள் நிறுவனம் பேசி வருகிறது. முதலில் குரோம் ஓ.எஸ். பதிந்த நெட்புக் கம்ப்யூட்டர்கள் மட்டுமே கிடைக்கும். பின் லேப்டாப் கம்ப்யூட்டர் மற்றும் டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் கிடைக்கும். தற்போது டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் இடத்தில் லேப் டாப் கம்ப்யூட்டர்களும், லேப் டாப் இடத்தில் நெட்புக் கம்ப்யூட்டர்களும் இடம் பிடித்து மக்களிடையே பரவி வருகின்றன. எனவே தான் குரோம் ஓ.எஸ். முதலில் நெட்புக் கம்ப்யூட்டர்களில் தரப்பட இருக்கிறது.

இப்போது கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்படும் விண்டோஸ், மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் எல்லாம் இணையம் பயன்பாட்டில் இல்லாத காலத்தில் தொடங்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு கிடைப்பவை. இப்போது எல்லாமே இன்டர்நெட் என்று ஆகிவிட்ட நிலையில், அதனை அடிப்படையாகக் கொண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்க வேண்டும் என கூகுள் திட்டமிட்டு, குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை வடிவமைத்துள்ளது.

மக்கள் தங்கள் கம்ப்யூட்டரில் எல்லாமே உடனே கிடைக்க வேண்டும் என எண்ணுகின்றனர். இமெயில் பார்க்க வேண்டும் எனில், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை இயக்கி, பிரவுசர் அல்லது இமெயில் கிளையண்ட் புரோகிராமை இயக்கி, இணைய தளத்தை அணுகி என அதிக நேரம் செலவழித்த பின்னரே இமெயிலைப் பெறுகின்றனர். இந்த தடைகற்களை நீக்கி வேகமாக இமெயிலைப் பெற்றுத் தருகிறது குரோம் ஓ.எஸ்.

வழக்கமான கம்ப்யூட்டர் பயன்பாட்டிலிருந்து, முற்றிலும் மாறுதல்களுடன், கவலையற்ற, அதி வேகமான, எளிதான கம்ப்யூட்டர் பயன்பாட்டினைத் தர இருக்கிறது குரோம் ஓ.எஸ். இந்த ஓ.எஸ். இப்போது பயன்பாட்டில் இருக்கும் கம்ப்யூட்டர்களுக்கும் அவற்றில் இயங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கும் மாற்றானது அல்ல. இதன் வழி தனி வழி.

எச்.பி., ஏசர், அடோப், லெனோவா, குவால்காம், டெக்ஸாஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ், ப்ரீ ஸ்கேல், இன்டெல் ஆகியவை இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைந்து செயல்பட ஒத்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பில்கேட்ஸ் இது பற்றிக் குறிப்பிடுகையில் குரோம் ஓ.எஸ். லினக்ஸ் சிஸ்டத்தின் இன்னொரு வடிவம் போல இருக்கிறது. இதன் இயக்கம் குறித்து குறைந்த தகவல்களே வந்திருப்பதால், அது என்ன செய்திடும் என்று அறிய ஆர்வம் அதிகரிக்கிறது என்றார். குரோம் ஓ.எஸ். இலவசமா? என்ற கேள்விக்கு கூகுள் இன்னும் விடையளிக்கவில்லை. ஓப்பன் சோர்ஸ் அடிப்படையில் இயங்குவதால் இலவசமாக அல்லது மிக மிகக் குறைந்த விலையில் இது கிடைக்கலாம். இதனால் அதிக விலை கொடுத்து வாங்கப்படும் விண்டோஸ் சிஸ்டத்திலிருந்து மக்கள் இதற்கு மாறலாம்.

குரோம் ஓ.எஸ். இலவசமாகத் தரப்படும் நிலையில், நிச்சயமாக அதில் விளம்பரங்கள் இடம் பெறலாம். குரோம் ஓ.எஸ். ஓப்பன் சோர்ஸ் அடிப்படையில் உருவானதால், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு அதிகமான எண்ணிக்கையில் தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்கள் உருவாக்கப்பட்டு இலவசமாகக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

அடுத்த ஆண்டில் குரோம் ஓ.எஸ். கம்ப்யூட்டர்கள் மிகச் சிறிய அளவில், சிறிய ஸ்கிரீன், டச் பேட், கீ போர்டு ஆகியவற்றுடன் கிளாம் ஷெல் கம்ப்யூட்டர்களாக வெளிவரலாம்.

குரோம் ஓ.எஸ். வழக்கமான ஹார்ட் டிஸ்க்குகளுக்குப் பதிலாக சாலிட் ஸ்டேட் டிஸ்க்குகளையே சப்போர்ட் செய்திடும். இதனால் மின்சக்தி குறைந்த அளவே பயன்படுத்தப்படும்; வேகம் அதிகரிக்கும்.

இயக்க வேகம் மிக மிகக் குறைந்த அளவில் இருக்கும். ஒரு பட்டனை அழுத்தியவுடன், கம்ப்யூட்டர் தயாராகி உங்களை இணையத்தில் இடம் பெறச் செய்திடும் குரோம் ஓ.எஸ்.

அனைத்துமே வெப் அடிப்படையிலான அப்ளிகேஷன் களாக இருப்பதால், நாம் எந்த சாப்ட்வேர் தொகுப்பையும் இன்ஸ்டால் செய்து, அப்டேட் செய்து பராமரிக்க வேண்டியதில்லை.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரை டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் களுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டம் தருவதில் நிலையான முதல் இடத்தைப் பெற்றுள்ளது. ஆனால் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் பயன்பாடு குறைந்து வருகிறதே. அந்த இடத்தில் லேப்டாப் மற்றும் நெட்புக் கம்ப்யூட்டர்கள் கைப்பற்றி வருகின்றன. எனவே தான் கூகுள் நெட் டாப் கம்ப்யூட்டர்களில் தன் ஓ.எஸ். பயணத்தைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் டெஸ்க்டாப் பழக்கத்தை மூடிவிட கூகுள் திட்டமிடுகிறது.

குரோம் ஓ.எஸ். குறித்து சுருக்கமாகச் சொல்வதென்றால்,

1. வெப் பிரவுசர் இங்கே டெஸ்க் டாப் கம்ப்யூட்டராகச் செயல்பட உள்ளது. எல்லாமே இணையதளத்துடன் கூடிய தொடர்பாகவே அமையும்.

2. வழக்கமான பைல், போல்டர், டிரைவ் எல்லாம் இருக்காது. எல்லாமே இணையத்தில் சேர்த்து வைக்கப்படும்.

3. குரோம் ஓ.எஸ். உள்ள கம்ப்யூட்டரில் ஷட் டவுண் பட்டன் இருக்காது. ஸ்லீப் மோடில் தான் இருக்கும். எனவே தொட்டவுடன் இயங்கத் தொடங்கி இணையத்தில் உங்களை அமர வைக்கும்.

4. கம்ப்யூட்டரில் எந்த சாப்ட்வேருக்கும் அப்டேட் தேவையில்லை. எல்லா அப்ளிகேஷனும் இணையத்திலிருந்தே நமக்குத் தரப்படுவதால், அப்போது தயாராக அப்டேட் செய்யப்பட்டுள்ள சாப்ட்வேர் தொகுப்புதான் பயன்படுத்தக் கிடைக்கும்.

5. எதுவுமே கம்ப்யூட்டரில் ஸ்டோர் செய்யப்படமாட்டாது. எனவே வைரஸ் தாக்கி கெடுக்கும் என்ற சந்தேகத்திற்கு இடமே இல்லை. அதிக பாதுகாப்பான, கவலையற்ற கம்ப்யூட்டிங் சுகம் கிடைக்கும்.

நன்றி: தினமலர் கம்ப்யூட்டர்மலர்.

விண்டோஸ் 7 எந்த பதிப்பு உங்களுக்கு?
மிகப் பெரிய அளவிலான தொழில் நுட்ப மாற்றங்களுடன் சென்ற அக்டோபர் 22 அன்று, மைக்ரோசாப்ட் உலக நாடுகள் அனைத்திலும் தன் புதிய விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. புதிய வசதிகள், தொழில் நுட்ப மாற்றங்கள் ஆகியவற்றினால், இதன் வெளியீடு ஏறத்தாழ 18 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்டது. டில்லியில் இதனைத் தன் சிஸ்டம் கூட்டாளிகளான எச்.சி.எல்., எச்.பி. மற்றும் ஏசர் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து இந்த பதிப்பை மைக்ரோசாப்ட் வெளியிட்டது. புதிய வசதிகளாக வேடிக்கை அம்சங்கள், எளிமையான இயக்கம் மற்றும் இதுவரை இல்லாத வகையில் கூடுதல் பாதுகாப்பு எனப் பல முனைகளில் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் அமைக்கப் பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் இந்தியா பிரிவின் தலைவர் அறிவித்துள்ளார்.புதிய வசதிகளை உருவமைக்க ஏறத்தாழ 600 வகையான கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்டன. இதன் சோதனைத் தொகுப்பினை, இதுவரை ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரலாற்றில் இல்லாத வகையில், 80 லட்சம் பேர் உலகின் பல நாடுகளில் சோதனை செய்தனர். அவர்கள் அளித்த அறிவுரைகளுக்கேற்ப இவற்றில் இருந்த பல பிரச்னை களுக்குத் தீர்வுகள் காணப்பட்டன. இதற்கு முன் வெளிவந்த விஸ்டா சிஸ்டம், வாடிக்கையாளர்களிடம் இடம் பெறாமல் போவதற்குப் பல காரணங்கள் இருந்தன. கம்ப்யூட்டர் கட்டமைப்பில் பல புதிய கூடுதல் வசதிகளை விஸ்டா எதிர்பார்த்ததால், பலர் தங்களின் கம்ப்யூட்டர்களை 2001ல் வெளியான விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திலேயே தொடர்ந்து இயக்கி வந்தனர். இதனை மனதில் கொண்டே விண்டோஸ் 7 உருவாக்கப்பட்டது.

விண்டோஸ் 7 அதன் பாதுகாப்பிற்கென பல அம்சங்களைக் கொண்டிருப்பதால், இனி இதற்கென பிற நிறுவனங்கள் அமைத்து வழங்கும் பாதுகாப்பு புரோகிராம்கள் தேவையில்லை எனப் பல நிறுவன வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். இந்த வகையில் பல தேர்ட் பார்ட்டி புரோகிராம்களை விலை கொடுத்து வாங்க வேண்டியதில்லை என்பதால், முதலீடு செலவு கணிசமாகக் குறையும். இதனைச் சோதனைக்கென பயன்படுத்திப் பார்த்த பெங்களூரு இண்டர்நேஷனல் ஏர்போர்ட் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளது. பல முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் கம்ப்யூட்டர்களை விண்டோஸ் 7 தொகுப்பிற்கு மாறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த புதிய பதிப்பு வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளை நிறைவேற்ற ஆறு வகைகளில் வெளிவந்துள்ளது.

அவை: விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம், புரபஷனல், ஸ்டார்ட்டர், ஹோம் பேசிக், என்டர்பிரைஸ் மற்றும் விண்டோஸ் 7 அல்ட்டிமேட். இவற்றில் எது நம் தேவைகளுக்குச் சரியானதாக இருக்கும் எனக் கண்டறிந்து அறிவதே, தற்போதைய கேள்வியாக பலருக்கு உள்ளது. இவற்றின் விலை ரூ.5,800 முதல்  ரூ.11,000 வரை உள்ளது. இந்த சிஸ்டம் இயக்கத்திற்குத் தயாராகும் நேரம் மிகவும் குறைவாக இருக்கும்படி அமைக்கப் பட்டுள்ளது. இது பல வாடிக்கையாளர்களுக்குத் திருப்தி அளிக்கிறது. கம்ப்யூட்டர் சுவிட்சை ஆன் செய்துவிட்டு தயாராகும் நேரத்தில், டீயில் பாதி குடிக்கும் வேலை எல்லாம் இனி இருக்காது. இந்த புதிய சிஸ்டத்தில் அனைத்து மல்ட்டி மீடியா வேலைகளும், புதிய முறையில் இனிமை யாகவும் எளிமையாகவும் இயக்கும் முறையில் இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

பல கம்ப்யூட்டர் நிறுவனங்கள், தாங்கள் விற்பனை செய்திடும் கம்ப்யூட்டர்களிலும், குறிப்பாக நெட்புக் கம்ப்யூட்டர்களிலும், விண்டோஸ் 7 பதிப்பை பதிந்து தரத் தயாராகிவிட்டன. குறிப்பாக எச்.பி. இந்தியா, எச்.சி.எல்., ஏசர் ஆகியவை இவ்வகையில் ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எச்பி இந்தியா நிறுவனம் விண்டோஸ் 7 சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டர்களை ரூ. 27,990 முதல் ரூ. 90,000 வரையிலான விலையில் அறிவித்துள்ளது. ஏசர் பி.சி. நிறுவனம் ரூ. 15,000 முதல் ரூ.35,000 வரை விலை அறிவித்துள்ளது.

நோட்புக் கம்ப்யூட்டர்கள் ரூ. 21,000 முதல் ரூ.71,000 விலையில் உள்ளன. இனி தொழில் நுட்ப தகவல்கள் மற்றும் வசதிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

1. இரண்டு வகை சிஸ்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவை 32 பிட் மற்றும் 64 பிட் ஆகும். இவற்றில் ஸ்டார்ட்டர் எடிஷன் 32 பிட் வகையில் மட்டுமே கிடைக்கிறது.

2. 64 பிட் சிஸ்டம் வகையில் பிசிகல் மெமரி, ஹோம் பிரிமியம் சிஸ்டத்தில் 16 ஜிபி, புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட் வகையில் 192 ஜிபி ஆக உள்ளன. ஸ்டார்ட்டர் எடிஷனில் இது இல்லை.

3.ஸ்டார்ட்டர் மற்றும் ஹோம் பிரிமியம் வகை ஒரு சிபியு மட்டுமே சப்போர்ட் செய்கிறது. புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட் வகை இரண்டு சிபியுக்களை சப்போர்ட் செய்கிறது.

4. ஹோம் குரூப் உருவாக்கி இணைவது என்ற வசதியைப் பொறுத்தவரை, ஸ்டார்ட்டர் எடிஷனில் இணையும் வசதி மட்டுமே தரப்பட்டுள்ளது. மற்ற மூன்றிலும் உருவாக்கி இணையும் வசதி உள்ளது.

5. நெட்வொர்க்கில் பேக்கப் செய்து மீண்டும் பெறுவது புரபஷன்ல் மற்றும் அல்ட்டிமேட் வகைகளில் மட்டுமே தரப்பட்டுள்ளது.

6.ஸ்டார்ட்டர் தவிர மற்றவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட பல மானிட்டர் களை இணைக்கலாம்.

7. மாற்றக்கூடிய டெஸ்க்டாப் வால் பேப்பர், டெஸ்க்டாப் விண்டோ மேனேஜர், விண்டோஸ் மொபிலிட்டி சென்டர், விண்டோஸ் ஏரோ, மல்ட்டி டச், பிரிமியம் கேம்ஸ், விண்டோஸ் மீடியா சென்டர், விண்டோஸ் மீடியா பிளேயரை ரிமோட்டில் இயக்குவது ஆகியவை ஸ்டார்ட்டர் எடிஷன் தவிர மற்றவற்றில் தரப்பட்டுள்ளன.

8. விண்டோஸ் எக்ஸ்பி மோடில் இயக்கும் வசதி புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட் ஆகியவற்றில் மட்டுமே தரப்பட்டுள்ளது.

9. விர்ச்சுவல் ஹார்ட் டிஸ்க் மூலமாக பூட் செய்திடும் வசதி அல்ட்டிமேட் எடிஷனில் மட்டுமே தரப்பட்டுள்ளது.

விண்டோஸ் ஸ்டார்ட்டர் எடிஷன் என்பது, இத்தொகுப்பின் மிக எளிய வகை பதிப்பாக நெட்புக் கம்ப்யூட்டர்களுக்கு மட்டுமே கிடைக்கும். விண்டோஸ் எக்ஸ்பி அல்லது விஸ்டாவிலிருந்து இதற்கு அப்கிரேட் செய்திட முடியாது. விண்டோஸ் 7 தொகுப்பின் புதிய மற்றும் சிறப்பம்சங்களாக நாம் கருதும் பல விஷயங்கள் இதில் கிடைப்பதில்லை. 32 பிட் இயக்கம் மட்டுமே இதில் உள்ளது. விண்டோஸ் மீடியா சென்டர் மற்றும் விண்டோஸ் மீடியா பிளேயர் இதில் சேர்க்கப்படவில்லை. எக்ஸ்பியில் மட்டுமே இயங்கும் புரோகிராம்களுக்காக, விண்டோஸ் 7 பதிப்பில் எக்ஸ்பி மோட் என்று ஒரு வசதி தரப்பட்டுள்ளது. அந்த வசதி ஸ்டார்ட்டர் எடிஷனில் இல்லை. ரிமோட் டெஸ்க்டாப் ஹோஸ்ட், பிட் லாக்கர் டிரைவ் என்கிரிப்ஷன் மற்றும் மல்ட்டி டச் சப்போர்ட் ஆகிய வையும் இதில் தரப்பட வில்லை. அப்புறம் என்ன தான் ஸ்டார்ட்டர் எடிஷனில் உள்ளது என்று கேட்கிறீர் களா? டாஸ்க்பாரில் புரோகிராம்களை பின் செய்து கொள்ளலாம். புரோகிராம் விண்டோக்களை மிக வேகமாக ரீசைஸ் செய்து கொள்ளலாம். வேகமாக்கப்பட்ட விண்டோஸ் சர்ச் வசதி உள்ளது.

இதனை அடுத்துள்ள ஹோம் பிரிமியம், கம்ப்யூட்டர்களைப் பரவலாகப் பயன் படுத்துவோருக்கேற்ற ஒன்றாக உள்ளது. மைக்ரோசாப்ட், தன் வாடிக்கையாளர்கள் என்ன என்ன வசதிகள் புதியதாக இணைக்கப் பட்டிருப்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறதோ, அவை அனைத்தும் இதில் உள்ளன. புரோகிராம்களின் செயல்பாட்டினை முன்கூட்டியே அறிதல், டெஸ்க்டாப் பிலிருந்து தேவையற்ற ஐகான்களை நீக்குதல், புரோகிராம் விண்டோக்களை ரீசைஸ் செய்திடும் ஏரோ ஸ்நாப், ஊடுறுவிப்பார்க்கும் வகையில் டாஸ்க்பாரின் தோற்றம் காட்டும் ஏரோ ஸ்கின் மற்றும் விண்டோ பார்டர்ஸ் ஆகிய அனைத்தும் இதில் தரப்பட்டுள்ளன. விண்டோஸ் மீடியா பிளேயர் மற்றும் விண்டோஸ் மீடியா சென்டர் ஆகிய வசதிகள் சிறப்பாக இயக்கும் முறையில் தரப்பட்டுள்ளன. ஹோம் குருப் உருவாக்கி ஒரு சிலருக்குள் மியூசிக் சார்ந்த பொழுது போக்கு பைல்களையும் மற்ற பைல்களையும் பகிர்ந்து கொள்ளலாம். இதில் 64 பிட் பதிப்பு இருந்தாலும், ராம் பிசிகல் மெமரி 16 ஜிபி வரை மட்டுமே கிடைக்கிறது. ஹோம் பிரிமியம் எடிஷனை எந்த நேரத்திலும் புரபஷனல் அல்லது அல்ட்டிமேட் எடிஷனுக்கு அப்கிரேட் செய்து கொள்ளலாம்.

முழுமையான வசதிகள் பல இருந்தாலும், விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம், புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட் பதிப்புகளில் உள்ள பல வசதிகளைக் கொண்டிருக்கவில்லை. நெட்வொர்க் டிரைவில் இணைக்கப் பட்டிருக்கையில் பேக் அப் வசதியை இயக்க முடியாது. பிட் லாக்கர், ஆப் லாக்கர் வசதிகள் இல்லை. எக்ஸ்பி மோட் இல்லை.

மற்ற இரண்டும், புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட், அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளன. எந்த பிரச்னையும் தடையும் இன்றி பயன்படுத்தலாம்.

விஸ்டாவின் இயக்கத்தினால் ஏமாந்திருந்த விண்டோஸ் வாடிக்கையாளர்கள், நிச்சயம் விண்டோஸ் 7 பதிப்பை மனதார வரவேற்பார்கள் என்றே எதிர்பார்க்கலாம். இந்த புதிய பதிப்பிற்கு மாறும் முன் உங்கள் சிஸ்டம் இதனைத் தாங்கிக் கொண்டு சிறப்பாக இயங்குமா என்பதை உறுதி செய்து கொள்ளவும். இதனைத் தெரிந்து கொள்வதற்கான புரோகிராம்களையும், வழிமுறைகளையும், மைக்ரோசாப்ட் தன் இணையதளத்தில் கொண்டுள்ளது.

நன்றி: தினமலர் கம்ப்யூட்டர்மலர்

மூளையை வளர்க்கும் இணைய தேடல்
இண்டெர்நெட்டை பொருத்தவரை மூன்றுவிதமான தலைமுறை இருகின்றன தெரியுமா?

முதல் தலைமுறை இண்டெர்நெட்டோடு பிறந்து இணைய சூழலில் வளரும் டிஜிட்டல் தலைமுறை. இரண்டாவது தலைமுறை இண்டெர்நெட்டின் வளர்ச்சியை பார்த்து அதனோடு பரிட்சயம் செய்து கொண்ட தலைமுறை. 30 வயதுக்கு மேற்பட்டவர்களை இந்த தலைமுறையில் தான் சேர்க்க வேண்டும்.மூன்றாவ‌து த‌லைமுறை இண்டெர்நெட் என்றாலே ப‌ய‌ந்து ஒதுங்கி கொள்ளும் முத்த‌ த‌லைமுறை.விதிவிலக்கான‌ ஒரு சில‌ரைத்த‌விர‌ பெரும்பாலான‌ தாத்தா பாட்டிக‌ளை இந்த‌ பிரிவில் தான் சேர்க்க‌ வேண்டும்.

இப்ப‌டி இண்டெர்நெட் என்றால் ஏதோ புரியாத தொழில்நுட்ப‌ம் என்று க‌ருதக்கூடிய‌ தாத்த‌க்க‌ளுக்கும் பாட்டிக‌ளுக்கும் இண்டெர்நெட்டை அறிமுக‌ம் செய்து வைப்ப‌தை விட‌ பெரிய‌ சேவை வேறு இருக்க‌ முடியாது தெரியுமா?

இண்டெர்நெட் அறிமுக‌ம் வ‌ய‌தான‌வ‌ர்க‌ளுக்கு புதிய‌ உல‌கை திற‌ந்துவிடும் என்ப‌து ஒருபுற‌ம் இருக்க‌ அது அவ‌ர்க‌ளின் மூளை செய‌ல்பாட்டின் மேம்பாட்டிற்கு முக்கிய‌ ப‌ங்கு வ‌கிக்கும் என்ப‌தே விஷ‌ய‌ம்.அதாவ‌து இண்டெர்நெட்டில் த‌க‌வ‌ல்க‌ளை தேடுவ‌து மூளைக்கான‌ மிக‌ச்சிற‌ந்த‌ ப‌யிற்சியாக‌ அமையும் என‌ தெரிய‌ வ‌ந்துள்ள‌து.

அதிக‌ம் இல்லை ஒரு வார‌ கால‌ம் கூகுல் தேட‌லில் எடுப‌ட்டாலே போதும் பெரிய‌வ‌ர்க‌ளின் மூளை செய‌ல்பாடு சுறுசுறுப்பாகி முடிவெடுக்கும் ம‌ற்றும் புரிந்து கொள்ளும் ஆற்ற‌ல் மேம்ப‌டுபவ‌தாக‌ க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டுள்ள‌து.

அமெரிக்காவைச்சேர்ந்த‌ யுசிஎல்ஏ என்னும் அமைப்பு இது தொட‌ர்பான‌ ஆய்வை ந‌ட‌த்தியுள்ள‌து.55 வ‌ய‌து முத‌ல் 78 வ‌ய‌தான‌வ‌ர்க‌ளை கொண்டு ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட இந்த‌ ஆய்வில் எப் எம் ஆர் ஐ ஸ்கான் முறையில் முளையின் செய்ல்பாடு ஆல‌சி ஆராய‌ப்ப‌ட்ட‌து. ஆய்வில் ப‌ங்கேற்றோர் இண்டெர்நெட்டை ப‌ய‌ன்ப‌டுத்தும் போது அவ‌ர்க‌ள் மூலையில் நிக‌ழும் ராசாய‌ண‌ மாறுத‌ல்க‌ள் க‌வ‌னிக்க‌ப்ப‌ட்ட‌ன‌.

அப்போது தேடலில் ஈடுப‌ட்டவ‌ர்க‌ளின் மூளை செய‌ல்பாடு மிக‌வும் சுறுசுறுப்பாக‌ இருப்ப‌து க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்ட‌து.முளையில் முடிவெடுக்க‌ ப‌ய‌ன்ப‌டும் ப‌குதியில் இந்த‌ செய‌ல்பாடு அமைந்திருந்த‌தை ஆய்வால‌ர்க‌ள் க‌வ‌னித்துள்ள‌ன‌ர்.

இந்த‌ வ‌கை செய‌ல்பாடு முடிவெடுப்ப‌து ம‌ற்றும் புரிந்து கொள்ளுத‌லில் முக்கிய‌ பாங்காற்றும் என்று க‌ருத‌ப்ப‌டுகிற‌து.என‌வே இண்டெர்நெட்டில் த‌க‌வ‌ல்க‌ளை தேடுவ‌து மூளைக்கான‌ ப‌யிற்சியாக‌ அமையும் என்று க‌ருதப்ப‌டுகிற‌து.ஒரு வார‌ கால‌ம் தேட‌லில் ஈடுப‌ட்டாலே போதுமான‌து என்றும் தெரிய‌ வ‌ந்துள்ள‌து.

அல்சைம‌ர்ஸ் போன்ற‌ நினைவுத்திற‌ன் குறைபாட்டினால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு இணைய‌ தேடல் உத‌வ‌லாம் என்று எதிர்பார்க்க‌ப்ப‌டுகிற‌து.

என‌வே உங்க‌ள் வீட்டில் பெரிய‌வ‌ர்க‌ள் இருந்து அவ‌ர்க‌ள் இண்டெர்நெட் விஷ‌ய‌த்தில் ப‌ய‌ந்தாங்கொலிக‌ளாக‌ இருந்தால் அவ‌ர்க‌ளுக்கு இண்டெர்நெட்டை க‌ற்றுக்கொடுப்ப‌து மிக‌ச்சிற‌ந்த‌ உத‌வியாக‌ இருக்கும்.

பயர்பாக்ஸ் பாதுகாப்பு
இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள், குறிப்பாக பிளாக்குகள் அமைப்பவர்களிடையே, பயர்பாக்ஸ் பிரவுசர் தொகுப்பு மிக வேகமாக பிரபலமாகி வருகிறது. நம் விருப்பங்களுக்கு ஏற்றபடி அமைத்துக் கொள்ளக் கூடிய வசதி, பயன்படுத்த எளிமையான இன்டர்பேஸ், நம்பிக்கை தரும் இயக்க தன்மை ஆகிய இதன் சிறப்புகளே, பலரை இன்டர்நெட் எக்ஸ்புளோரரை விட்டு இதனைப் பயன்படுத்தத் தூண்டுகின்றன.  அனைத்து இன்டர்நெட் பிரவுசர்களும் கட்டாயம் பாதுகாக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் உள்ளன. ஏதேனும் ஒரு வகையில் வைரஸ் புரோகிராம்கள் மற்றும் கெடுதல் விளைவிப்பதற்காகவே எழுதப்படும் புரோகிராம்கள் பிரவுசர் வழியாக வந்துவிடுகின்றன. பொதுவாக ஏதேனும் ஒரு புரோகிராமினை டவுண்லோட் செய்கையில் அடிப்படை யில் ஒரு சில பாதுகாப்பு முறைகள் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால் இவை பழகிப் போனதால், கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை அனுப்புபவர்கள் இவற்றை மீறிச் செயல்படும் வகையில் அவற்றை வடிவமைத்து விடுகின்றனர். எனவே தொடர்ந்து பிரவுசரைப் பாதுகாக்கும் வகையில் நாம் அதனைப் பலப்படுத்த வேண்டியுள்ளது.

மொஸில்லாவின் பயர்பாக்ஸ் பிரவுசர், கம்ப்யூட்டரை, இது வைரஸ் போன்ற தீய செயல்களை மேற்கொள்ளும் தொகுப்புகளிலிருந்து பாதுகாக்கும் புரோகிராம்களை சப்போர்ட் செய்கிறது. அத்துடன் பயர்பாக்ஸ் பிரவுசருக்கென வடிவமைக் கப்பட்டுள்ள பல ஆட் ஆன் தொகுப்புகளும் கூடுதல் பாதுகாப்பு தரும் வகையில் உருவாக்கப்பட்டு கிடைக்கின்றன. இவற்றையும் பயர்பாக்ஸ் ஏற்றுக் கொள்கிறது. வங்கிக் கணக்குகள் கையாளுதல், ஆன்லைனில் பொருட்களுக்கு ஆர்டர் செய்து வாங்குதல், அவற்றிற்குப் பணம் செலுத்துதல், சோஷியல் நெட்வொர்க் கிங்கில் நண்பர்களுடன் தொடர்பு கொள்ளல், கல்வி கற்றல் போன்ற பணிகளில் நாம் இன்டர்நெட்டினைப் பயன்படுத்துவதால், ஒரு பாதுகாப்பான சூழ்நிலை நமக்கு அவசியமாகிறது.

மொஸில்லா பயர்பாக்ஸ் பிரவுசருக்குக் கூடுதல் பாதுகாப்பு தரும் வகையில் தரப்பட்டுள்ள ஆட்–ஆன் தொகுப்பு களிலிருந்து சிறப்பாகச் செயல்படும் சில தொகுப்புகளின் பட்டியல் இங்கு தரப்படுகிறது.

1.Adblock Plus:

இந்த ஆட் –ஆன் தொகுப்பு வாரந்தோறும் ஏறத்தாழ 8 லட்சம் பேரால் டவுண்லோட் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. பேனர்கள், விளம்பரங்களைத் தாங்கி வரும் பாப் அப் விண்டோக்களை முற்றிலுமாய்த் தடுக்கிறது. கிடைக்கும் இணையதள முகவரி: http://addons.mozilla.org/enUS/firefox/addon/1865 இந்த தொகுப்பைப் பதிந்த பின்னர், ஏதேனும் பேனர் விளம்பரம் வந்தால், அதன் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் கான்டெக்ஸ்ட் மெனுவில் Adblock Plus என்பதனைத் தேர்ந்தெடுங்கள். அந்த பேனர் மீண்டும் ஒரு முறை அந்த கம்ப்யூட்டரில் டவுண்லோட் செய்யப்படமாட்டாது. அல்லது தொகுப்பை முதலில் பயன்படுத்தத் தொடங்குகையில் பில்டர் பயன்பாட்டினை இயக்கிவிட்டால் இது போன்ற பேனர் விளம்பரங்களை அண்டவிடாது.

2.Better Privacy:

பொதுவாக குக்கிகளால் நமக்கு சில நன்மைகள் இருந்தாலும், பல குக்கிகள் நம் கம்ப்யூட்டரை வேவு பார்க்கும் வேலைக்கே அனுப்பப்படுகின்றன. இவற்றை நம் பிரவுசிங் முடிந்த பின்னர் அழித்துவிடலாம். ஆனால் சில குக்கிகள் அழிக்கப்பட முடியாத வகையில் உருவாக்கப்பட்டு பதிக்கப்படுகின்றன. இவற்றை சூப்பர் குக்கிகள் என அழைக்கின்றனர். இவற்றிலிருந்தும் பாதுகாக்கும் வேலையை இந்த ஆட் ஆன் புரோகிராம் தருகிறது. இந்த ஆட் ஆன் புரோகிராமினை https://addons.mozilla. org/enUS/firefox/addon/6623 என்ற முகவரியிலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். இந்த பிளாஷ் குக்கிகளை எல்.எஸ்.ஓ. குக்கிகள் எனவும் அழைக்கின்றனர். இவை நம் கம்ப்யூட்டரில் எப்போதும் நிரந்தரமாக இருக்கும் வகையில் பதியப்படும். ஒரு குக்கியின் அளவு 100 கேபி. வழக்கமான சாதாரண குக்கியின் அளவு 4 கேபி மட்டுமே. இந்த குக்கிகளை பிரவுசர்கள் அறிவதில்லை. எல்.எஸ்.ஓ. குக்கிகளை பிரவுசர்களாலும் அழிக்க முடிவதில்லை. இந்த வகை குக்கிகள் சிஸ்டத்தில் பதிந்து வைக்கப்பட்டுள்ள தகவல்களை எளிதாகப் பெற்று, நாம் அறியாமலேயே மற்ற கம்ப்யூட்டருக்கு அனுப்பும் தன்மை கொன்டவை.

பிளாஷ் குக்கிகள் எப்போது சென்ட்ரல் சிஸ்டம் போல்டரில் தான் பதியப்படுகின்றன. எனவே இவை நீக்கப்படாது. நீக்குவதும் சிரமம். Better Privacy புரோகிராம் ஒவ்வொரு முறை நீங்கள் பிரவுசரை மூடும்போது, இவை அனைத்தையும் நீக்கிவிடுகிறது. அல்லது ஒவ்வொரு பிளாஷ் குக்கியாக இந்த புரோகிராம் மூலம் பெற்று அவற்றை நீக்குவதா, வைத்துக் கொள்வதா என நீங்கள் தீர்மானிக்கலாம்.

3. No Script:

இணையத்தில் எந்த வகையில் நம்மை அழிக்கும் புரோகிராம்கள் வரும் என்று சொல்ல முடியாத வகையில் பல வகை புரோகிராம்கள் உள்ளன. இவற்றில் ஸ்கிரிப்ட் என்பதுவும் ஒன்று. இதிலிருந்து பாதுகாக்கும் வழிகளை இந்த ஆட் ஆன் தொகுப்பு தருகிறது. இந்த புரோகிராமினை https://addons.mozilla. org/enUS/firefox/addon /722 என்ற முகவரியிலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம்.

2006 ஆம் ஆண்டின் சிறந்த புரோகிராமாக இது விருது பெற்றது. பிரவுசருக்கான சரியான பாதுகாப்பினைத் தருகிறாது. இந்த புரோகிராம் ஜாவா, ஜாவா ஸ்கிரிப்ட் போன்றவற்றை நாம் அனுமதிக்கும் நேரத்தில், அனுமதிக்கும் தளங்களில் இருந்து வந்தால் மட்டுமே இயங்க வைக்கும். இந்த புரோகிரா மினைப் பயன்படுத்துவது குறித்த மேலதிகத் தகவல்களுக்கு http://noscript. net/faq என்ற முகவரியில் உள்ள தளத்தினை அணுகவும்.

4. WOT Web of Trust:

இணையப் பயன்பாட்டின் போது, நம்முடைய கம்ப்யூட்டருக்குள் நம் அனுமதியின்றி சிலர் ஊடுருவி, பெர்சனல் தகவல்களைத் திருடும் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திட முயற்சிப்பார்கள். இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகையில் இந்த புரோகிராம் நமக்கு எச்சரிக்கை கொடுக்கும். https://addons.mozilla.org/enUS/firefox/addon/ 3456  என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இதனைப் பெற்றுக் கொள்ளலாம்.

ஆபத்து நிறைந்த இணைய தளங்களுக்கு நீங்கள் செல்கையில் இது பலத்த எச்சரிக்கையினைத் தரும். ஓர் இணைய தளம் ஸ்பேம் மற்றும் மால்வேர்களை அனுப்ப முயற்சிக்கையில் இந்த புரோகிராம் அந்த செயலை மோப்பம் பிடித்து அறிந்து உடனே எச்சரிக்கை கொடுத்து, நம்மை அந்த தளத்தின் இணைப்பைத் துண்டித்துக் கொள்ளச் சொல்லும். இந்த புரோகிராமில் பல லட்சம் தளங்களின் தன்மை குறித்த தகவல் பதியப்பட்டுள்ளது. இந்த புரோகிராம் பயன்படுத்துவது குறித்த கூடுதல் தகவல்களுக்கும் சப்போர்ட்டுக்கும் http://www.mywot.com/ support என்ற முகவரியில் உள்ள தளத்தினை அணுகவும்.

5.Stealther:

நாம் இணையத்தில் உலா வருகையில், தகவல்களைத் தேடுகையில், இமெயில் களைப் பெறுகையிலும் அனுப்பும்போது நம் இணையப் பயணம் குறித்த பல தடயங்கள் உருவாக்கப்படுகின்றன. பிரவுசர் ஹிஸ்டரி, குக்கீஸ், டிஸ்க் கேஷ், பைல் ஹிஸ்டரி, படிவங்களில் தரப்படும் தகவல்கள் என இவை பலவகைப்படுகின்றன. இது போன்ற எந்த தடயமும் இல்லாமல் இந்த புரோகிராம் பார்த்துக் கொள்கிறது. இதனை https://addons. mozilla.org/enUS/firefox/addon/ 1306 என்ற முகவரியில் பெறலாம். இந்த புரோகிராம் நாம் பிரவுசரை இயக்கியவுடன் தானும் இயங்கி தடயங்களை ஏற்படுத்தும் புரோகிராம் பகுதிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது.

6. Roboform Toolbar:

நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்ட் களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள இந்த புரோகிராம் உதவுகிறது. https://addons.mozilla.org/enUS/ firefox/addon/750 என்ற தளம் இந்த புரோகிராமைத் தருகிறது.

பாஸ்வேர்ட்களை நினைவில் வைத்து நாம் அவற்றை முறையாகவும் தவறின்றிப் பயன்படுத்தவும் உதவுகிறது.

7. Key Scrambler Personal:

நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்ட்கள் மற்றும் பிற முக்கிய தகவல்களை, நாம் அறியாமலேயே நம் கம்ப்யூட்டர் களுக்குள் அமர்ந்து அறியும் புரோகிராம் களில் ஒரு வகை கீ லாக்கர் என்பதாகும். இவை நாம் அழுத்தும் கீகளைப் பதிவு செய்து பின் இதனைப் பதித்தவருக்குத் தரும். இன்டர்நெட் மையங்கள் மற்றும் அலுவலகங்களில் உள்ள பொது கம்ப்யூட்டர்களில் சிலர் இவற்றைப் பதிந்து வைத்துப் பயன்படுத்துவார்கள். ஏன், நம் கம்ப்யூட்டர்களில் பிறரை அனுமதித்தால், நம் அனுமதியில்லா மலேயே அவர்கள் இந்த வேவு பார்க்கும் வேலையை மெற்கொள்ளலாம். இத்தகைய கீ லாக்கர்கள் புரோகிராம்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது இந்த Key Scrambler Personal   புரோகிராம். இதனை டttணீண்://ச்ஞீஞீணிணண். https://addons. mozilla.org/enUS/firefox /addon/3383 என்ற முகவரியிலிருந்து பெறலாம்.

பிரவுசர் பாதுகாப்பு என்பது நாம் கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய ஒரு தடுப்பு வழியாகும். அப்போதுதான் நாம் நிம்மதியாக இணையத்தைப் பயன்படுத்த முடியும்.

நன்றி: தினமலர் கம்யூட்டர்மலர்

கைகளுக்குள் வரும் இன்டர்நெட்
உலக அளவில் இணைக்கப்பட்ட பல கம்ப்யூட்டர்களை நாம் இன்டர்நெட் என அழைக்கிறோம். ஆனால் இமைப்பொழுதில் எப்படி எங்கோ ஒரு மூலையில் உள்ள கம்ப்யூட்டர் சர்வரில் உள்ள தகவல்கள் நம் கம்ப்யூட்டரை வந்தடைகின்றன? இன்டர்நெட்டை முதலில் பயன்படுத்தும் அனைவரின் மனதிலும் இந்த சந்தேகம், வியப்பு எழுவது இயற்கையே. ஒரு சிலர் மேலும் துருவி ஆய்வு செய்து, நூல்களைப் படித்துத் தெரிந்து கொள்கின்றனர். சிலரோ அதுதான் இன்டர்நெட் என்று கிடைக்கும் தகவல்களைப் பற்றிய சுவராஸ்யத்தில் ஆழ்ந்து விடுகின்றனர். இங்கு அந்த இன்டர்நெட்டில் என்னதான் நடக்கிறது என்று பார்ப்போம். நம் கைகளுக்குள் உலகின் எங்கோ ஒரு மூலையில் உள்ள தகவல்கள், படங்கள், வீடியோக்கள் எப்படி நம் இல்லத்தில் ஒரு அறையில் உள்ள கம்ப்யூட்டருக்குள் வருகிறது என்று பார்க்கலாம்.

கம்ப்யூட்டரை இயக்கி, இன்டர்நெட் இணைப்பை உயிர்ப்பித்து, பிரவுசரின் அட்ரஸ் பாரில் ஓர் இணையதளத்தின் முகவரியை டைப் செய்து என்டர் தட்டுகிறீர்கள். பிரவுசர் எதுவாக வேண்டுமானாலும் – இன்டர் நெட்எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், சபாரி, குரோம், – என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதனை “கிளையண்ட்” என அழைக்கிறோம். தற்போதைக்கு “வாடிக்கையாளர்” என வைத்துக் கொள்வோம். இந்த வாடிக்கையாளர் நீங்கள் தேவை என்று சொன்ன, இணைய தளம் வேண்டும் என்று சொன்ன உங்கள் வேண்டுகோளை உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தின் சர்வருக்கு அனுப்புகிறது. அந்த சர்வர், தான் இணைக்கப்பட்டுள்ள இன்னொரு சர்வருக்கு அதனை அனுப்புகிறது. அந்த சர்வரும் அரசாங்க அலுவலகத்தில் ஒரு பைல் மேஜைக்கு மேஜை போகிற மாதிரி அப்படியேஅனுப்புகிறது. ஐ.எஸ்.பி. சர்வரிலிருந்து இந்த வேண்டுகோள் “வெரி ஹை ஸ்பீட் நெட்வொர்க்” என்னும் அதி வேக வழியில் செல்கிறது. இப்படியே சென்று நீங்கள் டைப் செய்த முகவரி உள்ள தளத்தை அடைகிறது. அதனை “உபசரிப்பவர்” என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். அந்த உபசரிக்கும் சர்வர் பின் நீங்கள் கேட்டுக் கொண்டபடி தன் தளத்தில் உள்ள தகவல்களை பாக்கெட் பாக்கெட்டாக உங்கள் வேண்டுகோள் பயணித்த அதே பாதையில் உங்கள் ஐ.எஸ்.பி. நிறுவனத்தின் சர்வருக்கு அனுப்புகிறது. நீங்கள் இணைப்பு பெற்றிருக்கும் அந்த நிறுவன சர்வர் பின் அதனை உங்கள் கம்ப்யூட்டருக்கு அனுப்புகிறது. இவ்வளவு தானா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் விஷயம் அவ்வளவு அல்ல. இதில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ள விஷயமும் உள்ளது.

நாம் ஓர் இணையதளத்தின் முகவரியை சொற்களில் அமைத்து அனுப்புகிறோம். இந்த சொற்கள் கம்ப்யூட்டருக்குத் தெரியாதே? எனவே தான் கம்ப்யூட்டர்கள் அறிந்து புரிந்து கொள்ளும் பாஷையில் மாற்றி அனுப்ப வேண்டியதுள்ளது. இதற்கு புரோட்டோகால் (Protocol)  என்னும் வழிமுறை உதவுகிறது. புரோட் டோகால் என்பது இரண்டு கம்ப்யூட்டர்கள் இடையே தகவல் பரிமாறிக் கொள்ள அமைக்கப்பட்ட சிஸ்டம் எனச் சொல்லலாம். இது டி.சி.பி., ஐ.பி., எச்.டி.டி.பி., எப்.டி.பி., எஸ்.எம்.டி.பி., மற்றும் வை–பி (TCPIP, HTTP, FTP, SMTP WiFi)  எனப் பலவகைப்படும். நாம் பொதுவாக டி.சி.பி – ஐ.பி. பயன்படுத்துவதால் அது குறித்து காண்போம்.

இன்டர்நெட்டில் இணைக்கப் படும் ஒவ்வோரு கம்ப்யூட்டருக்கும் ஒரு ஐ.பி. அட்ரஸ் தரப்படுகிறது. இது சொல்லில் இருக்காது. 0 விலிருந்து 255 வரையிலான எண்களின் கோர்வையாக இருக்கும். எடுத்துக்காட்டாக www.yahoo.com என்னும் தளம் உள்ள சர்வரின் எண் 82.248.113.14 ஆகும். இது இதன் நிலையான எண். உங்கள் கம்ப்யூட்டர் நெட்டில் இணையும்போது, உங்களுடைய ஐ.எஸ்.பி. உங்களுக்கு ஒரு முகவரியை எண்களில் ஒதுக்கும். ஆனால் அது நிலையானது அல்ல. நீங்கள் அப்போது இன்டர்நெட்டில் இருக்கும் வரையில் அந்த முகவரி உங்களுக்குச் சொந்தமானது. முடித்துவிட்டு மீண்டும் செல்கையில் மீண்டும் ஒரு முகவரி வழங்கப்படும். இதற்குக் காரணம் ஓர் ஐ.எஸ்.பி., ஒரே நேரத்தில் நூற்றுக் கணக்கான கம்ப்யூட்டர்களை நெட்டில் இணைக்க வேண்டியுள்ளதால், அவ்வப்போது எண்கள் தரப்படுகின்றன. இந்த எண்களின் கோவை நான்கு இலக்கங்களால் ஆன தொடராக ஒவ்வொரு எண்ணும் ஒரு புள்ளியால் பிரிக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக 123.467.87.23 என்றுகூட இருக்கலாம். இந்த எண்களிலான முகவரி முக்கியமானது. ஏனென்றால் இந்த முகவரியை வைத்துத்தான் இன்டர்நெட்டில் எந்த கம்ப்யூட்டர் வேண்டுகோளை வைத்தது; எந்த கம்ப்யூட்ட ரிலிருந்து தகவல் வர வேண்டியுள்ளது என்று தெரியவரும். டி.சி.பி. (Transmission Control Protocol) என்பது அனுப்பப்படும் தகவல்களைக் கையாளும் வழிமுறை. தகவல்களை சிறு சிறு பாக்கெட்களாகப் பிரித்துப் பின் மீண்டும் சேரும் இடத்தில் அவற்றை இணைத்து ஒழுங்காகத் தருவதே இந்த வழிமுறையின்ச் செயல்பாடு. ஐபி அட்ரஸ் எங்கிருந்து எங்கு இந்த தகவல்கள் போய்ச் சேர வேண்டும் என்பதை உறுதி செய்கிறது. எனவே இந்த இரண்டு வழிமுறைகளும் இணைந்து தகவல் பரிமாற்றத்தை உறுதி செய்கின்றன.

அதென்ன தகவல் பாக்கெட்?

இன்டர்நெட் என்பது “பாக்கெட் ஸ்விட்ச்டு நெட் வொர்க்’ என அழைக்கப் படுகிறது. இதற்கு மாறான நெட்வொர்க் “சர்க்யூட் ஸ்விட்ச்டு நெட்வொர்க்’ என அழைக்கப்படுகிறது. சர்க்யூட் ஸ்விட்ச்டு நெட்வொர்க்கில் இணைப்பு ஏற்படுத்துகையில் அந்த இணைப்பை மற்றவர்கள் பயன் படுத்த முடியாது. ஆனால் பாக்கெட் ஸ்விட்ச்டு நெட்வொர்க் கைப் பலர் பகிர்ந்து கொள்ள முடியும். ஒரே நேரத்தில் பலர் கேட்கும் தகவல்கள் பிரித்து அனுப்பப்படுகின்றன. இவை அதனதன் சேரும் இடத்தைச் சேர்ந்தவுடன் ஒன்றாக இணைக்கப்பட்டு கேட்பவரிடம் தரப்படுகின்றன. ஒவ்வொரு பாக்கெட் தகவலிலும் ஏறத்தாழ 1500 கேரக்டர்கள் கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு பாக்கெட்டிலும் ஹெடர்கள் அமைக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன. இந்த ஹெடர்களில் இந்த பாக்கெட்கள் எப்படி இணைக்கப்பட வேண்டும் என எழுதப்பட்டிருக்கும். அதற்கேற்ற வகையில் இவை இணைக்கப்படும். ஒரு எடுத்துககாட்டைப் பார்ப்போம். பழைய காலத்து அகலமான திறப்பு கொண்ட கடைகளில் அகலமான கதவு இருந்தால் அதனை திறந்து வைத்தால் அதிக இடம் பிடிக்கும் என்பதால் சிறு சிறு பலகைகளை, மேலும் கீழும் அவற்றைக் கொள்வதற்கான சிறிய பள்ளங்களை ஏற்படுத்தி செருகி பின் ஒரு பெரிய இரும்பு பாளத்தில் இணைத்து பூட்டு போடுவார்கள். காலையில் இதனைத் திறந்தவுடன் இந்த பலகைகளைக் கழற்றி ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி வைத்திடுவார்கள். மீண்டும் கடையைப் பூட்டுகையில் சரியாக வைப்பதற்காக கதவில் எண் அல்லது வேறு குறியீடுகளை அமைத்திருப்பார்கள். இதே போல் தான் சிறு சிறு பொட்டலங்களில் தகவல்கள் செலுத்தப்படுகின்றன. தேவை எனக் கேட்ட கம்ப்யூட்டரை அடைந்தவுடன் அவை ஒன்று சேர்க்கப்பட்டு தரப்படுகின்றன.

ஒவ்வொரு ஹெடரிலும் செக்சம் (Checksum)  எனப்படும் ஒரு எண் தரப்படும். இந்த எண் மூலம் வரவேண்டிய தகவல் சிந்தாமல் சிதறாமல் வந்து விட்டதா என்று அறியப்பட்டு இணைக்கப்படும். இந்த வேலையை டி.சி.பி. வழிமுறை செயல்படுத்துகிறது. இப்போது முதல் செயலுக்கு வருவோம். நீங்கள் சொற்களில் டைப் செய்திடும் முகவரி எந்த இடத்தில் எண்களாகக் கம்ப்யூட்டருக்கு ஏற்றபடி மாறுகிறது? நீங்கள் டைப் செய்த முகவரியை வைத்துக் கொண்டு உங்கள் ஐ.எஸ்.பி. சர்வர், டொமைன் நேம் சர்வர் (Domain Name Server DNS)  என்ற ஒன்றை நாடுகிறது. இந்த சர்வரே நீங்கள் தந்த முகவரியின் பெயரின் அடிப்படையில் தேடுதலைச் சுருக்கித் தேடி முகவரிக்கான எண் தொகுப்பை ஐ.எஸ்.பிக்கு வழங்குகிறது. பின் அந்த எண் முகவரியை அடிப்படையாகக் கொண்டு இன்டர்நெட்டில் தேடல் தொடங்கி குறிப்பிட்ட சர்வரை அடைகிறது. பின் முன்பு கூறியபடி தகவல்கள் கிடைக்கின்றன.

நன்றி: தினமலர் கம்ப்யூட்டர்மலர்

இன்டர்நெட் 40 – கடந்து வந்த மைல்கற்கள்
இன்றைய மனித இனத்தின் சிந்தனைப் போக்கை மாற்றியதில் இன்டர்நெட்டுக்கு முக்கிய பங்கு உண்டு என்றால் அது மிகையாகாது. தகவல் பரிமாற்றம், உருவாக்கி சேமித்தல் என்ற இரு பரிமாணங்களில் தினந்தோறும் புதிய மாற்றங்களைத் தந்து வரும் இந்த இன்றியமையாத சாதனம் உலகிற்கு வந்து 40 ஆண்டுகள் ஆகின்றன. இது உருவாகிக் கடந்து வந்த பாதையில் முக்கிய மாற்றங்கள் தந்த சில திருப்பங்களை இங்கு காணலாம்.1969: ஆர்பாநெட் என்ற இராணுவப் பணிகளுக்கான நெட் இணைப்பில், இரு கம்ப்யூட்டர்கள் (கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் இரு மையங்களில் இயங்கியவை) அர்த்தமில்லாத டேட்டாவினைத் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டு, பிற்காலத்தில் உலகின் வளர்ச்சிக்கான விதையை ஊன்றின. இது செப்டம்பர் 2 அன்று நடந்தது. 15 அடி நீளமுள்ள கேபிள் வழியாக இது சாத்தியமானது.

1972: ரா டாம்லின்சன் (Ray Tomlinson) என்பவர் நெட்வொர்க்கில் இமெயில் பயன்பாட்டினைக் கொண்டு வந்தார். இவர் தான் @ என்ற அடையாளத்தினை இமெயில் சிஸ்டத்தில் கொண்டு வந்தார்.

1973: ஆர்பாநெட் நெட்வொர்க்கிற்கு பிறநாடுகளில், இங்கிலாந்து மற்றும் நார்வே, நோட் என்னும் இணைந்த சிஸ்டங்கள் ஏற்படுத்தப்பட்டு இயங்கின.

1974: டி.சி.பி. (TCP)  என அழைக்கப்படும் இன்டர்நெட் புரோடோகால் வகையை Vint Cerf  மற்றும்  Bob Kahn என்ற இருவர் உருவாக்கிப் பயன்படுத்தினார்கள். இதன் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட நெட்வொர்க்குகள், ஒன்றை யொன்று இனம் கண்டு இயங்க முடிந்தது. இதுதான் முழுமையான இன்டர்நெட்டின் முதல் இயக்கமாகும். இதுவே பின்னர் கூஇகஐக என்ற இன்னொரு வகை இன்டர்நெட் வழிமுறைக்கு வழி தந்தது.

1983: டொமைன் நேம் எனப்படும் இணைய தள முகவரிகள் அமைக்கப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஓராண்டு கழித்து “.com, .edu .gov” என்ற பெயர்கள் வரையறை செய்யப்பட்டன.

1988: Morris என்ற வோர்ம் (வைரஸ்) முதன்முதலில் பரவி பல கம்ப்யூட்டர்களை முடக்கியது.

1989: இப்போது AOL என அழைக்கப்படும் (அமெரிக்கன் ஆன்லைன் சர்வீசஸ்) குவாண்டம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் நிறுவனம் அமெரிக்காவில் மேக் இன்டோஷ் மற்றும் ஆப்பிள் கம்ப்யூட்டர்களுக்கென ஆன்லைன் சர்விஸைத் தொடங்கியது. இதுவே 2002ல் ஏறத்தாழ 3 கோடி அமெரிக்கர்களை இணைக்கும் நெட்வொர்க்காக மாறியது.

1990: நியூக்ளியர் ஆய்வுக்கென இயங்கிய CERN ஐரோப்பிய அமைப்பிலிருந்தவாறே, தொலைதூரக் கட்டுப்பாட்டினை அமல்படுத்த டிம் பெர்னர்ஸ் லீ (Tim BernersLee)  என்பவர் வேர்ல்ட் வைட் வெப் (World Wide Web) என்னும் அமைப்பின உருவாக்கினார்.

1993: இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர் மார்க் ஆண்ட்ரீசன் (Marc Andreessen)  தன் சகாக்களுடன் இணைந்து மொசைக் (Mosai) என்னும் முதல் இன்டர்நெட் பிரவுசரை உருவாக்கினார். இதன் மூலம் டெக்ஸ்ட் மற்றும் கிராபிக்ஸை ஒரு பக்கத்தில் இணைத்து பார்க்க முடிந்தது. இதனால் இணையப் பக்கத்தினைத் திறந்து உலகிற்குக் காட்ட முடிந்தது.

1994: ஆண்ட்ரீசன் மற்றும் அவரின் சகாக்கள், வர்த்தக ரீதியாக ஒரு பிரவுசரை உருவாக்க முடிவெடுத்து, நிறுவனம் ஒன்றை அமைத்து நெட்ஸ்கேப் என்னும் முதல் பிரவுசரைக் கொண்டு வந்தனர்.

1995: அமேசான் டாட் காம் (Amazon.com) என்னும் இணைய தளம் தன் கதவுகளை உலக மக்களுக்கு இணைய தளம் வழியே திறந்தது.

1996: ஆன்லைனில் பாலியியல் செய்திகள் அறவே இருக்கக் கூடாது என சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் பின் நாளில் இது நீக்கப்பட்டது.

1998: ஸ்டான்போர்டு பல்கலையின் ஒட்டு மொத்த அறைகளில் கூகுள் நிறுவனத்திற்கான முயற்சி எடுக்கப்பட்டது. இணைய தளப் பெயர்கள் மற்றும் சார்ந்தவற்றை முடிவு செய்திட அமெரிக்க அரசு Internet Corporation for Assigned Names and Numbers அல்லது ICANN  என்னும் அமைப்பிற்கு உரிமை வழங்கியது. மைக்ரோசாப்ட், தன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரும் அளவற்ற சக்தியினால், நெட்ஸ்கேப் மற்றும் பிற நிறுவனங்களின் வர்த்தக உரிமையினைப் பறிக்கிறது என்று வழக்கு தொடரப்பட்டது.

1999: இசை பைல்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் வசதியை நாப்ஸ்டர் அளித்தது. இசை என்பது ரெகார்டுகள் மற்றும் டேப்கள் வழி மட்டுமே என்பது மாறத் தொடங்கியது. உலக அளவில் இன்டர்நெட் மக்கள் தொகை 25 கோடியைத் தாண்டியது.

2000: 1990 ஆம் ஆண்டிலிருந்து ஏற்பட்ட இணைய நிறுவனங்களின் உயர்நிலை சரிந்தது. தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் மவுசு குறையத் தொடங்கியது.

2002: உலக இணைய மக்கள் தொகை 50 கோடியைத் தாண்டியது.

2004: ஹார்ட்வேர்ட் பல்கலைக் கழகத்தினைச் சேர்ந்த Mark Zuckerberg என்பவர் பேஸ்புக் (Facebook)  தளத்தை உருவாக்கித் தந்தார்.

2005: வீடியோ பைல்களைப் பகிர்ந்து கொள்ள யு–ட்யூப் தளம் உருவானது.

2006: இன்டர்நெட் மக்கள் தொகை நூறு கோடியைத் தாண்டியது.

2007: ஆப்பிள் நிறுவனம் வயர்லெஸ் இன்டர்நெட் இணைப்பு வழங்கக் கூடிய ஐ–போனைத் தந்தது.

2008: இன்டர்நெட் மக்கள் தொகை 150 கோடியை எட்டியது. சீனாவின் இன்டர்நெட் பயன்படுத்துபவர் எண்ணிக்கை 25 கோடியாக உயர்ந்தது. இதன் மூலம் உலகில் அதிக இன்டர்நெட் பயன்படுத்துபவர்களைக் கொண்ட நாடாக, சீனா, அமெரிக்காவின் முதல் இடத்தைப் பிடித்தது. பிரவுசர்களில் பயர்பாக்ஸ் தன் இடத்தைத் தொடர்ந்து உறுதிப்படுத்தியது. பெரும்பாலான பயணிகள் விமான சேவை நிறுவனங்கள், தங்கள் விமானங்களில் இன்டர்நெட் சேவையினை வழங்கத் தொடங்கினர்.

2009: முழுவதும் இன்டர்நெட்டிலேயே வெளியிடப்படும் தினசரி செய்தித் தாள் Seattle PostIntelligencer வெளியானது.

நன்றி: தினமலர் கம்ப்யூட்டர் மலர்

விக்கிபீடியா 30 லட்சம் கட்டுரைகள்
என்சைக்ளோபீடியா – கலைக் களஞ்சியம்: உலகின் எந்த பொருள் குறித்தும் தேவையான தகவல்களைத் தொகுத்துத் தன்னிடத்தே கொண்டிருக்கும் தகவல் தொகுப்பு. அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்புகள் தொடங்கிய நாள் முதலாக ஏற்பட்ட கண்டுபிடிப்புகள் மற்றும் மாற்றங்களைத், தலைமுறை தலைமுறையாக மக்களுக்குத் தரும் அரிய பொக்கிஷம் இது. ஒவ்வொரு நாடும், இனமும் மக்களும் தங்கள் மொழியில் இதனைக் கொண்டிருந்தாலும், ஆங்கிலத்தில் உள்ள என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா தான் அனைத்திற்கும் வழிகாட்டியாகவும் முன்னோடியாகவும் அமைந்துள்ளது. இதே போல இணையத்தில் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் சிலருக்கு எழ, எண்ணம் முதிர்ந்து வளர்ச்சி பெற்று விக்கிபீடியா என்ற ஒரு அருமையான தகவல் தளம் நம் சந்ததிக்குக் கிடைத்துள்ளது. இந்த தளம் அண்மையில் ஒரு சாதனை மைல் கல்லை எட்டியுள்ளது. இந்த தளத்தின் கட்டுரைகளின் எண்ணிக்கை 30 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

உலகத்தின் அறிவுத் தேடல்களையும் அவற்றால் ஏற்பட்ட விளைவுகளையும் ஓர் இடத்தில் குவிக்க வேண்டும் என்ற எண்ணம் மிகப் பழமை வாய்ந்த அலெக்ஸாண்ட்ரியா நூலகத்தின் மூலம் ஏற்பட்டது. ஆனால் அச்சு வடிவில் இதனை ஒரு நூல் தொகுப்பில் வைக்க வேண்டும் என்ற எண்ணம் 18 ஆம் நூற்றாண்டில் தான் ஏற்பட்டது. அதன் முதிர்ச்சி தான் என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா.

இன்டர்நெட் வளரத் தொடங்கிய போது, பலர் இன்டர்நெட் என்சைக்ளோபீடியா திட்டங்கள் குறித்து சிந்திக்கத் தொடங்கினர். 1993ல் இன்டர்பீடியா (Interpedia) (http://en.wikipedia.org /wiki/Interpedia) என்று தொடங்கியதை இதன் முன்னோடி எனக் கூறலாம். இலவசமாக சாப்ட்வேர் வழங்கும் கோட்பாடினை முன்னுரைத்து அமல்படுத்திய ரிச்சார்ட் ஸ்டால்மேன் 1999ல் உலகளாவிய அளவில் கற்றுக் கொள்ள தொகுப்பாக என்சைக்ளோபீடியா ஒன்று இன்டர்நெட்டில் இருக்க வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டார்.

முதலில் நுபீடியா (Nupedia)  என்ற பெயரில் இன்டர்நெட்டில் ஓர் இலவச என்சைக்ளோபீடியா உருவாக்கப்பட்டது. இன்டர்நெட்டில் விளம்பரங்களைக் கையாண்டு வந்த பொமிஸ் (Bomis)  என்ற நிறுவம் இதனைத் தொடங்கியது. இதன் உரிமையாளர்கள் ஜிம்மி வேல்ஸ், டிம் ஷெல் மற்றும் மைக்கேல் டேவிஸ் ஆகியோர் இதற்கான முயற்சிகளைப் பல தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் எழுத்தாளர்களின் பங்களிப்புடன் கொண்டு வந்தனர். கன்னிங்காம் மற்றும் ஸ்டால்மேன் (Ward Cunningham and Richard Stallman)  என்ற இருவர் முதலில் இதனைத் தொடங்கினர்.

Nupedia தங்கள் பங்களிப்புடன் இதனை உருவாக்க எண்ணினார்கள். ஆனால் நுபெடியா துவண்டு போக விக்கிபீடியா உருவானது. 2001 ஆம் ஆண்டு வெப்சைட் உருவாக்குவதில் வல்லவரான ஜிம்மி வேல்ஸ் மற்றும் தத்துவ ஆசிரியரான லாரி சாஞ்சர் ஆகியோர் அடங்கிய குழுவினரால் விக்கிபீடியா தொடங்க விக்கிமீடியா பவுண்டேசன் நிறுவப்பட்டது.

2001 ஆம் ஆண்டில் ஜனவரி 15ல் விக்கிபீடியா (Wikipedia)  என்னும் ஆன்லைன் என்சைக்ளோபீடியா வெளியானது. விக்கி (Wiki) என்ற சொல்லுக்கு ஹவாய் (Hawaii)  மொழியில் விரைவு என்னும் பொருள் உண்டு. விரைவாக மக்களுக்கு அறிவு சார் தகவல்களைத் தருவதால் இதற்கு விக்கிபீடியா எனப்பெயரிட்டனர். பலமுறை இதன் தன்மை, தகவல்களின் நம்பகத்தன்மை குறித்த ஆய்வுகள் வெளியான போதும் தொடர்ந்து இது இணைய வாசகர்களிடையே நம்பிக்கயைப் பெற்று வருகிறது. 2004 முதல் 2007 வரையிலான காலத்தில் இதில் ஏற்பட்ட முன்னேற்றம் புயல் வேகத்தில் இருந்தது. இன்று பல மொழிகளிலும் இது உருவாகி உள்ளது. உலகின் 267 மொழிகளில் விக்கிபீடியா உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆகஸ்ட் 17ல் விக்கிபீடியா மிகச் சிறந்த வெற்றி இலக்கை அடைந் துள்ளது. இதில் உள்ள கட்டுரைகளின் எண்ணிக்கை 30 லட்சத்தைத் தொட்டது. இதன் பின்னணியில் ஆயிரக்கணக் கானவர்களின் அயரா உழைப்பு உள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில் இது நிறைவேறி உள்ளது. மனித இனத்தின் அறிவுசார் முன்னேற்றம் அனைத்தையும் கொண்டு வருவதே இந்த விக்கிபீடியாவின் இலக்காக, நோக்கமாக அறிவிக்கப்பட்டு அதனை அடைவதற்காகத் தொடர்ந்து உழைத்து வருகிறது விக்கிபீடியா.

விக்கிபீடியா தளத்தில் பதிந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் மேல். இவர்களால் ஒரு கோடியே 70 லட்சம் பக்கங்களில் தகவல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுரைகள் 32 கோடியே 60 லட்சம் முறை எடிட் செய்யப்பட்டுள்ளன.

முதல் மாதத்தில் விக்கிபீடியாவில் 12 கட்டுரைகளே இடம் பெற்றன. அப்போது இதற்கான சாப்ட்வேர் மற்றும் சர்வர் உதவியினை பொமிஸ் நிறுவனத்தின் ஊழியர் களே தந்தனர். இவ்வகையில் தொடங்கப்பட்ட இந்த திட்டம், இதன் பெயருக்கேற்ப மிக விரைவாக அனைத்து பிரிவுகளிலும் வளரத் தொடங்கியது. 2001 பிப்ரவரியில் இதன் கட்டுரைகள் 1000 ஐத் தாண்டின. தொடர்ந்த செப்டம்பர் மாதத்தில் இது 10,000 ஆக உயர்ந்தது. இவ்வாறாக முதல் ஆண்டின் முடிவில் இதன் கட்டுரைகள் 20 ஆயிரத்தைத் தாண்டி இருந்தன. இதுவே 2002 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 40 ஆயிரமாக முன்னேறியது.

தொடங்கிய ஆண்டிலேயே இந்த விக்கிபீடியா திட்டம் உலக மக்களைக் கவர்ந்தது. முதல் ஆண்டிலேயே வேறு மொழி களிலும் விக்கிபீடியா தொடங்கப் பட்டன. மார்ச் 16, 2001ல் deutsche.wikipedia.com  தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உலகின் முன்னணி மொழிகளில் விக்கிபீடியாக்கள் உருவாக்கப்பட்டன.  ஆங்கிலத்தை அடுத்து இரண்டாவதாக இடம் பெறுவது ஜெர்மன் மொழியில் உள்ள விக்கிபீடியா. இந்த கலைக் களஞ்சியத்தில் உள்ள கட்டுரைகளின் எண்ணிக்கை பத்து லட்சத்தை விரைவில் தாண்ட உள்ளது. இதில் அடுத்த நிலையில் பிரெஞ்சு மொழி விக்கிபீடியா உள்ளது. இதில் 8 லட்சம் கட்டுரைகள் உள்ளன. அடுத்ததாக ஜப்பானியம், போலிஷ், மற்றும் இத்தாலிய மொழிகளில் உள்ள விக்கிபீடியா தளங்கள் 6 லட்சத்திற்கும் மேலான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

மொத்த விக்கிபீடியா தளங் களையும் எடுத்துக் கொண் டால், ஆங்கிலம் அல்லாத வேறு மொழிகளில் தான் 75% கட்டுரைகள் உள்ளன.

யார் வேண்டுமானாலும், எந்த மொழியிலும், தங்களுக்குத் தெரிந்த பொருள் குறித்து கட்டுரை ஒன்றை எழுதி இதில் வெளியிடலாம். அல்லது ஏற்கனவே உள்ள கட்டுரைகளின் வரிகளை எடிட் செய்திடலாம். புதிய விவரங்கள் மற்றும் தகவல்கள் இருப்பின் அவற்றை இணைக்கலாம்.

விக்கிபீடியா தமிழ் மொழியிலும் உள்ளது. 2003 ஆம் ஆண்டில் செப்டம்பர் 30 அன்று தொடங்கப்பட்டது. தொடங்கியவர் தன் பெயரை வெளியிடவில்லை. “மனித மேம்பாடு’ என்ற கட்டுரையை இவர் வெளியிட்டார். ஆனால் அதன் பின் தமிழ் சமுதாயம் குறித்த ஒரு சில ஆங்கிலக் கட்டுரைகளே வந்தன. பின் நவம்பர் 2003ல் மயூரநாதன் என்பவர் இதன் முகப்பு பக்கம் முழுவதையும் தமிழில் கொண்டு வந்தார். இவரே பின்னர் தொடர்ந்து கட்டுரைகளை அளித்து வரத் தொடங்கினார். இன்றைய அளவில் மிக அதிகமாகக் கட்டுரைகளை எழுதியவர் இவரே. தமிழில் 2,760 கட்டுரைகளைத் தந்துள்ளார். இவர் இலங்கையில் பிறந்து வளைகுடா நாடு ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரைப் போலவே வெளிநாடுகளில் வாழும் பலர் தமிழ் விக்கிபீடியாவிற்குப் பங்களிப்பு செய்துள்ளனர். கனடாவிலிருந்து நிரோஜன், அமெரிக்கா மற்றும் இந்தியாவில் வாழும் பேராசிரியர் வி.கே. (188 கட்டுரைகள் – பெரும்பாலும் கணிதம், வானவியல் மற்றும் தத்துவம்) மற்றும் ஜெர்மனியிலிருந்து எழுதும் இலங்கைத் தமிழ்ப் பெண் சந்திரவதனா ஆகியோர் இதில் முக்கியமானவர்கள். தமிழ் நாட்டிலிருந்து தமிழ் விக்கிபீடியாவினை வளர்ப்பவர்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர்.

தமிழ் தளத்தைக் காண ta.wikipedia.org என்ற முகவரிக்குச் செல்லவும். அங்கு சென்று புதிய அக்கவுண்ட் ஒன்றைத் தொடங்கவும். கட்டுரைகளை எப்படி எழுதலாம் என்று அறிந்து உங்கள் பங்களிப்பினையும் வழங்கவும். இதுவரை இதில் பதிவு செய்தவர்களின் எண்ணிக் கை ஏறத்தாழ பத்தாயிரத்தைத் தொட உள்ளது. ஆனால் பங்களிப்பவர்கள் என்ன வோ மிகவும் குறைவு தான். தமிழ் விக்கிபீடியா வளர வேண்டும் என்பதில் ஆர்வமுள்ளவர்கள் பலர், ஆங்காங்கே அறிவிப்பு கொடுத்து இதற்கான பயிலரங் கங்களை இலவசமாக நடத்தி வருகின்றனர். இந்தப் பயிலரங்கங்களில் எப்படி விக்கிபீடி யாவில் கட்டுரை எழுதுவது, உள்ளீடு செய்து பதிவது எப்படி, படங்கள், அட்டவணைகளை உருவாக்கிப் பதிவது எப்படி என்ற விபரங்கள் சொல்லித் தரப்படுகின்றன. இதில் கலந்து கொண்டு பயன்பெற்று இந்த உலக அறிவுத் தேடலில் நீங்களும் உங்கள் தடத்தைப் பதிக்கலாம்.

நன்றி: தினமலர் கம்ப்யூட்டர் மலர்

பணம் பறிக்க தூண்டில் போடும் இமெயில்கள்
இமெயில்கள் வழியாகப் பணம் பறிக்க மொத்தமாக அனுப்பப்படும் மெயில்கள் குறித்துப் பல முறை தகவல்களைத் தந்துள்ளோம். சென்ற வாரம் தகவல் தொடர்பு குற்றங்களைக் கண்காணிக்கும் சென்னை சைபர் கிரைம் செல் அலுவலகத்திலிருந்து வந்த ஒரு கடிதம், இன்னும் இது போல பலர் ஏமாற்றமடைவதை உறுதிப் படுத்தியுள்ளது. ஏமாறும் பலரில், விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரே காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர். தாங்கள் ஏமாந்தது தெரிந்தால் தங்களுக்கு அவமானம் என்று கருதி பலர் வெளியே சொல்லாமலே இருந்துவிடுகின்றனர். பணம் பறிக்கத் தூண்டில் போடும் இமெயில்கள் இங்கு வகைப்படுத்தி பட்டியலிடப்பட்டுள்ளன. இன்டர்நெட் மற்றும் இமெயில்களைப் பயன்படுத்துவோர் கவனமாக இவற்றைத் தவிர்க்குமாறு காவல்துறையும் கேட்டுக் கொண்டுள்ளது. இன்னும் புதுவிதமான வழிகளில் யாருக்கேனும் மெயில்கள் வந்தாலோ அல்லது தாங்கள் ஏமாற்றப்பட்டாலோ அவர்கள் கம்ப்யூட்டர் மலர் முகவரிக்குத் தெரிவிக்கலாம். அவர்களின் அடையாளம் தெரிவிக்கப்படாமல் பொதுமக்களின் நன்மை கருதி அவை வெளியிடப்படும்.

1. வங்கிகளிலிருந்து (ICICI, HDFC, Axis, PNB, Citi Bank )  வந்தது போல இமெயில்கள் அனுப்பப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலும், உங்களுடைய கணக்கில் சில தொகை விடுபட்டிருப்பது போல உள்ளது. எனவே கீழே உள்ள லிங்க்கில் கிளிக் செய்து தகவல்களைத் தரவும் என்று ஒரு லிங்க் தரப்பட்டிருக்கும். அக்கவுண்ட் இல்லாதவர்களுக்கும் கூட இந்த மெயில் அனுப்பப்படும். லிங்க்கில் கிளிக் செய்தால் அந்த வங்கியின் லோகோ மற்றும் அதன் இணையதள முகப்பு பாணியில் அமைந்த ஓர் இணையதளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். பின் பக்கம் பக்கமாகச் சிறுகச் சிறுக தகவல்கள் வாங்கப்படும். உங்கள் பெயர், ஊர், முகவரி, வங்கி அக்கவுண்ட் எண் , இன்டர்நெட் அக்கவுண்ட் யூசர் நேம், பாஸ்வேர்ட்,ஆகியவை பெறப்படும். இவற்றைப் பெற்றவுடன் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து இன்டர்நெட் வழியாக நெட் பேங்கிங் வசதி மூலம் பணம் இன்னொரு அக்கவுண்ட்டிற்கு ட்ரான்ஸ்பர் செய்யப்படும். இது போல ட்ரான்ஸ்பர் செய்யப்படும் அக்கவுண்ட் உடனே அந்த வங்கியில் மூடப்படும். பெரும்பாலும் இவை பாதுகாப்பற்ற வங்கி அக்கவுண்ட் அல்லது வெளிநாட்டு வங்கி கிளை அக்கவுண்ட்டாக இருக்கும்.

2. மேலே சொன்னது போன்ற வங்கிகளில் இருந்து, கீழ்க்கண்ட தகவல்களை உறுதிப்படுத்த நீங்கள் பலமுறை கடிதம் அனுப்பியும் முன்வரவில்லை. இதுவே இறுதி கடிதம். இன்னும் 48 மணி நேரத்தில் சரியான தகவல்களைத் தந்து அப்டேட் செய்யா விட்டால் உங்கள் அக்கவுண்ட் சேவை நிறுத்தப்படும் என நம் கழுத்தின் மீது அமர்ந்து கொண்டு பேசுவது போன்ற தோரணையில் கடிதம் வரும். நாம் நம் அவசர வேலைகளில் இது உண்மை என நம்பி தகவல்களை அளித்துவிடுவோம். எந்த வங்கியும் இது போன்ற மெயில்களை அனுப்புவதில்லை. எனவே இது போல எந்த வங்கியின் பெயரில் மெயில் வந்தாலும் திறக்க வேண்டாம். ஆர்வத்தில் கூட இது என்னதான் பார்த்துவிடுவோமே என்று காரியத்தில் இறங்க வேண்டாம். பின் நம் பணத்திற்கு காரியம் செய்தவர்களாகிவிடுவோம்.

3. இதே போல Security Alert / Net Bank Alert  என சப்ஜெக்ட் தலைப்பிட்டு, வங்கியின் சர்வர் கிராஷ் ஆகி தற்போது சரிப்படுத்தப்பட்டதாகவும், உங்கள் அக்கவுண்ட் தகவல்களைச் சரி பார்க்க கீழே உள்ள லிங்க் கிளிக் செய்திடுமாறு கடிதங்கள் வரும். இவையும் ஏமாற்றுபவையே.

4. வங்கி முகவரியிட்டு எச்சரிக்கைக் கடிதம் போல தந்து ஏமாற்றுபவர்களும் இருக்கிறார்கள். எங்கள் வங்கியிலிருந்து வந்தது போல மெயில்கள் வரும்; நம்ப வேண்டாம். உண்மையான லிங்க் இதுதான். நீங்கள் கிளிக் செய்து உங்கள் தகவல்களைப் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள் என்று மெயில் வரும். கிளிக் செய்தால் மீண்டும் அதே கதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு உங்கள் பெர்சனல் தகவல்களை இழப்பீர்கள்.

5. இமெயில் பயன்படுத்தும் லட்சக்கணக்கான பேர்களில், உங்களையும் சேர்த்து பல நாடுகளில் ஒரு சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக, உங்களுக்கு வாழ்த்து தெரிவித்து, வெளிநாட்டுக் கார் ஒன்று பரிசாகத் தரப்போவதாக உங்களுக்கு மெயில் வரும். இதில் என்ன அக்கவுண்ட் நம்பரா தரப்போகிறோம் என்று அந்த மெயில் கூறும் இமெயில் முகவரிக்குக் கடிதம் எழுதினால், உங்களைப் போல அதிர்ஷ்டசாலி உலகிலேயே இல்லை என்ற ரேஞ்சுக்கு பல மெயில் கடிதங்கள் தொடர்ந்து வரும். அந்தக் கடிதங்களில் சின்ன சின்ன தகவல்கள் (சொந்த வீடு, மாத வருமானம், முகவரி, கார், இரு சக்கர வாகனம், கடன், பேங்க் அக்கவுண்ட் போன்றவை) சேகரிக்கப்படும். இவற்றை வைத்து நீங்கள் எவ்வளவு பணம் வரை இழக்க இருப்பீர்கள் என முடிவு செய்திடுவார்கள். பின் ஒரு நாளில், பரிசுக் காரின் மதிப்பு ரூ.89 லட்சம் என்றும் அதனை அனுப்புவதற்கான பணம் நீங்கள் முதலில் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டு ஒரு தொகையை நெட் பேங்கிங் மூலம் செலுத்த கேட்டுக் கொள்வார்கள். திட்டமிட்டு ஏமாற்றும் இது போன்ற மெயில்களை நம்ப வேண்டாம்.

6. இத்தகைய மோசடிகளில் மிகப் பழைய வகை மோசடி இன்றும் தொடர்கிறது. வெளிநாட்டில், பெரும்பாலும் ஆப்பிரிக்க நாடு ஒன்றில், ஒரு பெரும் பணக்காரர் கோடிக் கணக்கான டாலர் மதிப்புள்ள பணத்தை வங்கியில் விட்டு விட்டு இறந்துவிட்டதாகவும், அதனை மாற்றி எடுக்க நீங்கள் உதவ வேண்டும் எனவும் முதலில் மெயில் வரும். பதில் அளிக்க வேண்டிய இமெயில், போன் எண் எல்லாம் இருக்கும். நீங்கள் தொடர்பு கொண்டால் மிகவும் இரக்கத்துடனும் ஆசையைத் தூண்டும் விதமாகவும் பேசுவார்கள். பணத்தை உங்கள் அக்கவுண்ட்டில் செலுத்த அக்கவுண்ட் எண், பாஸ்வேர்டு கேட்கப்படும். அல்லது குறிப்பிட்ட தொகை சர்வீஸ் சார்ஜாக கட்டச் சொல்லி தொலைபேசி மற்றும் மெயில் வழியாகத் தொடர்ந்து பேசுவார்கள். குறைந்த பட்ச பணமாவது கட்டச் சொல்வார்கள். கட்டியவுடன் வந்தது தான் லாபம் என்று அப்படியே அமைதியாகிவிடுவார்கள். இதே போல லண்டனில் தனியாக வாரிசு இன்றி, சொந்தம் இன்றி வசிக்கும் பெண்மணி ஒருவர் எழுதுவதாக மெயில் வரும். தான் சாகப் போவதாகவும், தன் அளவிட முடியாத சொத்தினை இந்தியாவில் ஒருவருக்குக் கொடுத்து தர்ம காரியங்களுக்குப் பயன்படுத்த முடிவு செய்திருப்பதாக அதில் குறிப்பிடப் பட்டிருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பேரில் நீங்களும் ஒருவர் என்றும், உங்களை தத்து எடுத்த பின்னரே சொத்துக்களைத் தர முடியும் என்றும் தேன் தடவாத குறையாக மெயில் வரும். ஏமாந்தால் நாம் கஷ்டப்பட்டு சேர்த்த பணம் போய்விடும்.

7. வெளிநாட்டில் வேலை தருகிறேன் என்று சி.வி. வாங்கி பதிவதற்குப் பணம் கட்டு, உங்களுடைய, திறமை அபாரம், ஏன் இன்னும் இந்தியாவில் இருக்கிறீர்கள், விசாவிற்கான பணம் மட்டும் கட்டுங்கள், இமெயில் வழியே டாகுமெண்ட் தயார் செய்து கொடுங்கள், அதற்கு முன் எங்கள் நிறுவனத்தில் 500 டாலர் கட்டிப் பதிவு செய்து கொள்ளுங்கள் என்றெல்லாம் வரும் மெயில்களை நம்பாதீர்கள்.

8. நிறுவனத்தின் பெயர், லோகோ போட்டு மெயில் வரும். எங்கள் நிறுவனத்திற்கு உங்கள் நாட்டின் அருகே உள்ள நாடுகளிலிருந்து பணம் தொடர்ந்து வரும். அதனை உங்கள் அக்கவுண்ட்டிற்கு அனுப்பச் சொல்கிறோம். நீங்கள் மொத்தமாக எங்கள் அக்கவுண்ட்டிற்கு மாற்ற வேண்டும். இந்த வேலைக்கு மாதச் சம்பளமும் மாற்றும் பணத்திற்கேற்ப கமிஷனும், அலுவலகச் செலவிற்குப் பணமும், எங்களின் ரீஜனல் மேனேஜர் என்ற பதவியும் தருவதாக மெயில் வரும். உங்கள் பேங்க் அக்கவுண்ட் சார்ந்த தகவல்களைக் கொடுத்தால் எந்த நாட்டு வங்கிக்கோ உங்கள் பணம் நீங்கள் அறியாமலேயே மாற்றப்பட்டுவிடும். இது போன்ற ஏமாற்று வேலைகள் இந்தியாவில் மட்டுமல்ல; உலகின் அனைத்து நாடுகளிலும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இன்னும் என்னவெல்லாம் ஏமாற்று வேலைகள் உருவாகுமோ தெரிய வில்லை. அத்தனையும் தெரிந்து பின் விழிப்பாய் இருப்பதைவிட, உழைப்பின்றி வரும் பணத்தை எதிர்பார்க்காமல், அடுத்தவர் பணத்திற்கு முறையின்றி ஆசைப்படாமல் “இருப்பது போதும் ஈசனே’ என்று இருப்பது பாதுகாப்பல்லவா!

நன்றி: தினமலர் கம்ப்யூட்டர்மலர்

விண்டோஸ் 7ல் எக்ஸ்பி மோட் (XP Mode)
விண்டோஸ் எக்ஸ்பியின் தீவிர ரசிகர்களை இணைத்தால் ஒரு நாடே உருவாக்கலாம். அந்த அளவிற்கு எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றே போதும் என இருப்பவர்கள் கோடிக்கணக்கானோர். அதனாலேயே விண்டோஸ் விஸ்டா, எக்ஸ்பி பிரபலமான அளவிற்கு உயரவில்லை.இப்போது விண்டோஸ் 7 வர இருக்கிறது. மைக்ரோசாப்ட் அண்மையில் விண்டோஸ் எக்ஸ்பி ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தியைச் சொல்லி உள்ளது.விண்டோஸ் 7 தொகுப்பில் விண்டோஸ் எக்ஸ்பி மோட் வசதி தரப்படும். இதன் மூலம் விண்டோஸ் எக்ஸ்பியில் இயங்கி விண்டோஸ் 7ல் இயங்க மறுக்கும் புரோகிராம் ஒன்றினை விண்டோஸ் எக்ஸ்பி மோட் பெற்று இயக்க முடியும். இதன் மூலம் மக்களை விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்து விலகி விண்டோஸ் 7 தொகுப்பிற்கு வரச்சொல்கிறது மைக்ரோசாப்ட்.

ஆனால் இதில் ஒரு கெட்ட செய்தியையும் தந்துள்ளது. இந்த விண்டோஸ் எக்ஸ்பி மோட் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அனைத்து பதிப்புகளிலும் கிடைக்காது. புரபஷனல் மற்றும் அல்டிமேட் பதிப்புகளில் மட்டுமே கிடைக்கும். எனவே அதிகமானோர் வழக்கமாகப் பயன்படுத்தும் ஹோம் எடிஷன்களில் இது இருக்காது. மைக்ரோசாப்ட் இதனைக் கருத்தில் கொண்டு அனைத்து பதிப்புகளிலும் தரும் என்று எதிர்பார்க்கலாம்.

நன்றி: தினமலர் கம்ப்யூட்டர் மலர்